படலாற்றா பைதல் உழக்கும்என் க ண்
காதலர் இருவர் கருத் தொருமித்து
கடிமணம் புரிந்து களிப்புற் றிருக்க
கலையாய் வாழ கடமை உணர்வுடன்
அனுமதி கேட்க நிலைமை உணர்ந்தவள்
நடைமுறை உணர்ந்து விடை கொடுத்தாள்
தலைவன் அகன்றதுமே தலைவி வாடினாள்
அடைபட்டு நிற்காத அன்புமன துக்கம்
உடைந்திட்ட பாத்திரம் போன்று விண்டுபோனது
சிதைந்த சிற்பமாய் உருமாறிக் கிடந்தாள்
உயிர்த் தோழியவள் மனமது வருந்தி
கண்ணீர் வற்றியே சிவந்தது ஏனெக்கேட்டாள்
காதலைத் தந்த கண்களே கனலானது
கட்டுக் கடங்காத காட்டுத் தீயாய்
காமத்தீ உடலெங்கும் பரவி அனத்துதே
கட்டுக் கடங்கவியலாது கண்ணீரும் செந்நீரானதடி
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக