ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பணமா ,பாசமா ? --தேவி---2-11-1994

விடுமுறை நாளானதால் சோம்பலாக எழுந்து ,ஷேவிங் செய்தவாறே , அந்த விஷயத்தை சுவாரசியம் இல்லாதவனைப்போல் ஆரம்பித்தான் ,வசந்த் .
"சுசி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?" அறையை சுத்தம் செய்ய தொடங்கி இருந்தாள்சுசீலா "அப்படி என்ன விஷயம் ?'
"உங்கப்பா ...உங்க வீட்டை உன் தம்பியின் பேருக்கே எழுதப்போறாராம்.,நியாயம்தானே ?"
"இந்த விஷயம், எனக்கே த்தெரியாதே ,அப்பா இதை ஏன் மறைக்கணும் ?"
"பைத்தியம் ,இதிலே மறைக்க என்ன இருக்கிறது ?எழுதிட்டு சொல்லலாம்னு இருந்திருப்பார் .அதோட சொந்த தம்பிக்குத்தானே ,நீ வேண்டாம்னா சொல்லுவேன்னு நினைத்திருப்பார் நல்லவனைப்போல் நடித்தான் வசந்த் .அவனுக்கு மனைவி சுசீலாவின் குணம் அத்துப்படி ..ஒன்றை அவனே வேண்டும் என்று சொன்னால் அது வேண்டாம் என்பாள் .நியாயம் என்று இவன் சொன்னால் இல்லை அநியாயம் என்று எதிர்வாதம் செய்வாள் .குழந்தை பருவத்திலேயே அவளிடம் இந்தகுணம் ஊறி வளர்ந்திருந்தது .வசந்த் ,மாமனார் வீட்டில் தனக்கும் பங்கு வேண்டுமென்று
நினைத்தாலும் தன விருப்பத்தை வெளிப்படையாகச்சொன்னால் ,சுசீலா எதிர் மறையாகிவிடுவாள் என்பதால் மறைமுகமாக அவளை சீண்டினான் . அவன் நோக்கம் நிறைவேறியது .
"என்ன அநியாயம் இது ?அவ்வளவு பெரிய வீடு ,எனக்குப்பிறகு வந்த பயலுக்கு போறதா ?அப்பா என்னதான் நினைக்கிறார் ?பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டுன்னு தெரியாதா ?இல்லே நான் ஏமாளியா வாயை மூடிட்டுஇருப்பேன்னு நினைச்சுட்டாரா ?"
"அவ்ருக்குத்தெரியாமல்இல்லை சுசி உனக்குத்தான் சீர் ,செனத்தி எல்லாம் குறைவில்லாமல் செய்து கல்யாணம் செய்து விட்டோமே ,முரளிக்கு இந்த வீட்டையாவது எழுதி வைப்போமே என்று '
நினைத்திருப்பார் "நன்றாக ஸ்க்ரு கொடுத்தான் .
'ஏன் எனக்குமட்டும்தான் செலவு செய்தாரா ?தம்பி படிக்க ஆனா செலவும்,என் கல்யாண செலவை விட அதிகம் தெரியுமா ?அதென்ன மொட்டை கணக்கு ?விட்டை விற்றுவிட்டு அதில் பாதியை
எனக்கு கொடுக்கிறதுதானே நியாயம் ?இல்லே வீடு அவனுக்கு வேணுமின்னா எனக்குச்சேர வேண்டிய தொகையை கொடுத்திட வேண்டியதுதானே?''"
"நீ சொல்றது என்க்குஒன்றும் நியாயமாகத்தெரியலே.முரளி யாரு ,உன் தம்பிதானே ,அவன் நல்லைருந்துட்டு போகட்டுமே ,விட்டு கொடுத்துவிடு சுசீலா "
"அப்ப ,என்னை ஏமாளியா நிற்கச் சொல்றீங்களா ?நமக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கு .எதிர் காலத்தை நினைச்சா பயமா இருக்கு ,விலை வாசியோ குடும்பம் நடத்தவே முடியலே .ஏங்க
உங்களுக்கு யாரு சொன்னா ?'
"வீடு எழுதி வைக்கிற விஷயமா ?உங்க வக்கீலை வழியிலே பார்த்தேன் ,அவர்தான் சொன்னார் "
'"நீங்க ஒண்ணுமே சொல்லலையா?."
"இது உங்க குடும்ப விவகாரம் ,நான் ஏன் தலையிடனும்னு வந்துட்டேன் ".
"அப்பா அப்படி செஞ்சாருன்னா வேற வக்கீலை பிடிச்சு நோட்டீஸ் விடவேண்டியதுதான் "என்றாள்ஆங்காரமாக சுசி
"நோட்டீஸ் விட்டின்னா முரளி காம்ப்ரமைஸ் பண்ணிவிடுவான் .உனக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்துடறேன்னு .அப்ப நீ என்ன செய்ய முடியும் "விஷமத்தோடு சொன்னான் வசந்த்
"ஏங்க ,நான் என்ன முட்டாளா ?அவ்வளவு பெரிய வீட்டுக்கு இரண்டு லட்சம்தான் விலையா ?என்னைக்கு மார்கெட் விலை என்ன?அதைபோட்டுல்லஅதிலே பாதி தரணும்,சும்மா ஒப்புக்கு
எதையாவது கொடுத்தா ஏமாந்துடுவேனா என்ன ?பார்க்கிறேன் ஒருகை "."
"இதைப்பாரும்மா ,இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே .வீணா என் தலையை உருட்டாதீங்க .உன்னிஷ்டம் உன் உரிமையிலே நான் தலையிடமாட்டேன் .உனக்கு ஏதாவது உதவின்னா மட்டும்
என்கிட்டே சொல்லு அது புருஷனான.என்கடமை .தூபம் போட்டு ஆடவைத்தாகி விட்டது என்ற திருப்தியுடன் படுத்துவிட்டான் வசந்த் .இரவெல்லாம் சுசி தூங்கவில்லை .நிறைய யோ..
சித்தால் .
வக்கீல் நோட்டீஸ் பறந்தது மாணிக்கவேலருக்கு ..அதிர்ந்து போனார் மாணிக்கவேலர் .சுசியா இப்படி?கணக்கில்லாமல் செலவழித்து ,குறைவில்லாமல் எவ்வளவு செய்தார் .அந்த சுசிலா தன தம்பியிடம் கேவலம் சொத்துக்காக நோட்டீஸ் விட்டிருக்கால்
."என்னங்க ,ஏன் தபாலை பார்த்து இப்படி இடிஞ்சு போயிட்டீக ?என்னங்க எழுதி இருக்கு ?'
'மீனாஷி உன் பெண்ணுக்கு மனிதாபிமானமே கிடையாதா /?எத்தனை செய்தோம் எவ்வளவு பணம் இவளுக்காக செலவழித்திருப்போம் அதையெல்லாம் விட்டுவிட்டு தன தம்பிக்கு கிடைக்க இருக்கும் இந்த வீட்டிலும் பங்கு வேண்டுமாம் .நோட்டீஸ் விட்டிருக்கால் உன் பெண் ."
"அடிப்பாவி பணம்னா ரத்தபாசத்தைகூட மறந்துட்டாலே இவளுக்கு பங்கு கொடுக்காட்டி என்ன செய்வா ?கொர்ட்டுக்குப்போகட்டுமேஅது எப்படி நிற்கும் ?நீங்க சுயமா சம்பாதித்தது நீங்க இஷ்ட்டப்பட்டு யாருக்கு வேணாலும் கொடுக்கலாம் இல்லையா?'
"சபாஷ் மீனாட்சி உனக்குக்கூட சட்டம் தெரிஞ்சுருக்கே ,இருந்தாலும் உன் பெண்ணுக்கு இத்தனை ஆகாத்தியம் கூடாதுடி ''
'இவளுக்குத்தான் கோர்ட் படி ஏரத்தேரியுமா ? நம்ம பக்கம் நியாயம் இருக்கும்போது இவளால் என்ன செய்ய முடியும் /பார்த்து விடலாம் ''
தாயும் மகளும் கச்சை கட்டிக்கொள்ள வசந்த் தனக்கு பெரிய அமோஎன்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்றும் பட்டுக்கொல்லாதது மாதிரி வேடிக்கை பார்த்தான்
சட்டப்படி சுயார்ஜித சொத்து என்பதால் வீடு முரளிக்கே என தீர்ப்பானது .
தீர்ப்பு கேட்டு கடுப்பானாள் சுசிலா .ஆனால் முரளியோ அந்த வீட்டை தன அக்காள் சுசீலா பேருக்கே எழுதிக்கொடுக்க வக்கீலை நாடினான் ,''உனக்கென்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு ?அவள்
கோவிச்சா கொவிச்சுக்கட்டுமே .வராட்டி போகட்டுமே அதுக்காகநீஏன் நஷ்டப்படனும் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் ''தாண்டவம் ஆடினார் மாணிக்கவேலர் .
முரளி அமைதியாக ,ஆனால் ஆழமாகச்சொன்னான் '
'அப்பா இதை நீங்க எனக்கு கொடுதிட்டஈங்கன்ன அது என்னுடைய பொருளாகிவிடுகிறது என் பொருளை நான் யாருக்கு வேணுமானாலும் கொடுப்பேன் அதைத்தடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது இல்லையா ?
''அப்பா நான் உறவை மதிக்கிறவன் ,பாசத்தை போற்றுகிறவன் .கேவலம் பணத்துக்காக என் தமக்கை உறவை அறுத்துக்க நான் விரும்பலே அவள் சந்தோஷமே என் சந்தோசம் .உயிரில்லாத
இந்த கட்டிடத்தால் பாசத்தை இழக்க நான் விரும்பலே .வாழ்க்கையில் இனி இறக்கப்போகிரோமே தவிர பிறக்கப்போவதில்லை அப்படி உடன் பிறந்தவலான என் தமக்கையின் குழந்தைகளும் என் குழந்தைகளும் ஒற்றுமையா இருக்கிறதைத்தான் நான்விரும்பறேன் .""
நேருக்குநேர் வாக்குவாதம் செய்து உறவை கட்டோடு முறித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு வந்தவலான சுசீலா தன தம்பியின் பேச்சு காதில் விழுந்ததும் துசி போல் ஆகிப்போனால் .
"என்னை மன்னிச்சுடுடா உன் பெருந்தன்மைக்கு முன்னால நான் துரும்புக்குகூட பெற மாட்டேன் இந்த கட்டடத்தை விட உன் அன்பு எத்தனை பெருசுடா எனக்கு உன் அன்புதான் இனி வேணும் இந்த வீடே எனக்கு வேண்டாம் "நெகிழ்ந்தால்
இந்த எதிர்பாரா பாசப்போரின் திருப்பத்தால் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் நின்றனர் பெற்றோர் . வசந்த் கடுப்பாகினாலும் வெளிக்காட்டாமல் அசடு வழிய சிரித்து வைத்தான் /
தேவி 2-11- 1994

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக