தோகையெல்லாம் துப்பாக்கிகள்
மானென்பார் மயிலென்பார்
மங்கையுன் சமையலுக்கு
ஈடில்லை உலகில்
அடுப்படியில் அடக்கிவைப்பார்
அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
அணங்கிற்கு அழகென்பார்
உனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும்
வசந்த காலம் அந்த
மயக்கும் மொழியில்
மடங்கிக் கிடந்தது போதும்
வரம்பு கடந்த
கனிவில் விளையும் வேதனை
வில்லாளியின் கையில்
வளைந்து கொடுத்து
கைப்பாவையாய் கிடந்ததுபோதும்
பொறுத்தது போதும்
பொங்கி எழுந்திடு
விடியலைக் காண
விழித்து எழுப்பெண்ணே
தோள்களில் சுமக்கும்
சுமைகளைக் களைய
தோகையெல்லாம் துப்பாக்கி ஆக்கி
தடைகளைத் தாண்டி
சாதனைசெய்ய புறப்படுபெண்ணே
சரஸ்வதி ராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக