அஞ்சிறைத் தும்பிகண்டது மொழியுமோ
மஞ்சத்தில் தலைவன்
அஞ்சுகத் தலைவியைத்
துயத்துக் கிடக்க
காற்றில் அலைந்து
தலைவனின் முகத்தில்
படர கூந்தலின் மணம்
நாசியைத் தொட
அது இயற்கை மணமா
செயற்கையானதா எனத்தடுமாறித்
தெளியத் தும்பியை வினவினான்
தும்பியே தேன் உண்ணும் காமம் செப்பாது
உண்மையாக நீ கண்டதைச் சொல்
மயிலின் தோகைபோன்ற இவளின் கூந்தலைக்
காட்டிலும் நல்ல மணமுள்ளப் பூக்கள்
உள்ளனவா சொல் ? செண்பக ராசனின்
சிந்தையைக் குடைந்த ஐயத்தை நீக்க
அரசவை கூட்டி ஐயம் தீர்ப்போருக்கு
ஆயிரம்பொன் அறிவிக்க
தருமியை வைத்து திரு
விளையாடல் செய்ய
ஈசனும் பாடலை தருமியிடம்
தந்த அவைக்கு அனுப்ப
பாடலை தவறென்று நக்கீரர் சுட்ட
அனலாக் கொதித்து
அவைக்கு ஈசனே
சென்று தெளிவுபடுத்த
அஞ்சிறைத் தும்பி கண்டது மொழியுமோ
என்றே இறையனாரும் செப்பியதே பதிலாகும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக