வனவாசம்
சுற்றம் பெற்றவரை விட்டு
சுமைகளை சுமக்கிறோம்
சுமை தாங்கியாய்
செய்யும் வேலையில்
தவறி ழைத்தால்
செருப்படி போன்ற
பேச்சுக்களையும் தண்டனையும்
செம்மையாய் கேட்கத்
தோன்றும் கொடுமை
வெயிலில் கால்கள்
வெந்துதான் போகும்
அங்கே அடுப்பெரிய
இங்கே உடலே எரிகிரது
இரவானால் வெறுமையை
அழிக்க முடியாமல்
ஓய்ந்துதான் போகிறது மனது
அந்தரத்தில் தொங்கும்
அபூர்வ பட்சிபோல் துயரத்தில்
துவண்டுதான் போகிறோம்
தினமும் ஒட்டகப்பால் குடித்து
ஒவ்வாமையே வரும்
கால்வலி கைவலிக்குக்
கரிசனம் காட்ட யாருமில்லாக் கொடுமை
பெறும் பொருள் அயலகத்தில்
கூடுதலானாலும்
பெறும் இழப்புகளும் கூடுதல் தான்
இளமை இன்பம் எல்லாம் பறிபோய்
மீன் அழுவது நீருக்குள்
ஆண்அழுவது உள்ளுக்குள்
தொலைதூர பயணத்தால்
தொலைத்தது ஏராளம்
கால் வயிறு கஞ்சி குடித்தாலும்
தாய் நாட்டிற் கீடாகுமா ?
பிறந்த பிள்ளையை
அருகிலிருந்து பார்க்காமல்
பெத்த தாய் செத்ததிற்கும்
போகமுடியாமல்
வாட்ஸப்பிலேயே வருத்தம்
தெரிவித்து வாழும் வாழ்க்கை இருக்கே
அதைவிடவா பெரிது வனவாசம்
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம்
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லையே
சரஸ்வதிராசேந்திரன்
முனைவர்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
இரவானால் வெறுமையை
அழிக்க முடியாமல்
ஓய்ந்துதான் போகிறது மனது.
ஓயுமா என்ன...?
நினைத்தாலும் இயலாதே...?
பெறும் பொருள் அயலகத்தில்
கூடுதலானாலும்
பெறும் இழப்புகளும் கூடுதல் தான்
இளமை இன்பம் எல்லாம் பறிபோய்.
வலி...வலி...
வலி...
வலி...
வேறென்ன சொல்ல...?
மீன் அழுவது நீருக்குள்
ஆண்அழுவது உள்ளுக்குள்
தொலைதூர பயணத்தால்
தொலைத்தது ஏராளம்.
இந்த வரிகளுக்கு என்ன சொல்வது நான்...?
என்ன சொன்னாலும் அது - அயல் தேச வனவாசம் அனுபவிக்கும் ஒருவனின் உணர்வுக்கு ஈடாகாது.
பிறந்த பிள்ளையை
அருகிலிருந்து பார்க்காமல்
பெத்த தாய் செத்ததிற்கும்
போகமுடியாமல்
வாட்ஸப்பிலேயே வருத்தம்
தெரிவித்து வாழும் வாழ்க்கை இருக்கே
அதைவிடவா பெரிது வனவாசம்
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம்
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லையே.
வலி மிகுந்த வரிகள்...
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம் - அருமை...அருமை...இல்லையேல் இறக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வனவாச வலிகளை வார்த்தைகளில் வாரி இறைத்திருக்கிறீர்கள்.
வலி மிகுந்த சிறப்பு.
வாழ்த்துகள் கவிஞரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக