செவ்வாய், 29 மார்ச், 2016

பனிப்பூக்கள் மின்னிதழ்

பனிப்பூக்கள்
என் சென்ரியு கவிதையை வெளியிட்ட .’பனிப்பூக்கள்’
மின்னிதழுக்கு என் நன்றிகள்
சென்ரியு கவிதைகள்
Filed in இலக்கியம், கவிதை by admin on February 28, 2016
கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்
மொட்டில் புதைந்த மணம்போல்
மூடிக்கிடந்தது பெண்ணின்கருவறையில்
கரு
ப்ரூஃப் பார்க்கத் தவறியதால்
பிரம்மாவின் படைப்பில் அச்சுப்பிழை
ஊனம்
சரஸ்வதி ராசேந்திரன்

தமிழ்த்தேர்--தை மாத இதழ்


தைமாதம் ---தமிழ்த்தேர்
புதிது நன்றி தமிழ்த்தேர்
புதிது
தாய் சுரக்கும் தாய்ப்பால் புதிது
சேய் பேசும் மழலை புதிது
மேகம் கொட்டும் மழை நீர் புதிது
அகம் புறம் தூய்மை புதிது
சுனை சுரக்கும் நீர் புதிது
வினை இல்லாத மனிதன் புதிது
முட்டையிலிருந்து குஞ்சு வருவது புதிது
மொட்டில் புதைந்திருக்கும் மணம் புதிது
தன்னை உணரும் நிலை புதிது
பின்னர் அங்கே தோன்றும் ஜோதி புதிது
வஞ்சம் வளராத நெஞ்சம் புதிது
லஞ்சம் வாங்காத மனிதன் புதிது
தெய்வீகத் தமிழ் புதிது
திருப்புகழ் என்றும் புதிது
வியனுலகில் விஞ்ஞானம் புதிது
ஐயா அப்துல் கலாம் புதிதில் புதிது
மண்ணின் மணம் புதிது
என்னின் கவிதை என்றும் புதிது
சரஸ்வதி ராசேந்திரன்

நிலா முற்றம் விருது

சுமையில்லா பொழுதுகள்
உடல் நோக
இடை நோக
பெற்றெடுத்து
இரவு பகல்
இமைமூடாமல்
வளர்த்து
கடன் பட்டு உடன் பட்டு
படிக்கவைத்து
யார் யார் காலிலோ
வீழ்ந்து வேலையும்
வாங்கி கொடுத்து
அலைந்து திரிந்து பெண்
பார்த்து திருமணமும்
செய்யும் வரை சுமையில்லா
பொழதுகள்தான் என்றாலும்
கூசாமல் பெற்றவளை
முதியோர் இல்லத்தில்
விட்டாலும் அதையுமே
சுமையில்லா பொழுதாய்தான்
கழிக்கிறாள் பிள்ளையின்
நல்வாழ்வு கருதி ஒரு தாய்..

நிலா முற்றம் வழங்கிய விருது

நேற்றைய தலைப்பில் கவியெழுதி வெள்ளி முத்திரைப் பெறுகிறார் கவிதாயினி Saraswathi Rajendran
அவருக்கு நம் வாழ்த்துகள்
பசுமை
பசுமை பயிரோட்டம் ஒன்றே
பாரதத்தின் உயிரோட்டம் அன்று
காவிரித்தாய் ஓடும்தமிழ் நாட்டில்
கண்டதெல்லாம் பசுமை காட்சி
பூவிரித்து புகழ்விரித்த பசுமை ஆட்சி
பொன் விரித்த நெல்மணிகள் சாட்சி
நெல் விளைந்ததஞ்சை தரணியிலே
கல் முளைத்த கட்டிடஅணிகளே இன்று
தெருவோரம் இருந்திட்ட மரங்கள்
சருகாய் போய்விட்ட சோகங்கள்
சிறுமைகள் ஆடும் ஞாலத்தில் பசுமை
அருமையை உணர்ந்திட ஆளில்லை
வரும் இளைய தலைமுறைகளே!
ஒரு மனதோடு பசுமை புரட்சிசெய்து
பாரதத்தை பசுமையாய் ஆக்குங்கள்
சரஸ்வதி ராஜேந்திரன்
Muthupet Maran's photo.

வல்லமை புகைப்படபோட்டி-56

இயற்கையோடு மனிதன் கைகோத்திருந்த காலத்தில் வானம் பொய்க்கவில்லை; வளம் பிழைக்கவில்லை. இன்றோ, தன்னலத்திலேயே திளைத்துவிட்ட மனிதக்கூட்டம், அமுதனைய மழையையும், வெயிற்கேற்ற நிழலையும், வீசும் தென்றற்காற்றையும் இலவசமாய் அள்ளித்தந்த மரங்களின் அருமை மறந்து அவற்றை வெட்டிவீழ்த்திவிட்டு இயற்கைச்சீற்றங்களாலும், செயற்கை மாசுகளாலும் அல்லலுறுகின்றது.
நம் மண்ணின்மைந்தர்கள் வேரிலே வெந்நீரைப் பாய்ச்சிவிட்டு, இலையிலே பசுமைதேடும் மடமையை இனியேனும் ஒழித்து மரங்களை நடுதல் நன்று! என்று புகல்கின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்கின்றது!
செத்த பின்
சிந்து பாடும்
செந்தமிழ் நாட்டின்
வாரிசுகள் நாம்
காடுகளை
அழித்துவிட்டு
மழைக்குத் தவம்
இருக்கும்
மண்ணின் மைந்தர்கள் நாம்
வேரிலே
வெந்நீர் ஊற்றிவிட்டு
இலையிலே
பசுமைதேடும்
பகுத்தறிவுவாதிகள் நாம்
அவசியங்களை
அலட்சியப்படுத்திவிட்டு
அவதிப்படும்
அறிவிலிகள் நாம்
போதும் போதும்
இனியொரு விதி செய்வோம்
இந்த ஜெகத்தினை
வளமாக்குவோம்
வா நண்பா வா
காக்கின்ற இயற்கையைக் காப்போம்
கேடுசெய்யும் மாசுகளைத் தவிர்ப்போம்
மழைதரும் மரம் நிறைய வளர்ப்போம்
முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம்
அப்துல் கலாம் தோன்றிய நாடு
அவர் வகுத்த பாதையில் மரம் நடு!
”காடுவாழவும், கேடுவீழவும் இன்றே வளர்ப்போம் மரங்களை!” என முழங்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.----மேகலாராமமூர்த்தி

வியாழன், 3 மார்ச், 2016

தடாகம் கலை இலக்கியபோட்டி பிப்ரவரி

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி பெப்ரவரி மாதம் 2016
33 - எரியும் மனசு
எரியும் மனது (பிப்ரவரி மாதபோட்டி )
பொய்யையே பிழைப்போரைக் கண்டால்
மெய்யாகவே கொந்தளிக்கும் மனது

அர்த்தமற்ற அடாவடிகள்செய்வோரைகண்டால்
ரத்தம் சூடேறி கொதிக்கும் மனது
திருந்தும்மனமின்றி தீவிரவாதம்செய்பவரைக்கண்டல்
வருத்தம் மேவி எரியும் மனது
பண்பாடு அழிக்கும் நவ நாகரீகம்
கண்டால் குமுறி எரியும் மனது
ஊழல் செய்யும் தலைவன் இருந்தால்
அழுகுரல் காணும் நாடுஎரியும்
பலாத்காரம் கற்பழிப்பு செய்வோரை
கொலை செய்ய துடிக்கும் மனது
வாழ்கின்ற வாழ் நாட்களெல்லாம்
தாழ்வகற்றி வாழ்ந்தால்எரியும் மனது அடங்கும்
சரஸ்வதிராசேந்திரன்