வெள்ளி, 10 மார்ச், 2023

நப்பின்னை

 நப்பின்னை

கண்ணன்அவன்மணந்த
எண்மரில் முதலாவது
நப்பின்னை என்ற
நங்கை நீளாதேவி
கொஞ்சுதமிழ் பேச்சழகாள்
பிஞ்சுமுகம் கொண்டவள்
தாமரை போல் முகத்தாள்
நல்லமனம் கொண்ட
நப்பின்னை கும்பகன்மகள்
காலநேமியன் என்ற
கொடுமையான அரக்கனின்
ஏழு பிள்ளைகளும்
எருதுகளாய் மாறி
இடர்களைச் செய்து
கும்பகனின் பசுக்களை
கொடுந்துயர்செய்து அழிக்க
அரக்கரை அழிக்க
அதிரடியாக முரசறிவித்தான்
அரக்கர் எழுவரையும்
அழிப்பவருக்கே நப்பின்னை என
யாரும் முன்வராதபோது
கும்பகன் மைத்துனன்
நந்தகோபனிடம் தன்
நிலையைப் பகர
நந்தகோபன் தன்மகன்
கண்ணனையும் அழைத்துவர
எழுவரையும் எறித்தழித்து
எம்பெருமான் கண்ணன்
எழிலழகி நப்பினையை
ஏற்றான் துணைவியாக
சிலப்பதிகாரத்திலும் சீவகசிந்தாமணியிலும்
கலித்தொகையிலும்
நிரவிக் கிடக்கும்
நந்தகோபன் மருமகள்
நப்பின்னையின் புகழை
நாவார பாடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக