வெள்ளி, 10 மார்ச், 2023

தவளைகள்

 தவளைகள்

சூழ்ச்சிகள் தெரியாது
சுழற்சியும் கிடையாது
எக்கணமும் எப்போதும்
தன்னைப் பற்றிய
நினைவுகளுடன் வாழ்வது
உலகத்தில் உள்ளதை
உணராமல் வாழ்தல்
குளத்தில் கிணற்றில் கிடக்கும்
தவளை மனிதர்கள்
கிணற்றில் விழுந்த நிலவைப் பிடிக்க
தவ்வித் தவ்விக் குதித்துக் கிடந்தது
வானத்தில் வெள்ளை காக்கா பறக்கிறது
என்று சொன்னாலும் நம்பும் கூட்டமிது
தன் வட்டத்தை
விட்டுவெளியே வரவும்
போலி எது நிஜம் எது என்று
கண்டு கொள்ள முடியாத
மூட நம்பிக்கைகளில்
மூழ்கியே வெளிச்சத்தை காணமுடியா
கொடுமையின் உச்சம்
நிசப்த இரவுகளில்
நிம்மதியை குலைக்கும் வண்ணம்
குரல் கொடுத்து
இருப்பிடத்தைக் காட்டி
இரையாகும் அவலம் போல்
இடம்பொருள் தெரியாமல்
மிகையாய் பேசி
வலை சிக்கிக் கொள்ளும் மானாய்
சில கிணற்றுத் தவளைகளாய்
இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 2 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக