எனக்காக காத்திரு என் அன்பே
*****†****************************
என் ஒவ்வொரு
அணுவிலும் கலந்திருப்பது
உன் நினைவுகளே
நீ மெளனமாய் இருந்தாலும்
என் நெஞ்சு உன்
நெஞ்சோடு பேசுவதை
நிறுத்துவதில்லை
ஏனெனில்
சொற்கள் இன்றியே
நட்பில் எண்ணங்கள் அனைத்தும்
ஆசைகள் அனைத்தும்
எதிர்பார்ப்பின் அனைத்தும்
ஆரவாரமில்லாமல் மகிழ்ச்சியுடன்
பகிர்ந்து கொள்ளப்படுவதை
யார் அறிவார்
நீ இங்கிருந்து போய்விடு
எத்தனை இடர்
பட்டாலும் உன் நினைவு
என்னை உயிர்ப்பித்துக்
கொண்டேயிருக்கும்
பிரிவுகள் சேர்வதற்குத்தான்
உறவுகள் எதிர்த்தாலும்
ஊர் பழித்தாலும்
உணர்வுகள் உறங்காது
எனக்காக் காத்திரு என் அன்பே
சரஸ்வதிராசேந்திரன்
Kesavdhas
Saraswathi Rajendran
இயல்பான கவிதை!
சிறப்பாகச் சொல்கிறது சான்றுக் கவிதையின் கிடக்கையை!
சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக