வெள்ளி, 10 மார்ச், 2023

#குறள் :- உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது -(1185)

 #குறள்மொழி இன்பம் -101

#குறள் :- உவக்காண்எம் காதலர் செல்வார்
இவக்காண்என்
மேனி பசப்பூர் வது -(1185)
கண்கள் கலந்திட
காதல் விளைந்திட
கைகள் கோர்த்திட
மெய்யும் சேர்ந்தது
கூடிக் களித்தனர்
அன்புடன் கூடிய
ஆனந்த வாழ்க்கை
சுகமெலாம் சூழ
சுகித்துடன் வாழ
பொருளது தேட
பிரிந்து சென்றான்
தலைவனைப் பிரிந்த
தலைவியும் தவித்தாள்
துன்பங்கள் கோடி
தொடர்ந்தது பிரிவால்
தேயும் நிலவானாள்
தேகமும் பசலையால்
மெலிந்து வெளிற
கேளடி தோழி
காதல் உன்னி
உளமிழந்து போகிறேன்
உணர்ச்சிகள் அற்றே
பகலும் இருளாகுதே
பிரிவால் வாட்டமடையுதே
மீண்டும் திரும்பிட
மனமோ ஏங்கிடும்
திரும்பி வந்தால்
ஊடல் கொண்டே
கோபம் கொண்டாள்
வாலறு பல்லியாய்த்
துள்ளிமனமது பதறி
துவண்டாள் பசந்தாள்
காதலன் சென்றிட
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக