வெள்ளி, 10 மார்ச், 2023

எனைத்து நினைப்பினுங் காயார்

 'எனைத்து நினைப்பினுங் காயார்

அனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு''
உறவாய் இருந்தே நிறைவாய்த் திகழ்ந்தே
என்றும் கலந்து நிறைந்தே உறவாடியவன்
செல்வம் மிகுத்து சிறப்புடன் வாழ
மனைவியைப் பிரிந்து மன்னவன்
பயணப்பட்டான்
நாட்கள் கடக்க நாயகன் திரும்பவில்லை
விரகத்தாள் தலைவி வெம்பியே
விம்மினாள்
உணரும் உணர்வால் உண்மைத் தோழி
பணிகள் முடிந்ததும் பாவையுன்னை தேடிவருவான்
சுரந்திடும் அவனுள்ளும் உன்னினைவு திரும்பிடுவான்
விரைவில் கவலையற்க
தேற்றினாள் தோழி
கனவில் வந்து களவு செய்கிறார்
கன்னம் சிவக்க முத்தம் தருகிறார்
நினைக்கும் பொழுதெல்லாம்
சினம்காட்டாது‌ சிந்தையில்
வருவதால்
விடைபெற்றே ஓடும் விரக்திமன
துக்கம்
அடைபட்டு நிற்குமோ அன்புமன
ஊக்கம்
காணாத பாசம் அவர்தந்த‌ நேசம்
கலையாதது என்றும் பிரியாதது
வாராதிருப்பானோ என்னவன்
வாரி வழங்கிட
காதலர் செய்யும் சிறப்பே
இதுதானே என்றாள்
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 4 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக