சனி, 11 மார்ச், 2023

பதினென்கீழ் கணக்கு

 பதினென்கீழ் கணக்கு

சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை
அங்கம் பதினெட்டாய் அமைந்த நூல்கள்
வகுத்த வகுப்பில் தொகுத்த தொகுப்பு
மிகுந்த புலவர்கள் பலரின் உழைப்பில்
விதைத்த விதைப்பில் விளைந்த நூல்கள்
பிறப்பின் பயனாம் முழுமை அடைய
சிறப்பாய்த் தோன்றிய சிந்தனை ஊற்று
புதையலைப் போன்றப் பெட்டகம் நமக்கு
பெய்வது எல்லாம் பேரின்ப ஊற்று
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினென்மேல்கணக்கு
பதினென்கீழ் கணக்கு நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
கார்வழி நாற்பது களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது திணைமலை நூற்றைம்பது
திரிகடுகம் திருக்குறள் ஆசாரக்கோவை முதுமொழிக்காஞ்சி
சிறுபஞ்சமூலம் ஏலாதி இன்னிலை ஆகும்
பனிரெண்டு நூல்கள் நீதிவழி நிற்குது
அகத்திணை சார்ந்த ஐந்தும் அமுதம்
புறத்திணைச் சார்ந்த நூல் பிரிதொன்று
சிறந்து விளங்கிடும் சீர்திருத்த நூல்கள்
உலகை நிறைக்கும் உயரிய நூல்கள்
கலையாத கனவின் காலச் சுவடுகள்
பல்லாண்டு பலகாலம் பெருமையுடன் விளங்கும்
பதினென் கீழ்கணக்கு வாய்த்ததோர் சொத்தே
சரஸ்வதிராசேந்திரன்
Kesavdas
Saraswathi Rajendran இருபத்து நான்கு வரிகள்!
இருபத்து நான்கின் சிறப்பு யாவரும் அறிவோம்!
அசோகச் சக்கரம் இருபத்து நான்கு கால்கள்!
காயத்திரி மந்திரம் இருபத்து நான்கு எழுத்துக்கள்!
காயத்திரி ராமாயணம் இருபத்து நான்கு வரிகள்
வால்மீகி இராமாயணம் இருபத்து நான்கு ஆயிரம் பாடல்கள்!
ஒரு நாள் இருபத்து நான்கு மணி நேரம்!
இருபத்து நான்கால் சிறக்கிறது இந்தக் கவிதையும்!
இந்தப் பாடலில் ஓர் ஒழுகு சந்தம் இருக்கிறது!
வாசிக்கும்போது அது வயப்படுகிறது!
அங்கம் பதினெட்டாய் அமைந்த நூல்கள்
வகுத்த வகுப்பில் தொகுத்த நூல்கள்
மிகுந்த புலவர்கள் பலரின் உழைப்பில்
விதைத்த விதைப்பில் விளைந்த நூல்கள்
இப்பொழுது சந்தம் புலப்பட்டிருக்கும்!
கவிதை அதனால் சிறப்பு!
வாழ்த்துக்கள் கவிஞரே
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக