வாழ்க்கை தத்துவம்
முயன்றால் எதுவும்
முடியாதது இல்லை//
செடியாக மண்டி
செழித்திட வாழ்வில்//
துடியாக உழைத்திடு
துவளுதல் வேண்டாம்//
பொழுதுகள் வீணடித்தால்
பூமியில் வெற்றியில்லை//
முழுமை பயிற்சியே
முதன்மையைத் தரும்
தாழ்வுகள் இன்றி
வாழ்வு சிறக்கும்
தயக்கம் தகர்த்திடு
மயக்கம் அகலும்
தெளிவு பிறந்தால்
கதவு திறக்கும்
சாதிமத பேதம்
வாதிட்டு வாழாதே
சமத்துவ வாழ்வால்
சகலமும் சிறக்கும்
நிறைந்த உழைப்பால்
நெடிதுயரக் காண்பாய்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக