வெள்ளி, 10 மார்ச், 2023

பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை

 பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை

மாயுமென் மாயா உயிர்.
பொருளை ஈட்ட பிரிந்தான் தலைவன்
பருவம் படுத்தியது பிரிவால் தலைவியை
கண்ணியம் மிக்கதோர் காதல் தலைவன்
எண்ணியதை எய்த இலக்குடன் சென்றான்
காலைப் பொழுது கடமையில் சென்றிட
மாலைப் பொழுதோ மயக்கம் தருகிறது
பாயில் படுத்தால் தீயாய் உறுத்துது
காதல்நோயால் உடலதும் கன்றிப் போகுது
பிரிந்த போது போகாத என்னுயிர்
மருட்டும் இந்த மாலைப் பொழுதில்
கருக்கலைந்து போவது போலே உடல்
உருக்குலைந்து போகுதே வேதனைத் தீயால்
மாலை வந்ததும் மன்மதன் கொலைசெய்கிறான்
மன்னவன் தன்னை நினைத்து உயிர்தரிக்கிறேன்
ஈட்டும் பொருளா பெரிது என்னைவிட
கூட்டும் போருளெல்லாம் இன்பங்கள் ஆகுமோ
ஆட்டிப் படைக்கின்றது அந்திப் பொழுது
ஈட்டிய பொருள்போதும் கூட்டிவா எந்தலைவனை
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 3 people and text that says 'பைந்தமிழ்ப் பூம்புனல் குறள்மொழி இன்பம். 130 மாயும் என் மாயா உயிர் நமபுால் என மாயும்என்மாயாஉயிர் மாயா 28.2 நிறுவனர் கவிஞர் மீராஸ்ரீ நடுவர் கவிஞர் கிருஷ் அபி வெற்றியாளர்கவிஞூர் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக