பாடல்
~~~~~~~
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்
ஆயரி நெடுங்கண் கலிழச்
திரைகட லோடி திரவியம் தேடி
வினைசெயல் முடித்து விரைவில் வருவேன்
உயர்ந்துடன் நின்று நியதியுடன் வாழ்ந்திட
தலைவன் மொழிந்திட தலைவியின் நிலையை
தோழி தன்மையாய் உரைத்தனள் தலைவனிடம்
இல்லற மாற்றும் பொருட்டு நீர்
பொருள்தேடிச் செலல் ஏற்புடைத்தே எனினும்
அகன்று நீ போனால் உன் தலைவியின்
இன்னுயிர் தங்குமோ பிரிதலை ஏற்குமோ ?
பசலை நோயில் இடை நழுவுமாடை
பஞ்சுத் தலயணை தீயாய் வேகும்
கைவளை சோர்ந்து பூமியில் விழும்
கண்களும் துஞ்சாது கருவளையம்தோன்றும்
இறையை வணங்கி இயல்வனச் செய்யின்
முறையாய் அமையும் முழுமையாய் வாழ்க்கை
கண்ணழகி யிவளின் கயல் விழியிரண்டும்
கண்ணீர் சொரியும் நிலையைக் காண்பீரோ?
குன்றக் குரவன் முருகனை வேண்டி
மன்றாடி யிரந்து மகவாய்ப் பெற்று
அன்றாடம் அருகிருந்து பேணி வளர்த்தவள் நீ
சென்று திரும்பும்வர
செருமி உருகுமவளை
கன்றிட வைப்பது முறையோ இது தகுமோ ?
எழிலார்ந்த இன்பம் இங்கிருக்க நீ
பழி கொள்ள வேண்டாம் தலைவா
பணம் பெரிதல்ல பாசமே பெரிதென
பயணம் தவிர்த்து பாவையைச் சேர்வாயாக
கொண்டவளை அருகிருந்து
கண்கலங்காமல காப்பதுன்
கடமையில்லையா ?
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக