வெள்ளி, 10 மார்ச், 2023

யாயாகியளே** **மாஅயோளே**

 யாயாகியளே**

**மாஅயோளே**
தரத்தை இழந்த தலைவன் ஒருவன்
பரத்தையிற் பிரிந்தான் பழகிக் களித்தே
பரத்தையரோ பணம்தான் பெரிதென கொள்கையுடையோர்
சிரத்தையாய் நின்று சிந்தித்துப் பார்த்தான்
அழகிய மனையாள் அருகினில் இருக்க
பழுதாய் நின்று பழகினான் பரத்தையரிடம்
வழி தவறி வாழ்க்கைத் தவறிட
பழியொடு வந்தவன் பயந்து
பாதை மாறிப் பத்தினி வாசல்
மிதித்து
தோழியிடம் சென்று துயரமாய் நின்றான்
பழியைத் துடைக்கும் வழியைக் கேட்டான்
தலைமகள் நிலையை தோழியும் இயம்பிட
தன்இல்லாள் நிலையெண்ணி தலைவனும் நெகிழ்ந்தான்
தலைவனுனை காணாது தவித்தாள் துவண்டாள்
கலையிழந்து மதி முகம் சோர்ந்தாள்
மலையென உனை நம்பியிருந்தவள் மருண்டாள்
ஆட்டிப் படைத்த அவலத்தை என்னசொல்ல
உன்னையன்றிவேறு யொருவனிடம் தன்னைக் கொடுத்தால்
பின்னை நீயும் அவளை ஏற்பாயா
தூசி படர்ந்ததை வீசிஎறிவாய்
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியா
கற்பினில் சிறந்தவள் கண்ணியம் கொண்டவள்
பொறுப்புடன் உன்னை ஏற்கவும் துணிந்தாள்
கயமையை மறந்து கருணையைப் பொழிந்தாள்
உயரவே செய்திடும் ஒப்பரியவள் பண்பே
தோழியின் வார்த்தை தொட்டிட நெஞ்சை
துணையைத் தேடி சென்றான் தலைவன்
கற்புடை பெண்ணவள் கட்டிய
கணவனின் குறை களைந்து
கருணையுட னேற்று
கயமனாரின சங்கப் பாடலில்
பெருமையுற்றாள்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.
Boost this post to reach up to 6 more people if you

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக