வெள்ளி, 10 மார்ச், 2023

நாவினிக்கும் இன்பத் தமிழே

 நாவினிக்கும் இன்பத் தமிழே

*************************************************
அழகுதமிழ் கொஞ்சும் உண்மை என்றும்
பழகுதமிழ் சொற்கள் நாவில் இனிமை
முழுமையாய் நின்று முதன்மை உணர்த்தும்
செழுமை கொண்டது செம்மொழி ஒன்றே
முத்தமிழ் செம்மொழி முன்னோர் முதுமொழி
எத்திசையும் வாழ்த்தும் எழிலான எம்மொழி
சுகத்தினை அளிக்கும் சுந்தர தமிழுக்கு
செகத்தினில் இணையான மொழிகள் இல்லை
ஆதியில் ஒளவை ஆக்கிய நீதிநூல்
ஓதிட இனிக்கும் ஓங்குபுகழ் மொழியே
கம்பன் படைத்த காவியத் தமிழ்
தனித்து இயங்கும் மொழி தமிழ்மொழியே
அழகு தமிழை அகத்தில் வைப்போம்
உயிரான தமிழை உள்ளத்தில் கொள்வோம்
வளமை பொருந்திய நமது தாய்மொழிக்கு
இன்னும்பல இலக்கிய அணிகலன்களை சூட்டிமகிழ்வோம்
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of ‎text that says '‎ب தமிழ்ச் ល៦ சேவை தமிழோடு இணைவோம் 3 தலைப்பு:- நாளினிக்கும் இன்பத் தமிழே வெற்றியாளர நாள:- 14.05.2022 கவிஞர் ஞர் சரஸ்வதி சரஸ்வதிராசேந்திரன் አይ/ክመክዶዚት ទេ3សិរាល தெவ க-அததியாான் CH‎'‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக