குறள் மொழி இன்பம் 96
***********************
யாம் வேண்டும் கௌவை
கன்னி எனையும் காளை அவனையும்
களைப்புறத் தந்திடா கனிவுடன் அளவாய்
இன்பமழை பெய்து இதயசுகம் தந்தது
இடையிடையே இடைஞ்சலும் வந்து தடைபட
இளமை வேகம் இதயத்தைத் தாக்க
தறிபோல் மனமாடி தவித்துப் போனது
அரிதாய் அதுவும் கூடிடக் கிடைத்தது
விழைந்தது மனமும் விரகத்தைத் தீர்க்க
அழகனை எண்ணி அவனுடன் சென்றிட
ஆர்ப்பரித்தாலும் அடக்கியது நாணமும் மனமும்
இருவரின் ரகசியம் இதழ்வழி கசிய
துடுக்காய் உரைத்தார் தூரத்தில் உற்றார்
அடஞ்செயும் மனமும் அதனால் அடங்கிடுமா
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ?
உழலும் துன்பம் உடனடி நீங்கும்
உலவும் கெளவையே உதவும் எனக்கு
பயமெலாம் நீக்கி பயனளிக்கச் செய்யும்தோழி
அயர்வுறச் செய்யா அபயகரம் நீட்டுவர்
துயரெலாம் தீர்க்கும் ஊராரின் அலர்பேச்சு
என்னவர் என்னை மணப்பார் இனிதே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக