சகுந்தலை
சந்திர வம்சத்தில் புருவிற்கு பிறகு/
வந்தான் கௌசிகன் ஆட்சி பீடத்திற்கு
சிந்தனை வயப்பட்டான் வசிட்டர்போல் தவமியற்ற
மேனகையின் அழகில் தன்னிலை மறந்தான்
மோகத்தில் மூழ்கி முத்தெடுத்தான் மகளை
தந்தையும் தாயும் பெற்ற மகளை
தனியாக நதிக்கரை ஓரம் விட்டுசெல்ல
துணையாக நின்றன சாகுந்தலப் பறவைகள்
கன்ம மகரிஷி கருணையுடன் மழலையை
கண்ணாகப் போற்றி வளர்த்திட்டார் சிரத்தையுடன்
பேரழகியாய் சகுந்தலை வலம் வந்தாள்
பெளரவ மன்னன் துஷ்யந்தன் கண்டான்
கன்வரின் சம்மதத்துடன் மணம் புரிந்தான்
கணையாழி தந்து சென்றான் துஷ்யந்தன்
கணவனின் நினைவில் அகமகிழ்ந்து நின்றவள்
துர்வாச முனிவரை கவனிக்காததால் கோபமுற்ற
துர்வாசர் சாபம் இட்டார் கட்டியவள்
நினைவை துஷ்யந்தன் இழக்க துயரத்தில்
கணவன் கொடுத்த கணையாழியும் தொலைய
காட்டில் அலைந்தாள் கண் கலங்கியே
காட்டு வளத்தை காணவந்த துஷ்யந்தன்
கண்ட பரதனை யாரென கேட்க
பரதன் தந்தையின் பேரைச் சொல்ல
விவரம் புரியாது விழித்தான் துஷ்யந்தன்
கன்வர் வந்து உண்மையைச் சொல்ல
சகுந்தலை பரதனுடன் அரண்மனை சென்றான்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran தங்கு தடையில்லா சொற்மடையால் சகுந்தலை கதை சொல்லப் பட்டிருக்கிறது!
மிகச் சிறப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக