வெள்ளி, 31 ஜூலை, 2015

வருவாய் அன்னை அபிராமி வல்லமை -ஜூலை 16

வருவாய் அன்னை அபிராமி
திருக்கடை             ஊரின்              அபிராமி
திருவருள்              தந்து                 அருளிடு நீ
பட்டருக்கு             நிலவை            காட்டிடவே
தோட்டை              கழற்றி                எறிந்து நீ
பக்தரின்                உயிரை              காத்தாயே  இந்த
பக்தையின்          குரலுக்கும்           செவிசாயி
பொய்கள்              நிறைந்த             உலகினிலே
மெய்கள்               ஜெயித்திட         அருளிடு நீ
சூது கள்                 சூழ்ச்சிகள்         வஞ்சனைகள் 
ஏதுமில்லா            நல்மனதை        தந்திடு  நீ
தொழுதேன்            நானே                தினந்தோறும்
 தோற்றம்              நீ இன்னும்          தரவில்லை
அம்மா                  உனைத்தான்      அழைத்தேனே
சும்மா                   இருப்பதோ          உன் நீதி  ?
வருவாய்              அன்னை               அபிராமி
அருள்விழி            காட்டி                   நலம்தருவாய்

சரஸ்வதிராசேந்திரன்

Jul 16


to vallamai

திங்கள், 6 ஜூலை, 2015

saraswathirajendran wrote on 4 July, 2015, 12:56
முகமூடி இல்லா முகங்கள்
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் அதனால்
முகத்தை மறைக்கும்  அணிகலன்
முகமூடி  
இதை கோமாளிகள்
அணிந்து  சிரிக்க வைப்பர்
ஆனால் இன்று
ஆண் பெண் வித்தியாசமில்லாமல்
வீட்டிலும் நாட்டிலும்
பொய் முகஙகள் காட்டி 
வளைய வருகிறார்கள் 
சிரித்து கெடுப்பவர் சிலர்
நடித்து கெடுப்பவர் சிலர்
கடன் கேட்க ஒருமுகம்
கழிக்க ப் பார்ப்பது ஒருமுகம்
கோட்டையை பிடிக்க 
ஓட்டைவாங்க   என 
முகமூடி இல்லாத மனிதரெங்கே
இருக்கிறார் சொல்லுங்கள்
  பூ கொடுப்பவனே
தீயையும் வைக்கிறான்
இதில் யாரை  குறை சொல்ல
விதிதானே பழி செய்யுது
வாழ்க்கை எதுவென்று புரியாமல் 
வாய் விட்டு அழவும்  வசதியிருக்கு
இந்த முகமூடியில்
இல்லை ஒருவருக்கும் மனசாட்சி
எல்லாம் இன்று வேஷமாச்சு 
முகமூடி அணிந்த
எல்லோருமே கோமாளிகள் ஆனோம்

சரஸ்வதி ராசேந்திரன்

புதன், 1 ஜூலை, 2015

முத்துகமலம் சிறுவர் பகுதி கவிதை --குழந்தைகளே 1-7-2015

குழந்தைகளே...!


ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றுமில்லாததற்கு செய்யாதே முரண்டு

இரண்டும் இரண்டும் நாலு
இருக்கணும் வாழ்க்கையில் சவாலு

மூன்றும் மூன்றும் ஆறு
முன்னேறிப் படைக்கணும் வரலாறு

நான்கும் நான்கும் எட்டு
நல்லது அல்லாததை விரட்டு

ஐந்தும் ஐந்தும் பத்து
ஐம்புலன் அடக்கினால் இல்லை ஆபத்து

ஆறும் ஆறும் பனிரெண்டு
ஆறுவது சினம் எனப் பழகிவிடு

ஏழும் ஏழும் பதினான்கு
ஏழைக்கு என்றும் மனமிரங்கு

எட்டும் எட்டும் பதினாறு
எட்டும் வரையில் எதிலும் போராடு

ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு
உண்பதில் வாயை நீ கட்டு

பத்தும் பத்தும் இருபது
தித்திக்கும் திருப்புகழ் தினமோது

- சரஸ்வதி ராசேந்திரன்.

*****

தடாடகம் கலை இலக்கியபோட்டி ஜூன் மாதபோட்டி --இயற்கையின் எழில்


ஜூன் மாத போட்டிக் கவிதை!
25- இயற்கையின் எழில்
தஞ்சமென்று எண்ணியே தினம் சோலையடைவேன்
மஞ்சமென்று எண்ணியே புல்தரை யில் படுப்பேன்
மாமரத்து சோலைதனில் தென்றல் வரும்
மானினங்கள் மிரட்சி யுடன் ஓடியே விடும்
வெண்ணில வும் குளிர்ச் சியுடன் அங்கேவரும்
வெண்மலரில் விந்தையுடன் காதல் புரியும்
வண்டினங்கள் மலர்களிலே தேன் எடுத்து
வயிறார உண்டுவிட்டு செல்லும் மலரடுத்து
அருவிகள் இசைபாட அல்லியும் நடம்புரிவாள்
அன்புடனே தென்றல் வந்துமுத் தமிடுவாள்
இளமையிலே தினம் தினம் இதை அனுபவித்து
இருப்பதிலே தான் எத்தனை எத்தனை சுகம்
நெஞ்சார இதை ரசித்து எழுதுவ தற்கு
கொஞ்ச மேனும் கவிதை உள்ளம் வேண்டாமோ?
சரஸ்வதிராசேந்திரன்