திங்கள், 17 ஜூன், 2013

ரொம்ப தேங்க்ஸ் -- கல்கி--- 6-7- 2008


ரொம்ப தேங்க்ஸ்
'வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க "ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே வந்தான் .
மாதவா ,வெள்ளிக்கிழமை லீவு போட்டுட்டு போகலாமாடா "என்றதும் "போலாம்பா' என்று உற்சாக குரல் உடனே வந்தது
ராமசாமி போன்போட எதிர் முனையில் எதிபாராத வகையில் பெண்ணே போனை எடுக்க ,
"ஒண்ணுமில்லேம்மா ,வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண்பார்க்க வரலாமான்னு உங்க அப்பா அம்மா கிட்டே கேட்கத்தான் பண்ணினேன் "என்று ராமசாமி சொல்ல ,-
... சார், உங்க பையன் கிட்டே கொஞ்சம் தனியா நான் தனியா பேசணும் ,முதல்ல அவரை மெகாமார்ட் வரை அனுப்ப
முடியுமா ?'பிரியா கூச்சமின்றி கேட்டாள்.
அதிர்ந்து போன ராமசாமி விஷயத்தை ஜெயாவிடம் சொல்ல -'என்னங்க எது இப்படி கூச்ச நாச்சமின்றி கேட்கிறாள் "என்று
திடுக்கிட்டவளிடம் "அம்மா ,அவள் வேலை பார்ப்பவள் ,இந்தகாலத்து பெண் .நீங்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை ,
நான் பாத்துக்கிறேன் 'என்று சமாதானம் சொன்னான் மாதவன் .
மாதவன் மட்டும் பெண் பார்க்க போனான் மெகா மார்ட்டுக்கு .
திரும்பி வந்தவனை பெற்றோர்கள்துளைத்து எடுத்தனர் .அவனும் அவளும்பேசிய விவரங்களை சொன்னான் மாதவன்
"மிஸ்டர் மாதவன் ,எனக்கு சுற்றிவளைத்து பேசுவது பிடிக்காது .நான் கேட்கும் கேள்விக்கு நேரடியாகவே பதில் சொல்லலாம் ,அதைத்தான் நான் விரும்புகிறேன் "
"சரிங்க ,கேளுங்க "
நம்ம கல்யாணத்திற்கு பிறகு உங்க அப்பா,அம்மா எங்கே இருப்பாங்க? "
ஏன்?என்னோடதான் '
'நோ ,நம்ம வாழ்க்கையை நாம ரெண்டு பேர்தான் ஷேர் பண்ணிக்கணும் "-அவள்
அப்பா உங்க அப்பா அம்மா ?"
'"எப்போதாவது கெஸ்ட்மாதிரி வருவாங்க '-அவள்
"அப்புறம் ,உங்களுக்கு சமைக்க தெரியுமா ?"-அவள்
'ஏன் ,உங்களுக்கு தெரியாதா ?"-அவன்
"அதற்கில்லை ,நானும் வேலை பார்க்கிறேன் ,வீடு திரும்பினா டயர்ட் ஆயிடும் .என்னால சமைக்க முடியலைன்னா வேலையை நீங்க ஷேர் பண்ணிக்கணும் - " அவள்
'வெல்டன் அப்புறம் என்ன கேள்வி இருக்கு மிஸ் "-அவன்
;"உடனடியாக பிள்ளை பெத்துக்க முடியாது நாலைந்து வருஷம் கூட ஆகலாம் '-அவள்
"அட பாவி ,பெண்ணா வளத்துருக்காங்க ?,என்னடா அநியாயம் ,''-ஜெயாவும் ,ராமசாமியும் அலறி நீஎன்னதாண்டா சொன்னே /?"
'தேங்க்ஸ் ரொம்ப சந்தோசம் ,இத்தனை போல்டா பேசினதுக்கு அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி பேசினதுக்கு ,உங்க சந்தோசமும் என் குடும்ப நிம்மதியும் பறிபோகாம காப்பாற்றியது உங்கள் பேச்சு ,நீங்க எதிர் பார்க்கிற மாதிரியே ஒரு நல்ல
கணவன் கிடைக்க என் வாழ்த்துக்கள் ரொம்ப தேங்க்ஸ் ,நான் வரேன் ''-அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன் .
நல்ல காரியம் பண்னேடா ''நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஜெயாவும் ,ராமசாமியும்
கல்கி -- 6 - 7 - 2008

செவ்வாய், 11 ஜூன், 2013

காதல் வளர்த்தேன் தேவி வார இதழ் --30--9--2009

காதல் வளர்த்தேன்

பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்த மாக ஒரு எஸ் .டி .டி பூத்தும் ,ஜெராக்ஸ்
மிஷினும் வாங்கிகொடுத்தார் அப்பா .நானும் ,நல்ல பிள்ளையாகத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் யார் கண் பட்டதோ தெரியவில்லை . கடந்த ஒரு மாதமாக டெலிபோன்தேவதயொன்று என் செல்லுக்கு போன்பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது .மனம் கலகலத்து போனேன் நான் .இந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அது யார்னு
கண்டு பிடிக்கிறோம் என்றார்கள் .சொன்னதோடு அல்லாமல் கண்டுபிடித்தார்கள் எதிரே உள்ள மளிகை கடையிலிருந்து தான்
அந்த போன் வருகிறது என்று .அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்தான் அவள் முதலாளி காலையில் கடைக்கு வருவதற்குள் கடை போனிலிருந்து என் செல்லுக்கு போன் பண்ணி இனிக்க இனிக்க பேசுகிறாள் எனஅறிந்தஅவளுக்கு எப்படி தெரிந்தது என்று .அவளிடமகேட்டுயாரகண் பட்டதெரியவில்லை . கடந்த ஒரு மாதமாக டெலிபோன்தேவதயொன்று என் செல்லுக்கு போன்பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது .மனம் கலகலத்து போனேன் நான் .இந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அது யார்னு

அந்த போன் வருகிறது என்று .அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்தான் அவள் முதலாளி காலையில் கடைக்கு வருவதற்குள் கடபோனிலிருந்து என் செல்லுக்கு போன் பண்ணி இனிக்க இனிக்க பேசுகிறாள் எனஅறிந்தேன்
ஓ,எதுதான் காதல் போலிருக்கிறது ,எங்கள் காதலுக்கு போன் தான் தூது .இருப்பினும் எனக்கு ஒரு குடைச்சல் .என்செல் நம்பர் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று .அவளிடமே கேட்டுவிட்டேன் .
'ஒருநாள் உங்க எஸ் .டி .டி பூத்துக்கு போன் பண்ண வந்தேன் அப்பொழுது மேசையில் இருந்த நோட்டில் உங்கள் பெயரும்
செல் நம்பரும் இருந்தது குறித்துக்கொண்டேன் "சொல்லிசிரித்தாள் போனில்தான்
"கில்லாடிதான் நீ "என்றேன் பெருமிதமாக .
"பின் காதலிக்கிறதுன்னா சும்மாவா ?சரிசரி எருமை வந்துடுச்சு ,நாளைக்கு பேசுறேன் "என்று போனை வைத்துவிட்டாள்.
அவள் அப்படி சொன்னது கடை முதலாளி மாணிக்கத்தைதான். இந்த டெலிபோன் நாடகம் இரண்டு மாதமாக தொடர்ந்தது .நானும் அவளை காதலிக்க ஆரம்பித்தேன் .காதல் பேச்சு நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது .
மளிகை கடைக்கு போன் பில் வந்தது மூவாயிரம் ரூபாய்க்கு .முதலாளி மாணிக்கம் காண்டானார் ,மண்டையை உடைத்துக்கொண்டார் .எப்படி என்று அவளை கூப்பிட்டு கேட்டார்
" என்னது மூவாயிரம் ரூபாய்க்கு பில் வந்துருக்கு கடையிலே வேறு யாராவது போன் யூஸ் பண்றாங்களா ?என்ன அக்கிரமமாக இருக்கிறது ?"என்று சப்தமிட்டார் .
"தெரியலே சார் நானிருக்கும் வரை யாரும் பேசுவதில்லையே "என்று ஒன்றும் தெரியாதது மாதிரி பேசினாள்கடைபையனை ப் பார்த்தபடி
.
அடுத்த நாள் வெகு நேரமாகியும் அந்தப்பெண் ஜெயந்தி வேலைக்கு வரவில்லை நேற்று நாம சப்தம் போட்டதால் அவள் வேலைக்குவரவில்லையோ ,உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டார் மாணிக்கம் .
"ஏம்ப்பா ,அந்த பொண்ணு வரலையே ,ஏதாவது சொல்லிட்டு போனதா ?"கடை பையனிடம் கேட்டார் "
"இல்லை முதலாளி ....ஆனால் ஒரு விஷயம் ......முதலாளி "
என்னடா இழுக்கிறே ....சொல்லித்தொலைஏன்?"
"எத்ர்த்தாப்பிலே இருக்கிற எஸ் .டி .டி.பூத்திலே இருக்கிற பையன் கிட்டே நம்ம கடை போன் மூலமா தினமும் அந்த அக்கா
பேசும் முதலாளி "என்று கொளுத்தி போட்டான்
"என்னடா சொல்றே ?நேற்று கேட்டப்ப ஊமையன் மாதிரி நின்னையேடா பாவி "
"இதை முதலாளிகிட்டே சொன்னே ,உன் வேலைக்கு உலை வைச்சடுவேன்னுமிரட்டுச்சே ,முதலாளி நீங்களும் தான் அந்த அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடை சாவியையே கொடுத்து வைச்சீங்களே அதனாலே அது மிரட்டலுக்கு பயந்துதான் சொல்லலே "
பாவி,பாவி சரிடா எதிர்த்த எஸ் .டி.டி யும் பூட்டிஇருக்கே ஏன் ?"
"தெரியலே முதலாளி "என்று கடை பையன் சொல்லிக்கொண்டிருக்கவும் ,ஜெயந்தியோட அப்பா முருகேசன் வந்தார் ."
"என்னசார் பண்டிகை வருதேன்னு கடை பூட்டாம வியாபாரமா ?நம்ம பாப்பா இரவு வீட்டுக்கே வரலேன்னதும் ,உங்க வீட்ல
தான் தங்கியிருக்கும்னு எனக்கு தெரியும் .ஆனால் என பொஞ்சாதி தான் பொய் பார்த்துட்டு வாங்கன்னு ஒரே அலட்டல் .எங்கே என மகள்
"என்ன விளையாடுறீங்களா ?நேற்று ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டு உங்க மகள் இன்னைக்கு இங்கே வரலேன்னதும்
.நான் நேற்று கோவிச்சு கிட்டதாலே வரலையோன்னு நினைச்சேன் ஆனால் இப்பத்தான் தெரியுது உங்க பெண் எங்கே போயிருப்பான்னு "
"எங்கே போயிருக்கா ?'
"இதோ பார் முருகேசன் ,உன் பெண்ணுக்கும் எதிரிலே இருக்கிற கடை பையனுக்கும் என்ன தொடர்புன்னு தெரியலே ,என கடை போனிலிருந்து தினமும் போன் பண்ணி பேசுவாளாம் .என்ன கன்றாவி யோ அவங்க காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் ரூபாயிக்கு பில் வந்திருக்கு என்ன கொடுமை பாருங்க ?.நீங்க முதலில் அந்த பையனை பிடிங்க விஷயம் தெரியும் ".மாணிக்கம் சொன்னதும் முருகேசன் போலிசுக்கு போனார் ,போலிஸ் வந்தது மாணிக்கத்தை விசாரித்தது .பின் என வீட்டுக்கு வந்து தூங்கிகொண்டிருந்த என்னை தர தரவென இழுத்துபோய் ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்து
உட்கார வைத்தார்கள் .
"உண்மையை சொன்னீன்னா விட்டுடுவோம் இல்லே போலிஸ்காரன் வேலையை காண்பிப்போம் நகத்திலே ஊசி எத்தித்தான் பதிலை வரவழைக்கணும் என்னசொல்றே ?'
"நான் சாமி சத்தியமா சொல்றேன் எங்கம்மா மேல ஆணையா சொல்றேன் என்னை நம்புங்க அந்த ஜெயந்தி என கிட்டே
தினமும் ஆசை ஆசையா பேசுவாள் நானும் அவள் என்னை காதலிக்கிறான்னு நினைச்சு வழிய .வழிய பேசினேன் அதைத்
தவிர வேறொன்றும் எங்களிடையே கிடையாது நீங்க சொல்லித்தான் அவளை காணோம்னு எனக்கு தெரியும் 'இதுதான்சார் உண்மை "அழுதேன்

"இவனை உள்ளே உட்காரவை இதோ வரேன் "என்று இன்ஸ்பெக்டர் வெளியேறினார் .
மாலை ஆறு மணி .
'டூ நாட் செவென் அந்த பையனை இங்கே அனுப்பு "என்றார் நான் கூனி குறுகி இன்னும் என்ன மாதிரி அடி விழப்போகிறதோ என்ற கலக்கத்தில் வர
'சாரி தம்பி ,அந்த பெண் உன்கிட்டே நடிச்சுட்டு கடைக்கு பக்கத்து வீட்டு பையனோடு ஓடி போயிருக்காள் .உன்கிட்டே தினமும் பேசியதாலே நீதான் கடத் திட்டேன்னு நினைச்சுட்டோம் நீ வீட்டுக்கு போகலாம் .இந்தா உன் டிரஸ் .இன்மேலாவது ஜாக்கிரதையா இரு "சர்வ சாதாரணமாக சொன்னார் இன்ஸ்பெக்டர்
"அட பாவி என மனசையும் கெடுத்து என மானம் மரியாதையும் வாங்கிட்டியே உன் காதலை வளர்க்கவும் என்னை ஏமாற்றி
இன்னொருவனுடன் ஓட வு மா நடித்தாய் பாவி ,பாவி நான் எப்படி இனி வெளியிலே தலை காட்டுவேன் ?என சபலத்துக்கு
இது வேண்டியதுதான் .உள்ளுக்குள்ளேயே புழுங்கினான்
"சாரி தம்பி நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் அந்த நாய் தன காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் தண்டம் வைச்ச கோபத்துலே உன்னை தப்பா நினைச்சுட்டேன் நீயாவது அவள் எப்படின்னு தெரிஞ்சு க்க வேண்டாமா ?பாவம் சின்ன பையன் உங்களுக்கும் சபலம் தம்பி இனிமேலாவது ஜாக்கிரதியா இருங்க " மாணிக்கம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் அவர்களுக்கென்ன சுலபமா மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் மானம் மரியாதை போ ய் அடியும் இல்ல நான் வாங்கினேன்

வாங்கிய அடியில் உடல் ரணமாக ,முனகிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் வீடும் என்னை விளாசி வெறுத்தது சபலத்துக்கு இத்தனை விலையா ?
தேவி வார இதழ் 30-9 --2009

ஞாயிறு, 9 ஜூன், 2013

கடலுக்கு போன மச்சான் --கல்கி -- 27--2--2005

கடலுக்கு போன மச்சான்
"ஏய் ,பவுனு ....மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?"ஆக்ரோசமாகக் கத்தினான் .அவள் மச்சான் முருகேசன் .
"என்னய்யா பேசுறே?போன மாசம் உடம்பு முடியாம வீட்ல உழுந்து கிடந்தியே ...அப்பா நீ நல்லாயிரணும்னுவேண்டிகிட்ட நேர்த்திக்கடன் .அதை தீர்த்தது தப்புங்கிரியா ?"
"நேர்த்திகடனை தீர்த் துட்டில்ல,இன்னைக்கு அந்த சாமிகிட்ட போய்கடன் கேட்டு மண்ணெண்ணெய் வாங்கி ,அடுப்பை எரியவுடுடி ,போக்கத்தவளே சாமிதான் படியளக்கிராப்பில"
"தா ,நீ சொன்னாலும் சொல்லாட்டியும் புள்ளையார் சாமிதான்யா படியளக்குது .போன மாசம் பூரா தொழிலுக்குப்போகாமபடுத்துக்கிடந்தியே ,அப்பா யாரு படியளந்தா ,சாமிதான்"
"என் உயிரை பணயமா வைச்சு கடலுக்குள்ளே போய் நான் மீன் புடிக்கிறேன் நீ என்னடான்னா சாமின்றியா......கையிலே பைசா காசில்லே ,போயி சுள்ளி பொறுக்கிசோறாக்கு ....இன்மேலாவது புத்தியா பொழச்சுக்க ,போடி,பிரசங்கம் பண்ண வந்துட்டா ''
பவுனுக்கு அழுகையாக வந்தது தன்னைப்பற்றி பேசினதுக்குக்கூடஅவள் வருத்தப்படவில்லை தான் கும்பிடும் சாமியை திட்டுகிறானே ,நம்ப மாட்டேனென்கிறானே என்றுதான் ஆதங்கம் ..முருகேசன் நாத்திகவாதி ,மற்றபடி நல்லவன்தான்.எந்த ஒரு விஷயத்தில்தான் இருவருக்குள்ளும் முரண்பாடு .மற்றபடி எல்லா விசயங்களிலும் ஒற்றுமை இருவருக்குள்ளும் .
முருகேசன் மீன் பிடிக்க கிளம்பினான் .
"என்னடா முருகேசு ,இன்னைக்கு வெள்ளெனவே கிளம்பிட்டே "?என்றான் தோழன் பக்கிரி .
"நேத்து ஜனங்க விநாயகர் சதுர்த்தின்னு புள்ளையார் பொம்மைகளை தூ க்க்கிட்டுவந்து கடல்ல கரைச்சதுல எடைஞ்சலாகி,மீனே பிடிக்க முடியலே .அதான் இன்னைக்கு வெள்ளெனவே கிளம்பிட்டேன் .சாமீன்னு சொல்றானுங்க ...அதையே கடல்ல போட்டு அடிக்கிறானுங்க ..என்ன சாமியோ ,என்னபக்தியோ "ஆதங்க பட்ட முருகேசு கரையில் நின்ற படகை தண்ணீருக்குள் தள்ளி
ஏறி அமர்ந்து துடுப்பை போட்டான் .

கடனுக்கு வாங்கிய வஞ்சிர மீனை கழுவியபடியே பவுனு அவள் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வேண்டினாள்,"சாமி என் புருஷன் ஒத்தையிலே மீனு புடிக்க போயிருக்கு .அதுக்கு நிறைய மீனு
கிடைச்சு நல்லபடியா வரணும் புள்ளையாரே ,உனக்கு இரண்டு தேங்காய் உடைக்கிறேன் "
முருகேசு வலையை போட்டான் ,கொத்துகொத்தாக மீன்கள் வலையில் சேர்ந்தன .பூரித்துபோனான் .நடுக்கடலைதாண்டி யும் போய்மீன்களை அள்ளினான் .எல்லையற்ற சந்தோசத்தோடு கரை திரும்புகையில் திடீரென பெரிய சுனாமி அலை வந்து படகையே திருப்பிபோட்டது .அதற்கப்புறம் நடந்தது அவனுக்கு நினைவில்லை ..கரையில் நின்ற பவுனு ,முருகேசை காணாமல் ,அக்கம்பக்கம்
உள்ள மீனவர்களை கூப்பிட்டு முருகேசை தேடச்சொன்னாள் .போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பினார்கள் . நேரம் ஓட ,ஓட பவுனு அழுதழு து தன பிள்ளையாரை வேண்டியபடி கரையிலேயே அமர்ந்து விட்டாள்,"'எம் புருஷன் சொன்னது மாதிரி புள்ளையாருக்கு சக்தி இல்லையோ ?சாமி என்பதெல்லாம் பொய்யா ?""குழம்பிதவித்தாள்.
வடியற்காலையில்......பக்கிரி ஓடிவந்தான் ,""பவுனக்கா ,ஓடியாங்க .நம்ம முருகேசு கரை ஒதுங்கி கிடக்கான் .உசிரு இருக்கு .சீக்கிரம் வாங்கக்கா "
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குப்பத்தில் வைத்து வழிபடப்பட்டு ,மதல் நாள் கடலில் தூக்கி வீசப்பட்ட பிள்ளையார் சிலை அருகே கிடக்க ,முருகேசன் கரை ஒதுங்கி கிடந்தான் .குப்பத்தார் கூடி
அவன் மூர்ச்சையை தெளிய வைத்தார்கள் .முருகேசு விழிகளால் பவுனை தேடினான் "மச்சான் "என்று அழுதாள்.
""பவுனு ,சாமிதான் காப்பத்துதுன்னு நீ சொன்னப்ப மறுத்தேன் .அதுக்காகத்தான் அந்த சாமி எனக்கு பாடம் சொல்லிக்குடுக்க ,நேராவே வந்துட்டாரு .""நெகிழ்ந்து போனான் முருகேசு
"என்ன மச்சான் சொல்றே ?'புரியாமல் கேட்டாள்பவுனு
என்னை காப்பாத்தினது யாரு தெரியுமா ? நீகும்பிட்ட புள்ளையார்தான்,மூழிப்போன நான் நீந்தி நீந்தி கலைச்சு போய் மயக்கமா ஆயிட்டேன் .இந்த கட்டை புள்ளையார் சிலைதான் என்னை ஏந்தி
கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.நேரில் வந்துபுரிய வெச்சுட்டாரு உன்சாமிபவுனு "'நெகிழ்ந் துருகி ன முருகேசனை கண்ணீரோடு அணைத்துக்கொண்டாள் பவுனு /.
கல்கி 27 --2 ---2005

சனி, 8 ஜூன், 2013

தொடரோட்டம் --- தேவதை ---ஜூலை 1-15---2010

                                                      தொடரோட்டம்         

 அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ........போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள்
"ஏம்மா ...அப்பா ஓயுவு பெற இன்னும் பத்து நாள்தானே இருக்கு ?பாவம் அப்பா ..ரிடையர் மென்ட்டுக்குஅப்புறம் பொழுது போகாம ரொம்ப கஷ்டப்படுவார் இல்லையா ?கொடு போட்டது மாதிரி
வாழ்ந்தவர் ,உனக்குப்பரவயில்லை ..இனி காலையில் நாலு மணிக்குகெல்லாம் எழுந்திரிக்கவேண்டாம் .மெதுவாக எதையும் செய்யலாம் "
"ப்ச் ..பாவம்டி அவர் இருபத்தொன்பது வயசுல வேலைக்குப்போனவர் ..எதிலும் மிலிடரி மாதிரி நடந்துக்கிறவர் .அவருக்கு கொஞ்சம் சிரமம்தான்ஆனா இத்தனை நாள் உழைச்ச உடம்புக்கு கொஞ்சமாவது ரெஸ்ட் வேண்டாமா ?இனி கோவில் .குளம்னு இருக்க வேண்டியதுதான் ..அது சரி பேரக்குழந்தை ,மாப்பிள்ளை எல்லாம் எப்படி இருக்காங்க ?உன் மாமனார் ,மாமியார் சௌக்கியமா ?'
"எல்லாரும் நல்லைருக்காங்க .நீயும் உன் உடம்பை பார்த்துக்க ..வெச்சுடட்டுமா ".
அடுத்து மகன் பேசினான் "என்னம்மா ..அப்பாவுக்கு கவுன்ட் டவுன் ஆரம்பமாயிருச்சா ? என்ன சொல்றார் ?'
"ஏண்டா ,உங்களுக்கெல்லாம் அப்பாவைப்பார்த்தா கிண்டலா இருக்கா ?நானே பயந்துகிட்டு இருக்கேன் அவரால வீட்டிலே ஓய்ந்து உட்கார முடியாதேன்னு நீயும் மாலினியும் போன் பண்ணி விளையாடுறீங்களா?"
அயோ ..அப்படியெல்லாம் இல்லேம்மா சும்மா அவராலே உட்கார முடியாதே ,,பேசாம என் வீட்லேயும் ,மாலினிவீட்லேயும்பொழுதை கழிக்க வேண்டியதுதானே ,பேரக்குழந்தைகளுக்கும் தாத்தா ,பாட்டின்னா சந்தோஷமா இருக்கும் ,என்னம்மா சொல்றீங்க ?'
'நீ சொல்றதெல்லாம் சரிதான் ராஜா ....ஆனால் அப்பா பூர்வீக வீட்டை விட்டு வந்திடுவாரா?அதது அந்தந்த இடத்தில் இருந்தாதான் நிம்மதி விருந்தாளியா வந்துட்டுபபோறதைதான்அப்பா விரும்புவார்
எனக்கும் அதுதான் சரின்னு படுது.முடியாத காலத்தில் பார்த்துக்குவோம் இப்பவே உங்களுக்கு ஏன் தொந்திரவு?"
"சரிம்மா ..உங்க இஷ்டம் ..உடம்பை பார்த்துக்குங்க நான் வைக்கிறேன் "
விசாலத்தின் கணக்கு வேறாக இருந்தது கணவர் ரிடையர்மென்ட் வாங்கியதும் எங்கெங்கு போக வேண்டும் என்று டைம் டேபிள் போட்டு வைத்திருக்கிறாள் .முப்பத்தாறு வருடங்களாக உறவு ,அக்கா ,தங்கை ,நாத்தனார் ,மைத்துனர் என்று எந்த நல்லது கெட்டதுக்கும்கூடப்போகாமல் விலகியே இருந்தாயிற்று ..குடும்ப வருமானம் ,பிள்ளைகள் வளர்ப்பு ,அதன் பின் கல்வி கல்யாணம் என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாயிற்று ..இனி மேலாவது சாவகாசமாக எல்லோரையும் போய்ப்பார்த்துப்பேசி ,உறவை புதுப்பித்தாக வேண்டும் ,கோவில் குளம் என்று ஆன்மீக யாத்திரை
போக வேண்டும் ,பெண் பிள்ளைகள் வீட்டுக்கெல்லாம் போகலாம்தான் ஆனால் அங்கெல்லாம் அவருக்கு வேண்டுமானால் ரெஸ்ட் கிடைக்கலாம் ..தன்னால் சும்மா உட்கார முடியுமா ?
இத்தனை வருடமாக அவர் மட்டுமா பந்தயக்குதிரையாக ஓடிக்கொண்டிருந்தார் ?விசாலமும்தானே ஓடித்தேய்ந்திருக்கிறாள் ?எதுவரை மற்றவர்களுக்காக வே வாழ்ந்தாச்சு மிச்ச காலத்துக்காகவாவது நம்ம விருப்பப்படி வாழனும் என்று வைராக்கியமே கொண்டிருந்தாள் விசாலம் பத்து நாட்களுக்குப்பிறகு .......
மாலையும் கழுத்துமாக மேள தாளத்துடன் நீலகண்டனை சகல மரியாதையுடன் கொண்டு வந்து விட்டார்கள் பேங்க் ஊழியர்கள் .ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப்போனாள் விசாலம்
"என்னடி இது கூத்து ?..புது மாப்பிள்ளை மாதிரி எதெல்லாம் எனக்குப்பிடிக்காதுன்னு தெரியுமில்லே ?எவ்வளவோ சொன்னேன் கேட்கிறாங்களா ?உன்னை கல்யாணம் பண்ணின அன்னைக்கே
மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஒத்துக்காதவன் நான் இன்னைக்கு அத்தனை பெரும் சேர்ந்து கழுதை கூத்து அடிச்சுட்டானுங்க ..ரோட்டிலே போறவன் வாறவனெல்லாம் வேடிக்கை பார்க்க ச்சே
எனக்கு பிடிக்கவே இல்லை "
"அதுக்கென்னங்க பண்றது ?அவங்க வழக்கம் அவங்க மானேஜர் மேள இருக்கிற மரியாதயையும் ,அன்பையும் பின் எப்படித்தான் காட்டறது? நீங்க வேளையில் இருந்தா இதுக்கெல்லாம் சம்மதிப்பீங்களா?அதான் இப்படி காட்டிட்டாங்க நீங்களும் இப்பவெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுக்க ஆரம்பிச்சிருக்கீன்களே?
"சரிசரி அந்த பேனை போடு ஒரே புழுக்கமா இருக்கு " நீலகண்டன் படுத்து ஓய்வெடுத்தார் நான்கைந்து நாட்கள் போனது எப்போதும் ஓய்வென்பது அவருக்கு ஒரு தண்டனையாகவே பட்டது பழக்கதோஷத்தில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பார் விசாலம் மெதுவாக எழுந்து காப்பி போட்டுக்கொண்டு வருவதைப்ப்ரர்ததும் சின்ன கோபம்
வேளையில் இருந்தால் எழுந்தவுடனே காப்பி வந்துடும் ஆனா இப்போ ,,இத்தனை லேட்டா வருதுன்னா ..வீட்ல சும்மாதானே இருக்காருன்னு நினைப்போ?
"காப்பியை குடிச்சுட்டு மெதுவா குளிங்கோ ஒன்னும் அவசரமில்லே இத்தனை நாளும் தான் வெந்தது பாதி வேகாதது பாதின்னு சாப்பிட்டீங்க இனிமேலாவது ஆற அமர சாப்பிடுங்க ஒரு விஷயம்
சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ?"
"என்ன சொல்லு /"
"நம்ம குடும்பத்துக்காக நிற்கக்கூட நேரமில்லாம ,மூச்சிரைக்க ஓடி கடமைகளை முடிச்சுட்டோம் இனிமேலாவது நம்ம உறவுகளுக்காக நம்ம மன நிம்மதிக்காக கோவில் குளம்னு ஆன்மீக ட்ரிப் போகலாமா ?
நீலகண்டன் சிறிது நேரம் மொவுனம் சாதித்தார் பாவம் விசாலம் வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் நின்னு நிதானிச்சு அனுபவிக்காமேன்னோடவே ஓடிகிட்டு இருந்திட்டா ..அவ சொல்றபடி ..அவ நிம்மதிக்காகவும் கொஞ்சநாள் வாழ்வோமே "உன் இஷ்டம் விசாலம் .முதலில் எங்கே போகலாம் ?நீயே சொல்லு ?'
விசாலத்துக்கு முகம் மலர்ந்தது . "காசிக்குப்போகலாம் "என்றால்
"நாளைக்கேப்போய் ஏதாவது டுரிஸ்ட்குருபில் பேர் கொடுத்துட்டு பணத்தை கட்டிட்டு வந்துடுறேன் என்று சொல்ல ..விசாலத்துக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது
காலையில் .....///பணம் எடுத்துக்கொண்டு போனில் பேசி வைத்திருந்த டு ரிஸ்டசர்வீஸ் கம்பெனிக்கு புறப்பட்டார் நீலகண்டன் .வாசலில் ஆட்டோ வந்து நின்றது
"அடேடே வா மாலினி .விசாலம் யார் வந்திருக்கானூபாரு "மனைவியை கூப்பிட்டார் . திக்கேன்றாலும் காட்டிக்கொள்ளாமல் மகளை வரவேற்றாள்
"\மாப்பிள்ளை வரலே ?'
"இல்லேம்மா நானும் குழந்தையும்தான் வந்திருக்கோம் பிரச்சனைஎல்லாம் ஒன்னும் இல்லே ..சந்தோஷ மான விஷயம்தான் :"என்றபடி உள்ளே வந்தால்
நீலகண்டன் மகளின் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து வைத்தார்
விசாலம் மாலினிக்கும் குழந்தைக்கும் சாப்பிட ஏதாவது கொடு "
"வேண்டாம்மா சாப்பிட்டுட்டுத்தான் பஸ் ஏறினேன் இந்தாங்கப்பா ஸ்வீட் எடுத்துக்குங்க ,அம்மா நீயும் எடுத்துக்க "
"என்னடி விஷேசம் ?"புரியாமல் கேட்டால் விசாலம் ""
"அம்மா ,அப்பா எனக்கு கொடுத்த படிப்புக்கு கவர்மென்ட் வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும்நு எம்ப்லாய்மேன்டுல பதிவு பண்ணியிருன்தொம்ல இப்ப அங்கேயிருந்து ஆர்டர் வந்திருக்கு குழந்தையை பார்த்துக்க என் மாமியாரால முடியலே அதான் உன்கிட்டே விட்டுட்டு வரச்சொன்னார் .உன் மாப்பிள்ளை .எனக்கும் அதுதான் நல்லதுன்னு பட்டுது ,அப்பாவும்தான் ரிடையர் ஆயிட்டாரே
அவரும் கூட மாட இருந்து பார்த்துக்குவாரிள்ளே .அவராலேயும் நேர்ல வரமுடியலே இவளுக்கு ஸ்கூல் போற வயசு வந்ததும் நான் அழிச்சுகிட்டு போறேன் என்கலஎல்லாம் ஆளாக்கின மாதிரி
நீ இவளையும் ஆளாக்கிவிடும்மா உன் கைதான் ராசி அதான் குழந்தையை கொண்டு வந்து விட்டுட்டு ஆசிர் வாதம் வாங்கிட்டுப்போகலானும்னு வந்தேன் சாயந்திர பஸ்க்கு நான் கிளம்பனும் குழந்தை துணி எல்லாம் பெட்டியிலே இருக்கும்மா "என்றால்
நீலக்கண்டன் விசாலத்தை பரிதாபமாக பார்த்தார் ஓயாத அலைகலாகத்துரத்தும் இந்த வாழ்க்கை அனைவரும் அறிந்ததுதான் .ஆனால் இத்தன காலம் எதிர்பார்த்த ஒய்வு ....அதுவும் இல்லாமல் போய்விட்ட இந்த ஆமாற்றம் ...இதை தாங்குவாளா விசாலம் /'
ஆனால் விசலட்சியோ பேத்தியை கொஞ்சிக்கொண்டிருந்தாள் உற்சாகமாக ..அடுத்ததொடர் ஓட்டத்திற்கு தயாராக இதுதான் தாய் உள்ளமோ ?வியப்பிலாழ்ந்தார் நீலகண்டன்
தேவதை ஜூலை 1-15
2010
:

வேரிலும் காய்க்கும் --பாக்யா--அக்டோபர் -20-10--2000



   
                                             வேரிலும் காய்க்கும்

நீங்கள் தேடிவந்த வீடு இது இல்லை "என்று சொல்ல நினைத்தவள் ,சுதாரித்துக்கொண்டு "வாருங்கள் ,வணக்கம் "என்றால் வனிதா
வந்தவர் அவளின் அண்ணன் மாதவன் .வசதியாக இருப்பவர் பெட்டிக்கடைக்காரனை காதலித்த குற்றத்திற்காக தங்கையென்ற உறவையும் மறந்து "இந்த வீட்டில் உனக்கு இடமில்லை ,வெளியில்
போடி நாயே "என்று மாலையும் கழுத்துமாக வந்து நின்றவர்களை துரத்தியவர் ,நாடு கடத்தியவர் .இன்று தைரியமாக அவள் வீடு தேடி வந்திருக்கிறார் விந்தைதான்
"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் ?என்று முகத்திலடித்தாற்போல் கேட்க அவள் பண்பு இடம் தரவில்லை .வீடு தேடி வந்தவருக்கு காபி கொடுத்து உபசரித்தாள் குற்ற உணர்ச்சியுடன் வாங்கி குடித்தார் . படித்தும் வேலை கிடைக்காததால் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திய நடராஜை வனிதா காதலித்தது குற்றமாகப்பட்டது மாதவனுக்கு விரட்டினார் .வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஊரை விட்டுபுரப்பட்டனர் நடராஜும்வனிதாவும் .உழைப்பு உழைப்பு உயர்வு உயர்வு
இப்போது வனிதாவுக்கு இருக்கும் ஒரே துணை அவளது மகன் விவேக் .கணவன் நடராஜ் ஒரு ஆக்சிடெண்டில்இறந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன ,விவேக் பெற்றவர்களின் லட்சியம் புரிந்து எம் .பி
ஏ ,படித்து விட்டு அமெரிக்காவில் பெரிய வேலையில்இருக்கிறான் .அம்மா வனிதாவை அழைத்துப்போகவே வந்திருக்கிறான் . எத்தனை நேரம் தான் பேசாமல் அமர்ந்திருப்பது ?.மாதவன் மெல்ல
ஆரம்பித்தான்
"மாப்பிள்ளை இறந்ததுக்குக்கூட எங்கள்ளுக்குத்தகவல்சொல்லலே ,என் நினைப்புக்கூட உனக்கு வரலையா?''
"பெட்டிக்கடைக்காரர் இறந்ததற்கெல்லாம் கவுரவப்பட்டவர்கள் வருவார்கலான்னுதான் சொல்லலே "
"வனிதா ...நீ பழசையெல்லாம் மனசில வச்சுகிட்டு பேசறே ....ஏதோ புத்திகெட்டத்தனமாபேசிட்டேன் , அதை மறந்துடும்மா ,நம்ம உறவை பலப்படுத்திக்கத்தான் இப்ப நான் வந்திருக்கேன் "
"என்ன சொல்றீங்க "?அதிர்ந்து போய் கேட்டாள்வனிதா
"அம்மா வனிதா ,உன் பையன் விவேக்கிற்கு என் பெண் ரமாவைமணமுடிக்க தீர்மானிச்சுட்டேன் "
"சாரி அண்ணா ,நீங்க காலம் கடந்து வந்திருக்கீங்க ?'"
"நீ என்ன சொல்றே வனிதா ?'
"என் பையனுக்கு அமெரிக்காவில் பெண் பார்த்தாகி விட்டது ,அடுத்தவாரம் திருமணம் .அதற்கு அழைக்கத்தான் வந்திருக்கான் ,இந்தாங்க பத்திரிகை "
"நம்ம பெண்ணுக்கு எந்த வரணும் திகைய மாட்டேனென்கிறது பேசாம உங்க தங்கை பையனுக்கே கொடுத்திடலாம் ,பெட்டிக்கடைக்காரனும்தான் போயாச்சே மாமனார் பெட்டிக்கடைக்காரராக இருந்தார்ன்னு யாருக்குத்தெரியும் ?அமெரிக்காவிலே நல்ல சம்பளம்னு சொல்றாங்க ,போய் கேட்டு முடிச்சுட்டு வாங்க "என்று மாதவனின் மனைவியே சொன்னதால் தான் வந்தார் மாதவன்
இ ல்லைஎன்றானதும் ,கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில லை என்பதுபோல் மாதவன் கடுப்பாய் பேசினார்
"ஏதோ என் மனசு அடிச்சுகிட்டுது ,அதான் வந்தேன் ,நான் வந்தது தெரிந்தால் உன் அண்ணி ஒரே குதியாய் குதிப்பாள் பெட்டிக்கடக்காரனுக்கு என் பெண்ணா என்று பேயாட்டம் ஆடுவாள் நான் வரேன்
நல்லா இருங்க ,என்னை உன் அண்ணன் என்று யாரிடமும் தவறிக்கூட சொல்லிடாதே ,எனக்குத்தான் அது கேவலம் "துண்டை உதறித்தோளில்போட்டுக்கொண்டு புறப்பட்டார் மாதவன்
.அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா
"என்னம்மா யோசிக்கிறே "விவேக் கேட்டான்
" இல்லேப்பா ..வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும் ,வேண்டாட்டி ,எப்படி துச்சமா பேசிட்டுபபோறார் ", பார்த்தியா வேடி க்கையாய் இல்லை ?மனிதர்களே இப்படித்தான்
மாமா ...நல்ல சமாளிப்பா பேசறார் .அவர் இங்க வந்ததே வீட்ல தெரியாதது மாதிரி ....நல்ல நடிகர்ம்மா உன் அண்ணன் என்று சொல்ல "போகட்டும் விடுப்பா ,இயலாதவர்களின் அலட்டல் ,சரி நாம புறப்படுவோம் "
அக்டோபர் 20-10-2000 பாக்யா

செவ்வாய், 4 ஜூன், 2013

பாசவலை ==தினபூமி--கதைபூமி----12--9--1997

பாசவலை
பருவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தன வயிற்றில் பிறந்த இரண்டும் ரத்தினங்கள் என்று .தாயின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டில் உள்ளதுபோல் பிள்ளைகள் திருமணம் ஆனதும் மனைவி முந்தானையை பிடித்துக்கொண்டு போய்விடுவதுபோல் இல்லாமல் திருமணம் ஆகியும் பருவதத்தின் மீது உள்ள பாசமும் அன்பும் ,மரியாதையும் கொஞ்சங்கூட
குறையாமல் இருக்கிறார்களே ...... மாதாமாதம் தாய் பருவதத்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என பார்க்கப்போவதும் அவளுக்கு வேண்டிய ஹார்லிக்ஸ் ,விவா, வைட்டமி மாத்திரைகள் ,செலவுக்கு
பணம் என்று போட்டி போட்டுக்கொண்டு செய்தார்கள் .என்ன சொல்லியும் பருவதம் மட்டும் தன் கணவர் வாழ்ந்த வீட்டை விட்டு போக மறுத்துவிட்டாள் வேலை நிமித்தம் தாயை பிரிந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இரண்டு பிள்ளைகளுக்கும் மூன்றாம் வீட்டு கோகிலா தன வீட்டு சண்டையை பருவதத்திடம் வந்து சொன்னபோதுகூட அவளுக்கு தன் பிள்ளைகளை நினைத்து பெருமையாக இருந்தது உண்மையில் கோகிலா பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளா அவர்கள் ?இல்லை அவளது உயிரை பறிக்கவந்த எமன்களா ?என்று கூட வேகப்பட்டதுண்டு .நல்ல வேலை பருவதம் பாக்கியம் செய்திருக்கிறாள் இல்லையெனில் அவள் பிள்ளைகள் அவளிடம் பாசமழை பொழிவார்களா ?என எண்ணிஎண்ணி பெருமை பட்டுக்கொண்டாள் .திடீரென்று உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாள்பருவதம் .பிள்ளைகளுக்கு தொந்திரவு கொடுக்கக்கூடாது என்றுதான் முதலில் நினைத்தாள்ஆனால் மற்ற பிள்ளைகள் போலவா நம் பிள்ளைகள் ,சொல்லாவிட்டால் கோபித்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நினைத்து பக்கத்து வீட்டு வெங்கட்டிடம் சொல்லி தந்தி கொடுக்கச்சொன்னாள்.
தந்தி கிடைத்ததும் அடுத்த ரயிலிலேயே புறப்பட்டு வந்தனர் பிள்ளைகள் தங்கள் குடும்பத்துடன் என்னவோ ஏதோ என்று .
"இல்லப்பா ..சும்மா தான் உடம்புக்கு சுகமில்லை ,சொல்லாவிட்டால் கோபித்துக்கொல்வீர்கலேன்னு பயந்துதான் தந்தி கொடுக்கச்சொன்னேன் "பருவதம் கூறியதும் மருமகள் இரண்டு பேரும்ஒருவருக்கொருவர் ஜாடை காட்டிவிட்டு பின் கட்டிற்கு போய்விட்டார்கள் .
விஜய் சொன்னான் "எனக்கு லீவே இல்லையம்மா ,தந்திஎன்றதும் பதைபதைத்து போய்விட்டேன் .
"எனக்கு அடிக்கடி உடம்பிற்கு முடியாமல் போய் விடுகிறது உங்களை யாராவது கொஞ்ச நாளைக்கு என்னுடன் இருந்தால் தேவலை.."என்றாள்பருவதம் அடுத்தவன் பாலா முந்திக்கொண்டான்
"எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் இன்ஸ்பெக் ஷன்இருக்கு அதை தவ்ர்த்தால் பிரமோஷனேபோயிடும் விஜய்நீ வேணா ஒரு வாரம் தங்கிட்டு வா ,ஒரு வாரத்திற்கு பின் நான் வர முயற்சிக்கிறேன்
..."என்ன பாலா ,புரியாமல் பேசறே ?நான் இல்லையின்னா எங்க ஆபீசில் அந்த வேலையைசெய்ய ஆளே இல்லை நான் அடுத்த ரயிலிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்லியல்லவா வந்திருக்கிறேன் நீ புரியாம பேசிகிட்டு..."எரிச்சலோடு சொல்ல -
பருவதத்திற்கு லேசாகப்புரிந்த்து பின்பிள்ளைகளின்உண்மை சொருபம் ,உடனடியாக அவள் சொன்னாள்;
"நீங்க எனக்காக கஷ்டப்படவேண்டாம் பா ,நான் எப்படியாவது பார்த்துக்கொள்கிறேன் .நீங்க உங்க இஷ்டப்படியே ஊருக்குப்போய் சேருங்க ..." இரவு ...
"என்னடா பாலா அம்மா உடம்பு மோசமா இருக்கு து ,இனி ரொம்ப நாளைக்கு தாங்காது போலிருக்கே ..அதுக்குள்ளே நம் காரியங்களை செட்டில் பண்ணிட வேண்டியதுதான் "என்றான் விஜய்
"நீசொல்றதும் உண்மைதான் விஜய் நான் முதலில் பேச்சை ஆரம்பிக்கிறேன் நீயும் வந்து கலந்துக்க நாம இங்க இருக்கிரச்சேயே வக்கீலை வைத்து செட்டில் பண்ணிடுவோம் "
"அதுதான் சரி .."ஆமோதித்தனர் மருமகள்கள் இருவரும்
இதை எல்லாம் கேட்டுக்கொண்டு தூங்குவதுபோல்
படுத்திருந்த பருவதத்தின் நெஞ்சு வேகமாகத்துடித்தது உடலில் உள்ள ரத்தமெல்லாம் தலைகேறிவிட்டதுபோல்உஷ்ணம்
தலை சுற்றியது .ஓஹோ ..இத்தனை கேவலமானவர்களா நம் பிள்ளைகள் ?பெற்றவளிடம் பாசத்தால் அல்லவா அவர்கள் உருகுகிறார்கள் என்று நினைத்தேன் எல்லாம் வேஷம் ,லாப நஷ்ட கணக்கை பார்க்காத உறவே உலகில் இல்லைபோலும் ஏனில்லை ?உண்மையான அன்புக்கு ,பாசத்துக்கு ,லாபாஎது ?நஷ்டமேது ?இவர்கள் எப்படி இருந்தாலு இவர்கள் என் பிள்ளைகள் இவர்களைப்போல் நானில்லை ,என் பாசம் உண்மையானது என்பதை காட்டிட வேண்டும் .அவர்கள் என்னிடம் பாகம் கேட்பதற்குள் நானே அவர்களிடம் பத்திரத்தை கொடுத்துவிடவேண்டும் "தீர்மானித்துக்கொண்டாள் .அடுத்தநாள் ........விஜயும் பாலாவும் பருவதத்திடம் வந்து அமர்ந்தனர் .அவள் ஒன்றும் தெரியாதது
மாதிரி படுத்திருந்தாள்
>'அம்மா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே .."மெதுவாக பேச்சை எடுத்தான் விஜய்
"நான் கூட ஒரு முக்கிய விஷயம் பேசணும் ,பாலா அந்த பீரோவில் மேல்தட்டில் சில கடிதங்கள் வைத்திருக்கேன் எடுத்துவ்வ் "என்று கட்டளை இட்டாள்பருவதம்
பாலா குழம்பியவனாய் பொய் எடுத்து வந்தான் அவள் அதை கையால் வாங்கிப்பார்த்துவிட்டு பின்னர் விஜியிடம் ஒரு பத்திரத்தையும் பாலாவிடம் ஒரு பத்திரத்தையும் கொடுத்தால் .
"அம்மா ....இது...-'இரண்டுபேரும் அதிர்ச்சியோடு கேட்க ..
"உங்கள் இஎருவருக்கும் என்னிடம் உள்ள சொத்துக்களை இரண்டு பாகமாக ப்போட்டுஎழுதப்பட்ட பத்திரம் இது நீங்கள் என் ஈது வைத்திருக்கும் பாசத்திற்கு வலை அல்ல ,,பங்கு , என் பிள்ளைகள் ஊர் பிள்ளைகள் மாதிரி அல்ல என்று நேற்று வரை நினைத்திருந்தேன் ஆனால் நீங்களும் சராசரிதான் என்று இரவே கண்டு கொண்டேன் .அதனால்,ஏற்கனவே செட்டில் பண்ணியதை என்று உங்கள் கையில் கொடுத்துவிட்டேன் .இனி என்னை உயிரோடு எரிப்பதா ?இல்லை போனபின்பு புதைப்பதா ?அது உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன் ..சரிதானே ?''
அரை முழுவதும் ஒரே நிசப்தம்
இரண்டு மகன்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது ,
"அம்மா ,இந்த பத்திரம் வேண்டாம் நீ உயிரோடு இருந்தால் போதும் .எங்களை மன்னித்துவிடும்மா "என்று தாயின்
கால்களைப்பிடித்துக்கொண்டு கதறினர்
தினபூமி --கதைபூமி 12-9-1997

நண்பன் தினத்தந்தி--குடும்பமலர்===21--5--2006

நண்பன்
'யெய்யா....அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு ...புழச்சு வந்தியே "என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது .
"அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு "அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக்
கிராமத்து நிலத்தை ,விற்று வெளிநாடுபோய் சம்பாதிக்க போன அன்பு அங்கு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து மறு காலும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாய் நாடு வந்துவிட்டான் .எண்ணற்ற கனவுகளை சுமந்து சென்றவன் இன்று கால்களே இல்லாமல் வந்து நின்றால்.... பெற்றவர்களை மட்டுமா ,நண்பர்களையும் கதி கலங்க செய்து விட்டான் இறைவன்
அசோக்கை கட்டிக்கொண்டு அழுதான் அன்பு "டேய்,அன்பு ...உனக்கு நான் இருக்கேண்டா ,கவலையை விடு இந்த விஞ்ஞான உலகத்திலே மனிதனையே பார்ட் ,பார்ட்டாகொத்து அதிசயம் பண்ண வைக்கிறாங்க , நீ என்னடான்னா கால் போனதுக்கு அழறே .."
"அன்பு ,,அசோக் சொல்றது நிசம்தாம்ல ,என்ன செலவானாலும் உனக்கு வைத்தியம் பண்ணி நடக்க வைக்க மாட்டோமா கவலையை விடுயா "பெற்றவர்களும் சமாதானப்படுத்த -அன்பு ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தான்
அசோக் தன் நண்பனுக்காக அவன் அருகிலேயே இருந்து அவனை கண்ணின் இமை போல காத்தான் .அசோக்கின் இணையற்ற அன்பால் அன்புக்கு மனசு லேசானது காலில்லா குறை கூட தெரியவில்லை
"ஏம்புள்ள இந்த அசோக் தம்பியைபற்றி நீஎன்ன நினைக்கிறே"என்று கேட்டார் நாகராஜ் ,அன்புவின் தந்தை .
"சும்மாச்சொல்லப்படாதுங்க கூடப்பிறந்தவன்கூடஇப்படி ய்ய மாட்டாங்க ,அந்த புள்ளை நம்ம புள்ளை மேல எம்புட்டு பாசம் வைச்சிருக்குத்தெரியுமா?இது கூட கடவுள் கொடுத்தவரம்க "
"நீ சொல்றது நிசம்தான் புள்ளே சரி வருகிற எட்டாம் தேதி இன்னொரு காலை எடுக்கணும்ன்னுடாக்டர் சொல்லிட்டாரே ,அன்பு கலங்கிட்டான்புள்ளே .அசோக்கை நீ கவனமா பார்துகிட்டாதான் அந்தபுள்ளே நம்ம புள்ளையைகலங்காம பார்த்துப்பான் ,அந்த புள்ளைக்கு ஒரு குறையும் வைக்காதே புரியுதா ?'
புரியுதுங்க "
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள் அன்புவை இரண்டு ,மூன்று நாள் அப்சர்வேஷன் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஆபரேஷன் என்று கூறி விட்டார் டாக்டர் இந்த இரண்டு மூன்று நாட்களும் அன்புவின் பெற்றோர்களை வீட்டிளிருக்க்ச்சொல்லிவிட்டு அசோக்கே ஆஸ்பத்திரியில் அந்தந்த இந்தண்ட நகராமல் கிட்டவே இருந்து பார்த்துக்கொண்டான் .ஆகாரம் கொடுப்பதிலிருந்து பாத்ரூம் போக உதவுவது வரை பொறுமையாக செய்தான் ஆஸ்பத்திரியே அவன் சேவையை பார்த்து அதிசயித்தது
"சார் நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவர் இல்லேன்னா இப்படியொரு நண்பர் கிடைப்பாரா ?உங்களுக்கு நாங்க செய்யரதைவிட உங்க நண்பர் அதிகமா ,அக்கறையா செய்கிறார் "என்று நர்ஸ் லீலா
பாராட்டு மழை பொழிந்தாள்அன்புவிடம் அன்புவும் நெகிழ்ந்து போனான் அடுத்த கட்டமாக எல்லா டெஸ்டும்ஓகே ஆனதால் ஆப்பரேஷனுக்கு ரெடியானார் டாக்டர்
"அன்பு மனசை ரிலாக்ஸா வைச்சுக்க கடவுள் காப்பாற்றுவார் ஆபரேஷன் நல்லபடியா முடியும் ,நான் இந்த தியேட்டர் வாசலிலேதான் நிற்பேன் ,டோன்ட் ஒர்ரி "என்று தைரியப்படுத்தினான் அசோக்
"நீ இருக்க எனக்கு என்னடா கவலை?சரி இந்தா இதிலே அம்பதினாயிரம் இருக்கு இதை வைச்சுக்க ஆஸ்பிடல் செலவுக்கு ,ஆபரேஷனுக்காக இருபத்தையாயிரம் கட்டிடு மீதியை வைச்சுக்க பத்திரமா அம்மாவையும் ,அப்பாவையும் , தைரியமா இருக்கசொல்லு .
"அதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே ,,நான் பார்த்துக்கிறேன் "என்று கூறி ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தான் அசோக் .
"சார் நீங்கதானே அசோக் ,முன்னாடி பணத்தை கட்டிடுங்க ஆபரேஷனுக்கு ,டாக்டர் வந்துடுவார் "நர்ஸ் ஒருத்தி சொல்லிச்சென்றாள்
'காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடலே ,ஒரு காபி சாப்பிட்டுட்டு வந்துடறேன் ,பணம் இதோ ரெடியா இருக்கு , டாக்டர் கேட்டா கட்டிட்டேன்னு சொல்ங்க இதோ இரண்டு நிமிஷத்திலே வந்துடுறேன்
என்று சொல்லிவிட்டு காண்டீனுக்குப்போனான் அசோக்
டாக்டர் நர்சை விசாரிக்க ,பணம் கட்டப்பட்டதாகச்சொல்ல,டாக்டர் அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்
மயக்கமருந்து கொடுக்கப்பட்டு ஆபரேஷன் தொடங்கியது சும்மார் ஒரு மணி நேரத்திற்கு பின்னால் டாக்டர் களைப்போடு வெளியே வர -அன்புவின் பெற்றோர்கள் படபடப்பாககேட்டார்கள்
"டாக்டர் என்புள்ளே ...."
ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சுது ,நல்லாயிருக்கார் மயக்கம் தெளிஞ்சதும் பொய் பாருங்க "டாக்டர் சொல்லிவிட்டு புறப்பட்டார்
காபினுக்கு ல் நுழைந்த டாக்டர் "என்னப்பா முருகன் பீஸ் கட்டியதிற்கு பில் கொடுத்திட்டில்லேபெட்டிலே ஏன் ஏத்தலே?"
சார் யாரும் பணம் கட்டலே சார் ....எப்படி சார் ஆபரேஷன் ..."
"என்னய்யா சொல்றே ?குண்டக்க மண்டக்க பேசாம நல்லாப்பாருயா ,இந்தாம்மா வசந்தி ,பீஸ் கட்டிட்டதா சொன்னது யாரு ?"டாக்டர் கொபமாககேட்டார்
"சார் லீலாதான் சார் டுட்டியில் இருந்தாள்
"லீலாவை கூப்பிடு நான்சென்ஸ் "
ஆஸ்பத்திரியே சிறிது நேரத்தில் அலங்கமலங்கலானது .டாக்டர்களும் ,நர்சுகளும் பரபரப்பானார்கள்
அசோக்கை தேடினர் அன்புவின் பெற்றோர் அவன் அகப்படவில்லை எரிமலை ஆயினர் பெற்றோர்கள் .நர்ஸ் கூட்டம் லீலாவைத்தேடியது அவளும் அகப்படவில்லை ,இரண்டும் இரண்டும் நாலு
என்று கணக்குப்போட்டனர் மற்றவர்கள் நிலைமையை உணர்ந்த அன்பு "டாக்டர் டோன்ட் ஒர்ரி உங்க பீசை நான் கட்டிடச்சொல்றேன் நீங்க கவலைப்படவேண்டாம் "என்றான்
"என்னாசார் <உங்க பிரண்டு ன்னு சொன்னீங்க அவனும் நல்லவன் போல் நடிச்சுட்டு இப்படி குண்டக்க மண்டக்க பண்ணிட்டு போயிட்டானே பணத்தை நீங்க கொடுத்திட போறீங்க அதுக்காக நான் வருத்தப்படலே நல்ல வேலை தெரிந்த நர்ஸ் லீலாவையும்ல கிளப்பிட்டு போயிட்டானேசார்
"விடுங்க சார் அவன் செய்த உதவிக்கு என் பணம் பெரிதில்லை கேட்டால் கொடுத்திருப்பேன் ,பைத்தியக்காரன் ,நால்லா இருக்கட்டும் போங்க "விரக்தியோடு சொன்னான் அன்பு
நல்ல நண்பேண்டா ....
தினத்தந்தி –21-5-2006
?

திங்கள், 3 ஜூன், 2013

நாணயம் ==தினத்தந்தி பேப்பர்---5-2-95

-                                                    - நாணயம்
காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர ,வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்.டால் .அதற்குள் வெளிகேட்டை யாரோ திறக்கும்
சப்தம் கேட்க ---ஜன்னல் வழியே நோக்கினாள் தாமினி ..கேட்டுக்கு வெளியே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நான்கு வயது சிறுவனோடு நின்றாள் .கதவை திறந்த தாமினி -"யாரும்மா நீ ?என்னவேண்டும் ?"கேட்டாள்.
"வக்கீல் வீட்டு அம்மா சொன்னாங்க ,உங்களுக்கு வேலைக்கு ஆள் கேட்டதா ,,,அதான் வந்தேன் "
''அப்படியா ,வா உள்ளே ,அது யாரு கூட ..உன் பையனா ?'
"ஆமாம்மா ....."என்று சொன்னபடியே கையிலுள்ள கடிதத்தை கொடுத்தாள்.
அதை வாங்கி படித்துப்பார்த்தாள்,வக்கீல் வீட்டு வனஜாதான்எழுதிருந்தால் .தனக்குத்தெரிந் தவள்என்றும் நன்றாக வேலை செய்வாள் என்றும் .
"உன் பேரு என்ன ?'
"முனியம்மாங்க "
"இதோ பாரு முனியம்மா ,வேலைக்கு வந்தபிறகு அந்த வேலை செய்யமாட்டேன் இந்த வேலை செய்யமாட்டேன் னு சொல்லக்கூடாது சமயத்தில் கடை க்கும்.ரேஷனுக்கும்
ஏன் மில்லுக்கும் கூட போகவேண்டியிருக்கும் .வீட்ல நாங்க இரண்டுபேர்தான் .காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடனும் .வெள்ளி செவ்வாய்
வீடு துடைக்கணும் கண்டிப்பாய் ,உன்மகனை வேலைக்கு வரும்போது இங்கே அழைச்சுகிட்டு வரக்கூடாது .இதுதான் என் கண்டிஷன் .இதற்கெல்லாம் சம்மதம்னா சொல்லு பார்ப்போம் .பொய் ,திருட்டு கூடவேகூடாது "
"நீங்க உங்க கண்டிஷனை சொல்லிட்டீங்க ,நான் என் கண்டிஷனை சொல்லிடறேன் ,நான் ,நாணயமானவள்,என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வீட்டை விட்டு போய்டுவேன் ,இரண்டு வேலை காபி கொடுத்திடனும் ,ஒரு வேலையாவது சாப்பாடு கொடுத்துடணும் அது காலையோ மதியமோ அது உங்களிஷ்டம் ,சம்பளம் அறநூறு ருபாய் கொடுத்திடனும் .கைநீட்டி சம்பளம் வாங்கிட்டா எந்த வேலையையும் செய்யாம போகமாட்டேன் ,உடல் நிலை சரி இ ல்லாமல் போனாலொழிய --அவசிய லீவுன்னா முன்னாடியே சொல்லிடுவேன் .இதுக்கெல்லாம் சரின்னா எனக்கும் சம்மதம்தான் "
"அடேடே இத்தனை கறாரா கத்தான் பேசுற ,நாளையிலருந்து வேலைக்கு வந்துடு ஒன்னாம் தேதியாயிருக்கு கணக்கு வைக்க சரியாயிருக்கும் ."
"சரிம்மா ,காலையிலே வரேன் "
முனியம்மா எந்த வேலையையும் சுத்தமாகவும் ,விரைவாகவும் செய்தாள்.முகம் சுளிக்காமல் .எந்த வேலை சொன்னாலும் அவள் செய்தது தாமினிக்கு திருப்தியாக இருந்தது '..
இரண்டு மாதம் சீராக ஓடியது .ஒரு காலை நேரம் --
"முனியம்மா , அய்யாவோட டிபன் பாக்ஸ் சை எங்கே கழுவி வைச்சே ?'
"எல்லா சாமானையும் அந்த மேடையிலேதான் கவிழ்த்துவிட்டு போறேன் "
"அங்கே டிபன் பாக்ஸ் சை காணோமே , ஞாயிறு லீவாச்சே ?டிபன் பாக்ஸ் சுக்கு வேலை இல்லையே ,அங்கே வச்சிருந்தால் எங்கே போகும் ?'மறுபடி
தாமினி கேடடா .ள்
முனியம்மா பொய் பார்த்து விட்டு இங்கே இல்லையே ,உள்ளே எங்காவது கை தவறி வச்சிருக்கீங்களா பாருங்கம்மா "என்றால் முனியம்மா அமைதியாக .
அதற்குள் "இதைப்பாரு தாமினி எனக்கு இன்னைக்கு டிபன் வேண்டாம் நான் வெளிலே போறேன் அங்கேயே சாப்பிட்டுக்குறேன் ,நீ நிதானமா வீட்டில தேடிப்பாரு உனக்கு ஞாபகமறதி அதிகம் "என்ற கணவனை முறைத்து பின்
- என்னை எல்லோரும் பைத்தியம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே ,வீட்டில நாம மூணு பேருதான் ,வேற திருடனா வந்து எடுத்துட்டு போயிருப்பான் ?அப்படியே இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிபன் பாக்ஸ் சை மட்டுமா திருடுவான் அதிசயம்தான் ,முனியம்மா நீயும் உன்வீட்டில தேடிப்பாரு எதனாச்சும் எடுத்திட்டு போறேல்ல "
"நீங்க இப்படி சொல்லிடக்கூடாதுன்னுதானே நான் என் வீட்டிளிருந்து பாத்திரம் கொண்டு வரேன் "
'வீட்டையே அலசிட்டேன் வேணும்னா மறுபடியும் தேடிப்பார்க்கிறேன் எதுக்கும் உன் வீட்லயும் தேடிபாரேன் ,கை தவறுதலா எடுத்துட்டுப்போயிருக்கலாம்ல ''
முனியம்மா வியப்போடு பார்த்துவிட்டு வெளியேறினாள் .மாலை ......
முனியம்மா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள் ..அலுவலகம் விட்டு வந்த பாஸ்கரன் "தாமினி உனக்கு இருந்தாலும் இத்தனை ஞாபகமர தி கூடாது
ஞாயிறு உன் அக்காள் இங்கு வந்த பொது நீதானே ஸ்வீட் வைத்து இந்த டிபன் பாக்ஸ் சை கொடுத்தாயாம் அதை மறந்துவிட்டு முனியம்மாவை சந்தேகப்பட்டாயே நியாயமா?உன் அக்காள் அலுவலகம் விட்டு வருகையில் என்னை கூப்பிட்டு கொடுத்தாள் "
"சரிசரி சப்தம் போட்டு பேசாதீங்க ,டிபன் பாக்ஸ் கிடைத்துவிட்டது என்று முனியம்மாவிற்கு தெரிந்தால் நாளைக்கு ஏதாவது சாமானைஎடுத்துகொண்டால் கூட ,நீங்கதான் ஞாபக மறதியா எங்காவது வைச்சுட்டு என்னை கேட்கிறீகள் என்று சொல்லிடப்போரால் இந்த பாக்ஸ்
காணாமல் போனது மாதிரியே இருக்கட்டும் ,எதையாவ உளறி வைக்காம போங்க ''என்று கணவனை ஆமடக்கினால் தாமினி
மாலை வேலையெல்லாம் முடிந்ததும் முனியம்மா தாமினிடம் வந்தால் .
"அம்மா என் கணக்கை பார்த்து சம்பளத்தை தரீங்களா ?"
'என்ன முனியம்மா ,மாசமே முடியலே ,அதற்குள்ளே ,,சம்பளம் கேட்கிறே ?'புரியாமல் கேட்டாள் தாமினி '
அது அப்படித்தான் அம்மா ,நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் உங்ககிட்டே என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வேலையை விட்டு போயிடுவேன் என்று டப்பாவை நீங்களே உங்க அக்கா வீட்டுக்கு கொடுத்துவிட்டு காணோம்னு சொன்னீங்க ,அய்யா கொண்டு வந்து கொடுத்த பிறகாவது தப்பா கிடைச்சுட்டுதுன்னும் ,நாதான் மறந்துட்டேன்னு சொல்லியிருந்தாகூட என் மனசு ஆறியிருக்கும் ,ஆனால் நீங்க .... நான் ஏழைதாம்மா எங்ககிட்டே இருக்கிறதே இந்த நாணயம் ஒண்ணுதான் அதையும் உங்ககிட்ட இழக்கத்தயாராயிள்ளே ,,நீங்க வசதியானவங்க ,காணாமல்; போனது இன்னும் பெரிய பொருளா இருந்தா என்னை போலீசிலே பிடிச்சுகொடுக்கக்கூட தயங்க மாட்டீங்க ,வேண்டாம்மா இந்த வேலை ,என் கணக்கை நேர் பண்ணிடுங்க '
தாமினி கணவனை முறைத்து பேச்சற்று நின்றாள்
தினத்தந்தி 5-2-95

ஒரு வார்த்தை பேச ....தினமலர் --பெண்கல்மலர் 15-10==2005.

                                                              ஒரு வார்த்தை பேச .......

அனாமிகா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா ,அந்த பல்லாவரம் பையன் ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க
வருகிறாராம் பிளீஸ் "அப்பா ஆவுடையப்பன் கெஞ்சினார் .
வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அப்பாவின் வேண்டுகோளுக்கு செவி சாயித்து சரிஎன்றாள்அனாமிகா
செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு இறங்கி நடந்தாள்.கூடவே அவள் மனசும் நடந்தது .'
இத்துடன் பத்து ஆண்கள் பெண் பார்த்துவிட்டு போய்விட்டனர் ,வருபவன் எல்லாம் பகற்கொள்ளை காரர்களாகவே இருந்தனர் .எல்லாம் பிடித்தும் ,வரதட்சணை பேச்சால் வெளி நடப்பு செய்தார்கள் .
பெண்ணை பெற்று விட்டால் என்ன அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்ட வேண்டுமா என்ன ?பாவம் அப்பா ,அம்மா
,என்னை பெற்றதற்காக எவ்வளவுதான் தாழ்ந்து போவார்கள் ?
பிள்ளையைப்பெற்றுவிட்டால்கொம்பா முளைத்துவிடும் ?பேசும் தோரணை ,நடப்பு ,எல்லாவற்றிலும் ஒரு மதர்ப்பு ,திமிர் .இந்த பல்லாவரம் காரன் மட்டும் மனசை பார்க்கவாப்போறான் ?இவன் என்னென்ன கேட்கப்போறானோ?
நடக்கிறப்ப நடக்கட்டும் என்றால் பெற்றவர்கள் கேட்கிறார்களா ?அவர்கள் கடமையை முடிக்கவேண்டுமாம் .இவர்களால் நான் வருபவர்கள் முன் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன் ,எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ,எந்த ஆசையும் இல்லாமல் யந்திரம் போன்று நிற்க வேண்டியுள்ளது என்று மனதுக்குள் புலம்பியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டால் போதும் மற்ற எந்த நினைவும் வராது அவளுக்கு வேலையில் ஒன்றிவிடுவாள்
,நேரம் போனதே தெரியவில்லை பியூன் வந்து மேனேஜர் கூப்பிடுவதாக சொன்னபோதுதான் மணியைப்பார்த்தாள் மணி மூன்று நாற்பது .அவசரமாக எழுந்து போனாள்.
"மே ஐ கமின் ?'
"எஸ் கமின் "
"என்னசார் ?'
"நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டீங்களா ?நந்தா பில்டர்சுக்கு அனுப்ப வேண்டிய தபால்கள் எல்லாம் போஸ்ட்
ஆயிடிச்சா ?'
"எல்லாம் முடிஞ்சுடுச்சு சார் ,தபால்களை மணியிடம் கொடுத்து போஸ்ட் பண்ணிடறேன் ,சார் ஒரு ரிக்வெஸ்ட் ,நாலு மணிக்கு வீட்டுக்குப்போகணும் வித் யுவர் பர்மிஷன் ,''
"ஒ,வழக்கம் போலவா ?போயிட்டு வாங்க "
அவர்கள் பேசுவதை கேட்க கேட்க அனாமிகாவிற்கு அவமானமாக இருந்தது ,ஒவ்வொருமுறையும் பர்மிஷன் கேட்பதும் ,அடுத்தநாள் அலுவலகமே ஆவலாய் முகம் பார்ப்பதும் ...ச்சே நொந்துகொண்டு புறப்பட்டால் .பெற்றவர்களுக்காக வந்து நின்றால் பிள்ளை வீட்டார்முன் .பிள்ளை வீட்டார் ஒருவருக்கொருவர் திருப்தியுடன் புன்னகைத்துக்கொண்டனர் .சீர் வரிசைப்பற்றி பேச ஆரம்பித்தனர்
:ஆவுடையப்பன் சார் ,ஜாதகப்பொருத்தம் ஓகே ,பெண் கல்யாணத்துக்கப்புறம் வேலையை விட்டுடனும் ,உங்களுக்கு ஒரு பெண்தான் ,இந்த வீட்டையும் ,இதுவரை சம்பாதித்த பண த்தையும் என் பையன் பேருக்கு எழுதி வச்சுடுங்க ,நகை நட்டெல்லாம்
உங்க பெண்ணுக்கு என்ன போடணுமோ ,அதை போட்டுடுவீங்க ன்னு தெரியும் ,கல்யாணத்தை விஜய சேஷ மகாலில் வச்சுருங்க ஏன்னா எங்களுக்கு பெரிய மனுஷங்க வருவாங்க "
அனாமிகாவிற்கு ரத்தம் கொதித்தது ,,பெற்றவர்கள் கண்களாலேயே அமைதியாய் இருக்க கெஞ்சினர்
அலமேலுவும் ,ஆவுடையப்பனும் விழி பிதுங்கி நின்றனர் ,ஆனாலும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் .
"பெண்ணையே உங்களுக்குத்தரும்போது சொத்தை பற்றியென்ன ?எங்களுக்குப்பின்னால் இந்த வீடு அவளுக்குத்தானே ?"
அலமேலு சாதாரணமாய் சொன்னால் .
"அலுவலகத்தில் பல ஆண்களோடு வேலை பார்த்த பெண் ,அவளை கல்யாணம் பண்ணிக்கிரதுன்னா சாதாரணமா ?
எங்க சொந்தக்காரங்க வேலைக்குப்போற பெண்ணை கல்யாணமே பண்ணிக்கமாட்டாங்க ,உங்க பெண் கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் பெரிய மனசு பண்ணி நாங்க பண்ணிக்கிறோம் அதுக்கே நீங்க நாங்க கேட்காமலேயே நிறைய சீர்
செய்யணும்'.
இதைக்கேட்டதும் வெகுண்டாள் அனாமிகா ,ஆனாலும் அடக்கிக்கொண்டு "நான் ஒரு வார்த்தை பேச அனுமதிப்பீங்களா "என்று கேட்டால் .பையனின் தந்தை "தாராளமா பேசும்மா "என்றார்
பிளீஸ் கேட் அவுட் 'என்றால் அனாமிகா பிள்ளை வீட்டாரைப்பார்த்து .
"ஒ இத்தனை அதிகப்படியா ?நல்ல வேலை தப்பிச்சோம் ,வாங்க போகலாம் "என்றால் பிள்ளையின் அம்மா
அவர்கள் போனதும் அலமேலு "என்னடி இது ,ஒரு வார்த்தை பேசனுமுன்னு சொல்லிட்டு இப்படி எடுத்து எரிஞ்சு பெசிடியே "
என்று கேட்டால் .
'அம்மா ,வரவனெல்லாம் சொத்தை மட்டும்தான் விரும்பறான் ,என்னை புரிந்துகொள்ள முடியாதவர்களால் என்னை வாழவைக்க முடியும்னு நான் நினைக்கலை ,நீங்க கொடுத்த கல்வி இருக்கு ,அந்த கலவியால கிடைச்ச வேலை இருக்கு .அது உங்களுக்குப் பின்னாலேயும் என்னை வாழவைக்கும்னு நம்பிக்கை இருக்கு .இந்த துணியை விடவா பெரிய துணை எனக்கு கிடைக்கப்போகுது ?ஊருக்காக கவலைப்பட்டு என்னை கண்ணீர் கடலில் தள்ளிடாதீங்க ,இனிமே திருமண பேச்சே வேண்டாம் அது தானா நடந்தா நடக்கட்டும் இல்லேன்னாலும் கவலை இல்லே ,என் படிப்பும் வேலையும் மட்டும் போதும் " வைராக்கியமாய் பேசினால் அனாமிகா .
தினமலர் பெண்கள்மலர் 15-10-2005

ரத்து

இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு#links           
                                         ரத்து

முகுந்தை பிரியப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டாள் மலர் ,ஆனால் ஆறு மாதத்திற்குள் அவனை பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு .அவனை எப்படி வெட்டி விடுவது ?என தீவிரமாக யோசித்தாள் .ஆனால் அவனோ அவளிடம் பிரியமாத்தான்

இருந்தான் கோர் ட் டு க்குபோனால் கூட ஆ று மாதமாகவாவது பிரிந்து வாழணும் என்று சொல்வார்கள் ,அதனால் ,அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் பின் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டில் இருந்தாள் .ஆறு மாதம் கழித்து வக்கீல் ஒருவரை பார்த்து பணம் கொடுத்து தனக்கு சாதகமாக பேசச்சொன்னாள்

அவனை விவாகரத்து செய்ய தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னாள் தனக்கு அவனிடமிருந்து ரத்து வாங்கித்தரும்படி கேட்டாள் '
...
அவளுடைய ஆதாரங்கள் முழுமையாக இருந்ததால் கோர்ட் அவளுக்கு ரத்து வாங்கி தந்தது .

முகுந்தோ அந்த ஆதாரங்கள் பொய் என்று சொல்லிபார்த்தான் அவன் வாதம் எடுபட வில்லை இன்றும் அவளுடன் வாழவே ஆசைப்பட்டான் .மலருடைய வக்கீலுக்கு ஆச்சரியமாக இருந்தது .அவனைப்பற்றி விசாரித்ததில் அவன் மலர் சொன்னதுபோல்

எந்த பெண்ணுடனும் அவனுக்கு தொடர்பில்லை ,பின் மலர் ஏன் இப்படி? ஆதாரம் எப்படிவந்தது ?குழம்பிய வக்கீல் அவளிடமே இது பற்றி கேட்டார்

விவாகரத்துதான் கிடைச்சுட்டுதே இனி உங்களிடம் சொன்னால் என்ன?சார் அவருடைய முகநூலில் அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன் ,அதேபோல இன்னொரு பெண்ணினுடைய

பெயரில் கற்பனையாக ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருவரும் அடிக்கடி அசிங்க அசிங்கமா பேசுவதுபோல் நானே சாட் செய்தேன் ,மாற்றி மாற்றி ஆன் லைனில் இரவரும் சரசமாடுவதுபோல் நானே பதிவு செய்து ,அதை பீரிண்ட் அவுட் பண்ணினேன் அந்த காப்பியைத்தான் கோர்டில் ஆதாரமாக காட்டினேன் .இந்த வசதி கம்பியூட்டரில் மட்டும்தானே கிடைக்கும் ,என்று சர்வ சாதாரணமாக சொன்னாள் .

இது நம்மை விட மோசமா சிந்திச்சு இருக்கே என்று அதிர்ந்துபோய் நின்றார் வக்கீல்