நக்கீரர்
மதுரை கணக்காயனார்
மகனாய் பிறந்து
சங்கப் புலவரில்
தங்கத்தமிழ் வளர்த்த
பெரிதும் புகழப்படும்
திருமுருகாற்றுபடை எனும்
இனிய பாடலை
ஆசிரியப்பாவால் ஆக்கி
ஆற்றுப் படுத்தியவர்
ஆழ்ந்த புலமையும்
அஞ்சா நெஞ்சமும் கொண்டு
நெற்றிக் கண்ணை காட்டினாலும்
குற்றம் குற்றமே என
சிவனாரிடம் வாதம் செய்து
பின் தவறுணர்ந்து
சங்கரனைப்போற்றி கயிலைபாதி
காளத்தி பாதியென அந்தாதிப்பாடி
ஆற்றுப் படுத்தியவன்
பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியனை பாட்டுடைத்
தலைவனாக் கொண்டு
சாற்றியப் பாடல் நெடு நல்வாடை
சரமாய்த் தொடுத்தவர்
நற்றமிழ் புலவர் நக்கீரர்
நின்புகழ் பாடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக