ஞாயிறு, 29 நவம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி-- 40




தலைக்கனம் குறையத் தலைமுடி யிழப்பாய்; இழந்ததை விரைவில் பெறுவாய் பலமடங்காய்!’ என்று மனமினிக்கும் மணிமொழிகளை இம்மழலைக்குச் செப்புகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.-      மேகலா ராமமூர்த்தி
தலை தலையாய்
வேண்டுதல் இந்த
வேண்டு தலை
கடந்த ஜென்மத்து
பந்தங்களை துண்டிக்க
இந்த வேண்டு தலை
இந்துக்களின் முக்கிய சடங்கு
குல தெய்வத்துக்கு
முடி கொடுத்தால்
முடி மட்டுமல்ல
குழந்தையும் ஆரோக்கியமாய்
வளரும் என்பது ஐதீகம்
தலைக்கனம் போக
தலைமுடி தருவாய்
பார் பார் உனக்கு முடி
எப்படி வளரப்போகுதுன்னு
அழாமல் முடிகொடு சாமிக்கு
அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
ஆறடி க்கூந்தலை உனக்கு

செவ்வாய், 24 நவம்பர், 2015

புகைப்பட்டகவிதை ---39

ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்--மேகலாராமமூர்த்தி

. எங்கள் அவதரிப்பு                                                                                       
புவியில் போராடத்தான்
உயிரைப்பணயம் வைத்து
உழைக்கிறோம்
கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
கையில்பூசிக்கொண்டு
சிறார்களைவேலைக்குப்
பயன் படுத்தக்கூடாதென்று
சட்டம் இருந்தாலும்
சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
இருக்கும் வரை எங்கள்
குடும்ப வண்டிக்கு பழுதில்லை
[…]
ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
எங்கள் வெறும் வயிறு
போடும் சத்தம் காணாமல் போகும்
இருள் மண்டி கிடக்கும் எங்கள்
இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
மீதமான கம்பி மத்தாப்பின்
ஒளியில் ஏற்படும்
தற்காலிக வெளிச்சம் மட்டுமே
மீதி நேரம் வீடும் வயிறும்
புகைச்சலில் போராடும்
என் போன்ற சிறார்கள்
நன் முறையில் பள்ளிபோக
நான் மட்டும் வெடிக்கிடங்கில்
என் பள்ளிக்கனவுகள்
எப்போது விடியும்?


ஞாயிறு, 15 நவம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி --38

 நாட்டில் மண்டிவரும் மதவாத நச்சுச் செடிகளை உதவாது என வேரோடு பிடுங்கியெறிந்து, அனைத்து மதங்களும் ஒன்றே என நிலைநாட்டுதற்குத்தான் இந்தப் பத்ரகாளித் தோற்றமா? இல்லை…இதுவும் பாமர மக்களை ஏய்க்கும் பொய்வேடமா? என்று தெய்வவுருவைப் பார்த்துக் கேள்வியால் வேள்வி செய்யும் கவிதை ஒன்று!  --மேகலாராமமூர்த்தி                                                                 தீவிர வாதமும்
பயங்கர வாதமும்
உச்சமாகிப்போனது
கொலைகளைச்செய்வதையே
கொள்கையாய் கொண்டோரையும்
நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
எம்மதமும் நம் மதமாய்
சம்மதித்து வாழ வழி செய்வாயோ
இல்லை நீயும் பொய் வேடமிட்டு
குண்டு வைப்பாயோ யாரறிவார்?
கடவுள் பெயராலேயே
கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
எல்லாம் கலிகாலம்
திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்-

திங்கள், 9 நவம்பர், 2015

புகைப்பட போட்டி 37



பகல் வேடம் அம்பலமாகிக் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு கம்பியெண்ண வேண்டியிருக்குமோ? என்று அஞ்சும் மனிதர்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.


saraswathiRjendran wrote on 7 November, 2015, 13:49பகல் வேஷம்
இருட்டானால்
திருட்டு
பகலானால்
பகல் வேஷம் என்று
நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
பொல்லாத வேலையா இன்று
போலீஸு பார்க்குது
நண்பா பின்னாடி பார்க்காதே
வம்பா போயிடும் கெத்தா நில்லு
சந்தேகம் வ்ராத அளவுக்கு
தீபாவளி நேரம்
தீவிர வேட்டைக்கு நிற்குது போலீஸு
நாரதனிடம் இரவல்
கேட்காதே என்றேன்
கேட்டியா இப்பப்பாரு
வண்டியிலே பெட்ரோல்
இல்லாம நிற்க வைத்து
அவன் புத்தியை காட்டிட்டான்
நேரம் தெரியாமல் ரயில் வேறு
லேட்டாயி கேட்டாலே
மாட்டப்போறோமோ?
சரஸ்வதி ராசேந்திரன்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

படக்கவிதைப் போட்டி 36-இன் முடிவுகள்

செய்த பாவம் போதாதென்று நம் மக்கள் கணபதி சிலையைக் காலால் உதைத்துக் கடலில் கரைக்கும் பாவத்தைவேறு செய்யத் தொடங்கிவிட்டனர்; அதனால்தான் கணேசனார் கரையாமல் கரையேறுகின்றாரோ? என்று வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணிலேயே
மறையும் என்ற
தத்துவத்தை உணர்த்த
தண்ணீரில் கரைக்கிறோம்
பண்ணும் பாவங்கள்
போதாதென்று
உன்னை உதைத்தும்
தள்ளியும் விடுகின்றனர்
கடலிலுனுள்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது
நமசிவாயவே என நீ
கரையாமல் கரையேறி நிற்பது கூட
பாவங்களிருந்து
எங்களை கரையேற்றத்தானோ?