வெள்ளி, 10 மார்ச், 2023

பட்டாம்பூச்சியானவள்

 பட்டாம்பூச்சியானவள்

அருவருப்பாய் இருந்த
புழுவிற்கு
அட்டகாசமான
அழகு வந்தது எப்படி
வண்ணச் சிறகுகளை
அசைத்து
அதுவாகத்தான் கையில்
தேடி வந்து அமர்ந்தது
அவளும்நானும் பேசிய
காதல் சொற்கள்
கடற்கரையெங்கும்
சிதறி கிடக்கின்றன
கடல் நுரையாய்
ஆனால் அவளோ
மலர்விட்டு மலர் தாவும்
வண்டான பிறகு
கலக்கமும் இல்ல களிப்பும் இல்ல
கல்லாய் கிடக்கிறது மனம் போன இடமும் மகிழ்ச்சியைத் தரவில்லைசலனத்தால் சங்கடத்தை மறைக்க
காடு மேடெல்லாம்
சுற்றி அலைகிறாள்
நாடோடியைப்போல்
பட்டாம் பூச்சியாய்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
விநயமான வினாவோடு தொடங்குகிறது கவிதை!
அருவருப்பு அழகானது எப்படி?
பருவம் உருவை மாற்றியிருக்கலாம்!
அவளும் நானும் பேசிய காதற் சொற்கள் கடற்கரை எங்கும் சிதறிக் கிடக்கின்றன கடல் நுரையாய் -அழகான வரிகள்
பட்டாம்பூச்சியாய் இருந்த அவள் வண்டான போதும் மனத்தில் கலக்கம் இல்லை களிப்பும் இல்லை
ஆனால் மனம் கல்லாய்க் கிடக்கிறது!
அவளுக்கும் சங்கடம்!
அதை மறைக்கவே காடுமேடெல்லாம் சுற்றி அலைகிறாள்!
கவிதை மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே
May be a cartoon of 2 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக