செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புகைப்படபோட்டி ==51

சரஸ்வதி ராஜேந்திரன்
திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
உலகமே ஒரு நாடக மேடை அதில்
உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை

சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று

திங்கள், 22 பிப்ரவரி, 2016

பேரிடர் ..டிசம்பர் 1

பெரு மழையில் பெருக்கெடுத்தமனிதாபிமானம்
டிசம்பர் --1
மழை வேண்டி தவ மிருந்த நாட்கள்போக
மழையே ஏன் வந்தாய் நீ போய் விடு என
கெஞ்சும் நாளானதுடிசம்பர் ஒன்றுஅன்று
விண்ணிலிருந்து வீழ்ந்த மழைத் துளிகள்
மண்ணை நனைத்து பின் ஊருக்குள் ஓடி
வெள்ளமாய் பெருக்கெடுத்துபோக இடமின்றி
கள்ளன்போல் எல்லோர் வீடுகளிலும் நுழைய
பயந்து அலறிய மக்கள் உயிர் பிழைத்தால்
போதுமென்றெண்ணி மாடியில் ஏறினார்
இயற்கையின் சீற்றம் அதிகரிக்க அதிகரிக்க
செயற்கை (இன் வெட்டர்) கரண்ட்டும் நின்றது
போனில் அழைக்க முடியவில்லையாரையும்
இரண்டு நாட்களாக பிள்ளைகளும் பசி பட்டினி
பணக்காரர்களுக்கும் பசி என்றால் என்னவென்று
பாடம் கற்பித்தது பேரிடர் மழை
சாதிப்பிரிவினைகள் மறந்து எல்லோரும் சமம்என்று
சாதிப்பு உன்னதத்தைக் காட்டிய நாளது
பெரிய மனிதன் முதல் சிறியவர்கள் வரை
யாராவது வரமாட்டார்களா காப்பாற்றமாட்ட்டார்களா
யாவரும் பரிதவித்து கண்கள் சோர கால் கடுக்க நிற்க
புதிய காற்றாய் களமிறங்கினர் அலட்சியப்படுத்தப்பட்ட
அதிசய இளைஞர்கள் போனிலும் வாட்சப்பிலும்
கூட்டணி சேர்த்து உயிரையும் துச்சமாய் எண்ணி
குடும்பம் குடும்பமாய் அள்ளிச்சென்று கரை சேர்த்தார்கள்
சிறு பான்மை மக்கள் கூட பள்ளி வாசலை திறந்து விட்டார்கள்
சிறு துளி பெரு வெள்ளம்போல் அவரவரால் முடிந்தஉதவிகளை
செய்து சீரழிந்த சென்னையை சீர்படுத்தினார்கள்
அடடா மனிதம் மலர்ந்த தருணங்கள் அவை
காதுக்கு இல்லாத ஈவும் இரக்கமும் இளைஞர்களின்
கண்ணுக்கு இருந்தது, பிஞ்சுகளும் முதியோரும்
கடைசி இழையில் ஊசலாடிய காட்சி கண்டு
இளைஞர்களின் நெஞ்சு உரம் பெற்று சட சடவென இறங்கி
இளைய சக்தியின் உத் வேகத்தை காட்டிய பொழுது
மனிதம் மரிக்க வில்லை மாண்புடன் வளர்ந்திருப்பது புரிந்தது
வளர்க மனித நேயம் வாழ்க மனித மாண்புகள்.!

திங்கள், 15 பிப்ரவரி, 2016

புகைப்படபோட்டி-50 வல்லமை




கலிகாலம்
சுட்டிப்பெண்ணே உன்
சுட்டித்தனத்திற்குப் பயந்துதான்
கட்டிப்போட்டிருக்கிறாள் அன்னை
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான்
கட்டளைகள் செலுத்தமுடியும்
இந்த நிகழ்வை பார்க்கும்போது
அந்த யசோதா வீதியிலுள்ளவீடுகளில்
வெண்ணை திருடிய மாயக்
கண்ணனை உரலில் கட்டிப்போட்டதுதான்
நினைவுக்குவருகிறது ..
தாய் கண்முன்னே காவல்இருக்கும் வரை
பெண்ணுக்கு பாதுகாப்பு
மனிதனின் காமம்
மரணகுழி வெட்டும் சோகம்
மலராத மொட்டுகளைக் கூட
மதிகெட்டு கசக்கக் கூடாதென்றே
அழுத்தும் பணியிலும்
துரத்தும் கடமையிலும்
கண்முன்னேயே கட்டிப்போட்டிருக்கிறாள்
என்ன செய்வது கலிகாலம்
பெண் பெயரில் இருப்பதால்
நதிகள் கூட பாழ்படுத்தப்ப்டும் நிலையில்
நீயெங்கே நான் எங்கே?
சரஸ்வதி ராஜேந்திரன்
உவமையும் ஒப்புமையும் அழகு. அக்கறையும் தாய்மை உணர்வும் இயலாமையுடன் சமூக அவலத்தைக் காட்டும் பாங்கும் நன்று சரஸ்வதி ராஜேந்திரன்.

கொலுசுஇதழ் 10-2-2016 சென்ரியு கவிதைகள்



சண்முக கவசம் பிப்ரவரி இதழ்




செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வல்லமைபுகைப்படபோட்டி--49

சரஸ்வதி இராஜேந்திரன்
பந்தயக் குதிரை
பந்தயக் குதிரை
அரேபியாவின் இறக்குமதியே 
அப்பாவி அழகு குதிரையே  நீ
குதித்து ஓடியதால் குதிரையானோயோ
பரிந்து ஓடியதால் பரி ஆனாயோ  ?
உன்னை மனிதன் அடிமை ஆக்கி
தன்  இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்
ஏருழவும்  வண்டி இழுக்கவும் பயன் பட்ட நீ
இன்று அலங்காரத்திற்கும்பந்தயத்திற்குமாய் 
உன்னை நம்பியே இருக்கிறான் ஜாக்கி
உன் வேகத்தை காட்டி வெற்றியை அடையகுதிரை
ஊக்கமருந்து ஊசி போடாதே என்று இரைஞ்சுகிறதா  ?
போட்டால்தான் வெற்றியென பாகன் நினைக்கிறானா?
அரசியல் வாதிகளும் குதிரை சக்தியில்
ஆரம்பித்து விட்டார்கள் ஓட்டத்தை
தேர்தல் நேரம் வந்து விட்டதால் 
இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேதாவ
குதிரை பயன் பாடு குறைந்தாலும்
குதிரை சக்தி என்ற சொல் மட்டும் இன்றும்
மோட்டார்களிலும் எலக்ட்ரிக் என்ஜின்களிலுமாய்


சரஸ்வதி ராஜேந்திரனின் கவிதையின் தலைப்பும் எண்ணவோட்டமும் ஆற்றொழுக்கு போன்றது. வரிசையாக தேர்தல் வரை கொணர்ந்து சேர்த்துவிட்டார்.

சனி, 6 பிப்ரவரி, 2016

ஜனவரி மாத கவிதை---மனிதபிமானம்


உலக மயமாக்கல் யுகத்தில்
பணத்தையே மனிதன்
பெரிதாய் நினைப்பதால்
மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது

அடிபட்டவனை ஆஸ்பிடலில்
சேர்க்காமல் பேட்டி எடுப்பது
மனிதாபிமானமில்லை
யார் செய்தியை முந்தித் தருவது
எனப்போட்டிப்போடும்
சேனல்கள் செய்வது மனிதபிமானமில்லை
பேருக்காகவும் புகழுக்காகவும்
வியாபரத்துக்காகவும் செய்வது
மனிதாபிமானமில்லை
வறுமையால் துடி துடிக்கும்
ஏழையின் துயர் துடைக்க
பிடி சோறு பிழைப்பைக் கொடு
கல்லாது கருகிவிடும் சிறார்களுக்கு
கற்றலின் அவசியத்தை எடுத்துச்சொல்லி
கல்வி கற்க பண உதவிசெய்
ஊனமுற்றோருக்குமனமிரங்கு
துணியின்றி தவிப்போருக்கு துணிகொடு
மனிதனாய் இருந்தாலும்
மாக்களாய் இருந்தாலும்
துயருவோரின் துயர் துடை
மனிதனாக பிறப்பது பிறப்பல்ல
மனித நேயத்தோடுஇருப்பதே சிறப்பு
மனிதத்துவமில்லாத மனிதர்கள்
தினந்தோறும்செத்த பிறவிக்குச் சமம்
மனிதத்துவத்தோடு  வாழுங்கள்