வெள்ளி, 26 அக்டோபர், 2018

தமிழமுது கவிச்சாரல்

தமிழமுது_தேன்சாரல்_குழுமத்தின்_சிறப்புப்_போட்டி நாளைய 30/09/18----15/10/18 நாளாம் போட்டி கவிதையின் தலைப்பு
#கவிச்சிகரம்_முகன் அவர்கள்... See More — with Saraswathi Rajendran.

நதியோர நாணல்கள்

No automatic alt text available.செம்பருத்தி பூத்திருக்கு அக்கா மவளே
செவத்த முகம் போலிருக்குஅக்கா மவளே
ஒசந்த ஓவியமா அக்கா மவளே
ஒய்யார செலயா நீ அக்கா மவளே
உன் கன்னக்குழி அழகில் அக்கா மவளே
என்னையே நான் இழந்துட்டேன் அக்கா மவளே
உள்ளங் கையால் உன்னைத் தாங்குவேனடி
உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேனடி
ஊதகாத்து வீசுதடி அக்காமவளே
கூதலதான் கேட்குதடி அக்கா மவளே
வெரசா நீயும் வாடி என் அக்கா மவளே
உசிரே நீதாண்டி என் அக்கா மவளே
மாலையோடு நான் வருவேன் அக்கா மவளே
மஞ்சத்தாலியும் கொண்டுவாரேன் அக்கா மவளே
சேலைகூட வாங்கி வருவேன் அக்கா மவளே
சேர்த்தணைக்க நாள் குறிப்பேன் அக்கா மவளே
சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்சேவை 17-12018

மண்ணுரிமைக் காப்போம்
வந்தாரை யெல்லாம் வாழவைத்த இந்த பூமியை
சொந்தம் கொண்டாடி அபகரிக்க நினைப்பதென்ன நீதியோ நீ
ஏவிடும் ஏவலாளா என் தேசம் கைகட்டி வாய் பொத்தி
ஏமாந்து போய் கப்பம் கட்டி உன்னிடம் அடிமையாக
வீரப் பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்
வெள்ளையனை விரட்டிய வீரத்தமி்ழன் வாழ்ந்த பூமியடா இது
வேற்றுமையில் ஒற்றுமை கண்டாலும் எம் குலம்
மாற்றானிடம் மண்டியிடும் வழக்கமில்லை
கெஞ்சிக்கேட்டிருந்தால் கொடையாக கொடுத்திருப்பேன்
கப்பம் என்று கேட்டதுதான் என்னுள் கோபத்தைத் தருகிறது
மண்ணுக்காக மரணத்தைத் தழுவும் மறவர் வழி வந்தவர்கள் எம்
கண்ணாய்க் காத்த மண்ணுக்கு கப்பம் கட்டாமல் காப்போம்
பொறுமையோடு சொல்கிறேன் பெருமையோடு போய்விடு
சிறுமை பட்டு சீர் கெட்டுப் போகாதே பிழைத்துப்போ
பேராசை வேண்டாம் இனியென போய்ச்சொல் உன் மன்னனிடம்
தோராய வாழ்வுக்கே நெருக்கடி வந்து விடும் என சொல்
மண்ணுயிர் காப்போம் தன்னுயிர் தந்தாலாவது
சரஸ்வதிராசேந்திரன்
No automatic alt text available.22-8-2018 ல் நதியோர நாணல்குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியபெருவிழாவில் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட என் கவிதைக்கான சான்றிதழ் அதை கொண்டுவந்து சேர்த்த ஈழவன் தாசன் அவர்களுக்கும் ஜீவிதா , ஜோதி அவர்களுக்கும் நன்றி
காதலாகிய கவிதை
அம்பு ஒன்று பட்டது
ஆதி அந்தம் சுட்டது
வட்டமிடும் சூரியன் போல்
வந்து வந்து தினம் சுற்றியது
கொட்டும் மழை போலவே
குமுறிவந்ததுஎண்ணங்கள்
அலையில் வந்து அலைமோதும்
கலையில் புதுமை கலையாகும்
பாதம் தொடும் கொலுசுகள்
வேதமாய் ஓதியது காதலை
தென்பாண்டி முத்துச்சரம்
அவள்செவ்வாயில் சிந்தியது
மங்கை அவள் கைபட்டதும்
மண்ணுகூட பொன்னாகியது
கன்னி அவள் கால்பட்டதும்
பாறைகூட பால் வார்த்தது
அரும்பிய மொட்டே
அழகான மலராகியது
விரும்பிய அவள் காதலே
விலகாது இன்றும் நின்றது
சிறகொடிந்து போனாலும்
துடி துடித்துச் சுற்றியது
எண்ணத்தில் காதல் இருந்தால்
எழுத்துக்கும் பஞ்சமில்லை
வண்ணமயமான காதல்
வரி வரியாய் செதுக்கியது
என்னுள் விளைந்த இனிய
காதலாகிய கவிதை இது

முகன் கவிதை+புகைப்படம் புகைப்படசாரல்

முகன் கதைசாரல்

வேட்டை அக்டோபர் 30

யாதொன்றும் இல்லாமல் எதுவும் தெரியாமல்
இருந்திட்ட என்னை காந்தம்போல் ஈர்த்தாய்
விழிகளில் வித்தைக் காட்டி விளையாடுகிறாய்
பொழியும் அன்பினால் போதைகொள்ளச்செய்கிறாய்
அமுத சுரபியில் அன்னத்தைஅள்ளிக் கொடுத்து
அரும்பசியை மணிமேகலைத் தீர்த்ததுபோல்
தேடியே வந்து அன்பினை அள்ளித்தெளித்து
கூடிய செல்வங்கள் கூட்டும் நிறைவினைத் தந்திடு
வானம் விரிந்ததுபோல் வாழ்வை விரிவாக்கி
மானமுடன் என்னையும் வாழ வழி வகுப்பாய்
அரும்பிய மொட்டே அழகிய பூக்களாகும்
விரும்பியே வாழ்வேன் உன்னுடன் நானும்
வாழ்வை விரிவாக்கு(கலை இலக்கியம் -கவிதைகள்)
October 20, 2018 · by Vettai Galhinna · 0Image may contain: cloud, sky, ocean, text and outdoor

தமிழ்சேவை 18-10=18


உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி
உணர்ந்தால் துன்பங்கள் போகும் ஓடி
இருப்பதை வைத்து நிம்மதி தேடு
ஒருபோதும் கலங்காதே மனம் வாடி

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி
இதையும் எளிதாய் கொண்டால்துன்பம் தீரும் பாதி
வறுமைகள் தோன்றா வழிகள் உண்டு
பெருமைகள் கொள்ள நேர்மையோடு உழை

வாழ்க்கை என்பது ஒரு முறை அதை 
வாழ்ந்தே பார்த்திடு நன் முறை
கசப்புகள் நீங்கிக் களிப்புடன் வாழ
நிசமுடன் நேர்மையாய் தினமும்உழைத்திடு

பணம்தான் வாழ்க்கை என்பதும் இல்லை
குணம்தான் சிறந்தது அதுவே இன்பத்தின் எல்லை
நிலைப்படுத்தி மனதை நிறைவினைப் பெற்று
தலை நிமிர்ந்து வாழ்ந்து தழைத்திடுமனமே

பாடுபட்டு உழைத்தால் பறந்திடும் வறுமை
நாடியுணர்த்தால் நன்மை அடையப் பெறுவாய்
உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி
உனர்ந்தே நடந்திடு இறைவன் சொற்படி

சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்சேவை -19-10-18

மாமன் பெத்த மரகதமே

மாமன் பெத்த மரகதமே
மனசுக் கேத்த மணிரதமே
மந்திரம் போடும் விழிகளே
மயங்க வைக்கும் மொழிகளே

சின்னச்சிட்டே உன் வண்ணம்
தங்கத் தட்டே உன் கன்னம்
முத்துப் பற்கள்உன் வாயில்
சொத்தாய் வருவாய் என் வாசல்

உள்ளம் உன்னால் போராடுது
உறக்கம் இன்றி அல்லாடுது
தருவேன் நானும் தங்கத்தாலி
இருப்பேன் என்றுமுனக்கு வேலியா

ஆத்தோரம் வாடியென் மாமன்மகளே
ஆலமரம் ஊஞ்சல் கட்டி ஆடுவோமே
வஞ்சி உன்னைக் கொஞ்சிடவே
மாமன் நானும் காத்திருக்கேன்

மாசிப் போயி பங்குனி வந்திடும்
மாமன் மகளே உன்னை மணமுடிப்பேன்
நெஞ்சோடு மாங்கல்யம் கொஞ்சும்
மஞ்சத்திலே நெஞ்சோடு நெஞ்சம் சேரும்

சரஸ்வதிராசேந்திரன்

பன்னீர்பூக்கள் மின்னிதழ்

காசாசைச் சூதாட்டம்
காலத்தை வீணாக்கும்
நாசமாக்கும் வாழ்வை
நாளும் சிதைக்கும்
பேராசை என்றுமே
பேரழிவைத் தரும்
ஏசப்படாமல் வாழ்வதே
ஏற்றத்தைத் தரும்
நாசம் விளைவிக்கும்
நஞ்சுச் செயல்களை
வீசி எறிந்துவிடு
விவேகத்தோடு வாழ்ந்திடு
அசலாகி வாழ்தலே
ஆக்கம் அளிக்கும்
நிசமான உழைப்பே
நன்மை செய்யும்
அறிவாய் இருத்தல்
அனைவருக்கு மழகே
– சரஸ்வதி ராசேந்திரன்

தமிழ்சேவை--- 6 10-2018

மலர்களே மலருங்கள்
காந்தாள் விரலழகு கண்கள் நீலோற்பவம்
கண்ணிப்பூ கரந்தை கருவிளை நிறம்
இலவம் மனசு ஈங்கையின் குளிர்ச்சி
இனிமை தரும் பேச்சு நீயே என் மூச்சு
குறிஞ்சி வெட்சி செங்கோடுவேரி
தேமாம்மலா்களாய் மலா்ந்து மணம்
பரப்பும் மல்லிகை மங்கையே
ஆம்பலாய் விரிந்து நிமிா்ந்து நின்று
சுள்ளிமலராய் கள்ளி என்மனதைப் பறித்தவளே
அடும்பு அதிரல் அவரை ஆத்தியாய்
அரசன் என் தோளில் நீ ஆட. வருவாய்
தும்பையாய் துழாயாய் தோன்றியாய்
துளிர்த்து துளிர்த்து ஆசையை ஊட்டுகிறாய்
புன்னை புனாகம் பித்திகம் பகான்றம் சூடி
என்னை மயக்கும் வள்ளி வாழைப்பூ நீ
பாலையாய் முல்லையாய் விரியுமுன்புன்னகை
பாவலன் ஆக்கியது என்னை நெய்தலாய்
செம்மல் சேடல் தாழையின் மணம்
சேர்ந்து என் சிந்தையை மயக்குகிறதே
பூவரசம் பூத்தாச்சு பீர்கம் காச்சாச்சு
பெண்ணே ஏன் தாமதம் ஆரம் சூட
சாமந்தியே சண்பகமலரே செம்பருத்தியே
சடுதியில் வா பன்னீர்ப்பூவே பாதிரியே
வேங்கையாய் நந்தியாய் நாகப்பூவாய்
வஞ்சி உனைத்தேடி வருகிறேன் மாம்பூவே
வாகைபூப் போல வசீகரம் வாய்ந்தவளே
வகுளம் பூ வடவனமாய் மனம்போல்சேர்ந்து
வாடாமல்லி போல வளமாய் வாழ்வோம்
வாச மலர்களே வாருங்கள் எங்களை வாழ்த்த
சரஸ்வதிராசேந்திரன். 48மலா்கள்

வேட்டை 13-10-2018


வேட்டை


வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை 11-10=18

சிவப்பாகும் பூமி

சிவப்பாகும் பூமி
உவப்பான உண்மை இது
பணச்செறுக்கு ஏறி
குணம் சறுக்கித் தாழ்ந்து
தினம் சுட்டு வீழ்த்துகிறார்
அடுத்தவர் வாழ பொறுக்காமல்

கள்ளப் புருஷனுடன் சேர்ந்து
கணவனையே கொல்லும் காட்சிகள்
சுற்றித்திரியும் வெறி நாய்போல்
கற்பிழந்த கூட்டத்தால் கொலைகள்
அத்து மீறிய சொத்து ஆசையால்
அடிதடி கொலைகள் ஆயிரம்

தூண்டி விடும் சாதி வெறியர்கள்
வேண்டாதவரை வம்புக்கிழுத்து
மிருகவெறிகொண்டுத் தாக்கி
உருத்தெறியாமல் செய்கிறார்
முற்போக்கு வாதிகளின்
பிற்போக்கு செய்கைகளால் மனிதர்கள்
அற்பமாகி அருவாளை சுழற்றுகிறார்

நெஞ்சு கொதிக்கிறது இன்று
நெறிமுறைகளை மீறிய
நஞ்சு சமூகத்தால் நாளும்
புனித மனம் கொண்டு வாழ்ந்த
மனிதாபிமான முன்னோர்கள் வழி
மறந்த மடையர்களால் சிவப்பாறு ஓடுகிறது

விதியை மறுக்கும் பகுத்தறிவாதியை
சதமென நம்பி மூடர்கள் சிலர்
பாவபுண்ணியம் பாராமல்
மதியை அடகு வைத்து
கொலைகள் செய்வதையே
குடும்பத்தொழிலாக கொள்கிறார்

படரும் கொடி போன்று
தொடர்ந்து ஓடும் செந்நீரால்
பூமியே சிவப்பாகிப்போன அவலம்

சரஸ்வதிராசேந்திரன்

இலக்கியபூந்தோட்டம்


முகன் கதைச்சாரல்



செந்தமிழ்சாரல் 3-10-2018

தூளியில் ஒரு. நிலா
தூளியில்ஒரு நிலவு காட்சி. அது
தூய்மை இல்லறத்தின் சாட்சி
மனதை வெல்லும்அதன் ஆட்சி
,மனையில் தங்குமே மகிழ்ச்சி
சின்ன அரும்பின் சிரிப்பு
முல்லைப் பூவின் விரிப்பு
விண்மீன்கள் தூங்குது வானிலே
கண்ணே உறங்கு தூளியிலே
ஆராரோ பாடுவேன் தூங்கடி பெண்ணே
சரஸ்வதிராசேந்திரன்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஆடிமாத்தில் ஆடிப்பூரத்தில் உதித்தவளாம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை
மலருக்குள் இருக்கும் மணம் போல
மழலையவள் மனதில்பக்தியும் ஞானமும்
தந்தை விஷ்ணு சித்தரைக் காட்டிலும்
தத்தையவள் விஞ்சி நின்றாள் புலமையில்
நறுமணம் கமழும் மலர்களைக் கொய்து
பொறுமையுடன் எடுத்து மாலை தொடுத்தவள்
அரங்கனின் திருவிளை யாடல்களை தினமும்
அனுபவித்து தந்தை சொல்லச் சொல்ல
கோதையவள் கேட்டு மனதில் அரங்கன் மேல்
காதல் கொண்டு கணவனாகவும் வரித்துக்கொண்டாள்
அரங்கனுக்கு தினமும் கட்டும் மாலையை
அழகான தன்கழுத்தில் அணிந்து அகமகிழளானாள்
அறியாமல் மகள்செய்த தவறைக் கண்டு
அரண்டுபோன விஷ்ணு சித்தர் அரற்றினார்
தெய்வத்துக்குச் சாற்றும் மாலையில் சுத்தம் வேண்டும்
தொன்று தொட்டு வரும் பழக்கம் இது இனி வேண்டாம்
என்று சொல்லி வேறு மாலை கட்டிப்போனார் இறைவனோ
நன்றல்ல இது கோதை சூடிய மாலையைக்கேட்க
பேதளித்து நின்ற விஷ்ணு சித்தர் கலங்கினார்
பேதம் காட்டா இறைவனின் அன்பில் நெகிழ்ந்தார்
அலங்காரம் செய்து மணமகளாய் கொண்டுபோய்
அரங்கனின் சன்னிதானத்தில் விட்டுவிட
ஆண்டவனை காதலித்த கோதையவள்
ஆண்டவனுடனேயே கலந்து விட்டாள்
ஆதரவு தந்தே அரவணைத்துக் கொண்டான்
அரங்கனும் திருப்பாவைச் செல்வியை
சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்சேவை --1-10-18

கம்பன் வடித்த காவியம்
கம்பன் கவியில் அவனொரு கொம்பன்
கற்பனை சொல்லில் அற்புத வம்பன்
வித்தகத் தமிழில் சிலம்பாடும் வீரன்
சித்தத்தை ஈர்த்திடும் நற்றமிழ்த் தீரன்
நயமும் நளினமும் நயத்தக்க நாகரீகமும்
பயன்பெற சொல்லும் கம்பன் காவியம்
ஒழுக்க மறைகளை உயர்வாய் ஓதியே
மக்கள் மனதில் என்றும் மங்காத ஓவியம்
கம்பனுக்கொரு இணையினி உலகினில் இல்லை..
சொல்லின் செல்வனாய் செந்தமிழ் அளித்தவன்
விருத்தப் பாக்களில் விதவிதமாய்
உவமையளித்து
திருத்தமாய்ப் பாடி தேனாய் இனித்தவன்
இந்த இப்பிறவிக்கிரு மாதரை
சிந்தையாலும் தொடேன் என்ற
ஏகபத்தினி விரதன்
தந்தை சொல் காப்பாற்றிய தன்மானத் தனயன் ராமன்பெருமை
சுந்தரக் காண்டத்தில் சுகமாய்ச் சொன்னவன்
கம்பனின் கொஞ்சி விளையாடும் கவிதையில்
நெஞ்சு கரையாதவர் இம்மண்ணில் உண்டோ
சொற்களின் தவம் கம்பனவனின் திறமாம் அவனின்
நற்புகழ் காலம்முழுதும் நிலைக்கும் தவப்பயன் பேறு
சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்சேவை---28-9-2018

நெஞ்சுக்குள் நெருஞ்சியாய்த் தைப்பவளே

கஞ்சிக் கலையம் சுமந்து நீ நடக்கையிலே
விஞ்சி நிற்கும் உன் அழகில் மயங்கிப்போனேன்
அஞ்சி நீயும் தொடரும் என்னை பார்த்தபோதே
நெருஞ்சி முள்ளும் நெஞ்சுக்குள்ளே தைத்தடி

நெஞ்சுக்குள் நெருஞ்சியாய்த் தைப்பவளே
வஞ்சியுன் நினைவாலென்னை வதைப்பவளே
கொஞ்சமும் என்மேல் இரக்கம் இல்லையா
தஞ்சம் அடைந்த பின்னும் தயவில்லையா

தைச்ச முள்ளை எடுத்துப்போடமுடியவில்லை
மச்சக்காளை என் இரவும் நீயின்றி விடியவேயில்லை
உச்சத்திலே நானும் மயங்கி உளறிக்கொட்டுறேன்
துச்சமாக என்னை நீயும் நினைக்க வேண்டாம்

அச்சம் வேண்டாம் வஞ்சி நீயும் வந்துவிடடி
சொச்சக் காலமாவது தவிக்க விடாம வாழவிடடி ஊர்
மெச்ச தாலிகட்டி உன்னை வாழ வைப்பேண்டி

சஙகத்தமிழ்அவிதைப்பூங்கா0-----24-9=2018


தூது சொல்லாயோ மாமனிடம்

தூங்காத கண்கள் இரண்டு இங்கே சிவந்து கிடக்குது
தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குது மாமன் நினைப்பு
தூது சொல்லாயோ மாமனிடம்
மாது இவள் துயரத்தை சொல்லு வெல்லக்கட்டியே
மாலை ஏற ஏற எதோ தோணுது
மனசு கிடந்து அடிச்சுக்குது
மாமனை விட வணங்க இங்கு
மறு தெய்வம் இல்லேன்னு சொல்லு
மேக்காத்து அடிக்கையிலும் எனக்கு
வேர்த்துக் கொட்டும் விந்தையையும் சொல்லு
வாசமல்லி தலையில் வச்சாலும் என் 
வாட்டம் பட்டு வதங்கி போகுது
நேசம் கொண்ட மாமன் இல்லாம
காய்ச்சின பாலுகூட கசக்குது
நெஞ்சக்கூட்டுக்குள்ளே பொத்திவச்சேன்
பஞ்சு பொதியைப்போல மாமன் நினைப்பை
மஞ்சத்தாலி கொண்டு வரச்சொல்லு
மாமன்மேல ஆசை வச்ச பொண்ணு 
மனசு புரியலையா குணமே மாறிடுச்சா
இனிமேலும் தாங்காது என் மேல் 
தனி பாசம் வச்சிருக்கிற ஆட்டுக்குட்டியே
தாமதிக்காம போய் வரச்சொல்லு 
தரையிலே போட்ட மீனா நான் துடிக்கிறதை
வஞ்சி மகள் வேதனையில் தவிச்சிகிடக்கேன்
வந்தணைக்க விர்சா வரச்சொல்லு ஆட்டுக்குட்டியே சரஸ்வதிராசேந்திரன்

SaaralTube-தமிழமுது கவிச்சாரல் - ஓவியனும் வரைந்ததில்லையே..- ஆக்கம் சரஸ்வ...

தமிழ்சேவை--24-9-2018

ஆடும் வரை ஆட்டம்
கோடிகளைச் சோ்ப்பதிலே நாட்டம்
கூடி நிற்கும் உறவுகளின் கூட்டம்
தேடியவை கரைந்து விட்டால். வாட்டம்
ஓடிவிடும் உறவுகளின் பாசவட்டம்
ஆண்டவன் படைத்தான் நல் அறிவோடு
ஆணவத்தில் மிதக்கிறான் மனிதன்
செறிவோடு
இருப்பது சிலநாள் இதற்குள் ஏனிந்தஆட்டம்
விருப்பப்படி ஆடுகிறது மனிதகூட்டம்
ஆடும் வரை ஆட்டம்ஆடியபின்
ஆறடி நிலத்தில் அடக்கம்
ஆட்டுவிப்பவன் அந்த பரமன்
ஆடி. களைப்பவன்இந்த பாமரன்
சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்சேவை==19=9=2018


பரிகாரி வல்லவன் தேசிங்கு ராசா

சொரூப்சிங் ரமாபாயின் தவப் புதல்வன்
செஞ்சிக்குப் புகழ் சேர்த்த வீரன் தேசிங்கு
பலமான பாரசாரி குதிரை அடக்கிய
பாலன் தேசிங்கின் வீரக்கதையைக் கேளீர் 

ஆர்க்காடு நவாபின் ஆணை கேட்டு
ஆக்ரோஷம் கொண்டு வீரவசனம் பேசினான்
ஆண்பிள்ளையாய் இருந்தால் வரச்சொல்
பெண்ணாக இருந்தால் அங்கேயே இருக்கச்சொல்லென்று

அரங்கனே அவனின் குலதெய்வம் அவன் 
அனுமதி தராதபோதும் புரவி ஏறிப்புறப்பட்டான்
முன் வைத்தக் காலை என்றுமே
பின் வைக்காத தேசிங்கு ராசன்

நண்பனின் சாவு நெஞ்சைத் தாக்க
முன் பகையும் சேர்ந்து கொள்ள
கர கரவென்றெ வாளைச் சுழற்றி எதிரியின்
சிரங்களைக் கொத்துக் கொத்தாய் எய்தான்

எதிரிகள் எல்லாம் ஓடி ஒளிய
எதிர்த்துப் போரிட எவரும் இல்லா நிலையில்
தனியாய் நாடு திரும்ப விரும்பாத
நனி சிறந்த வீரன் தேசிங்கு

கத்தியை மேலெறிந்து அதைத்தன் மார்பில்
தாங்கி வீர மரணம் அடைந்தான்
பத்து மாதங்களே ஆட்சி செய்தாலும்
பேரும் புகழும் வாய்க்கப்பெற்றவன் தேசிங்கு ராசா

சரஸ்வதிராசேந்திரன்

தமிழமுது கவிச்சாரல்

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் ஓரழகை
காவியமும் கண்டதில்லை கன்னியுன் பேரழகை
வான்நிலவும் கொண்டதில்லை உன் வடிவழகை
மீனினத்தை விஞ்சிடுதே உன் விழியழகு
மானினமும் கொண்டதில்லை உன் மருள் விழியை
தேன்கூட இனிப்பில்லை தேவதையுன் சிரிப்பில்
செந்தாமரை இதழாக சிவந்திருக்கும் செவ்விதழ்கள்
செந்தமிழாய் ஒலித்திருக்கும் உன் சொற்கள்..
கோடியில் ஒருத்தி கோலமயில் ராணி
தேடினாலும் கிடைக்காது தெய்வமகள் பேரழகு
அங்கமெலாம் பரவசமாய் அழகாகி சிறந்ததுவே
தங்கம் போல் மேனி தகதகக்க நின்றவளே
பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தவளே!
நேரிழையே நெஞ்சில் தென்றலென குளிர்ந்தவளே.
மேவிடும் பேரழகுப் பெட்டகமாய் ஒளிர்பவளே
ஓவியனும் வரைந்தில்லையே உன்னைப் போல் ஓரழகை
காவியமாய்ப் பாடிடுவேன் கவினுற உன்னெழிலதனை..
சரஸ்வதிராசேந்திரன்