பரணர்
நக்கீரர் கபிலர் பரணரென்ற முப்பெரும்
புலவரில் முதற்பெரும் புலவர் பரணரேயாவார்
வரலாறு எழுதிய முதல் தமிழர்
எண்ணிறந்த வரலாற்றுச்
செய்திகளால் பரணர்
தொண்மை தமிழகத்தை
கண்முன் நிறுத்துகிறார்
நன்செய்திகள் அல்ல
அத்தனையும் எனினும்
உண்மைச் செய்திகளே
அன்றி பொய்மையன்று
பரணரின் பாடல்கள் கபிலரைவிட குறைவு
பரணர் கூறியவை உண்மைச் செய்திகளே
குட்டுவனின் போர்த்திறம்
மற்றும் கொடைத்திறன்
பற்றிப் புகழ்ந்து
பாடினாரே பரணர்
அதியமானை பாராட்டிய
ஒளவை அங்கு
அழகாகப் பாடினாரே
பரணர் புகழையும்
கடையெழு வள்ளலொடு பழகி
பனுவலார்த்து
வெண்ணிப் பறந்தலை வாகை பரந்தலை
பாழிப் பறந்தலை கூடற் பரந்தலை என
பற்பலப் போரின் பாங்கினை மாற்றா
நற்சொல் புகன்று நயமாய் சொன்ன
ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் கதை
அடி எதுகைகளுடன் அமைந்த பரணரின்
பாடல்கள் இனிதே
உரைத்திடும் ஏற்புடைத்தாய்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக