குறள் மொழி இன்பம்
************************
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்
காதலாய் கண்ணே உள(1099)
_________________________________
கூர்விழி அம்பொன்று
உணர்வினைத் தாக்க
உயிரும் உருகிட
காதலாய் மலர்ந்ததே
கன்னியின் காதலறிய
காளை அவளை
நாடியே நிற்க
ஊரறியாமல் உறவறியாமல்
பாராமுகமாய் நின்றாலும்
பாவையின் உடல்மொழி
காதலை உணர்த்த
கண்டவன் அகமும்
களிப்பில் மிதந்ததோ
ஏதிலார் போலப்
பொது நோக்குதல்
மற்றவரை ஏய்க்கும்
பழக்கம் காதலர்களுக்கே
உள்ள சாகசமன்றோ ?
சரஸ்வதிராசேந்திரன்
நடுவர் அருண் பிரசாத்
Saraswathi Rajendran
பாவையின் உடல்மொழி காதலை உணர்த்த களிப்பில் மிதந்த காதலன் நிலையை உரைத்த கவிதை சிறப்பு கவியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக