*நாணும் * விட்டேம்*
தொட்டுச் சுவைத்ததை
விட்டுப் போனதேன்
பூவைக் கொய்தவன்
பூச்சூடாமல் போவதேன்
பற்றறுத்துப் போனதால்
பதறிப்போய் நிற்கிறாள்
நீயின்றி வாழ்வேது
நீரின்றி உலகேது
பெண்ணவள் நாணம்
கைவிட்டாள்உன்னாலே
நம்பிய நங்கையை
நடுவழியில் விடலாமா
ஊர்வாய்க்கு அவலாகி
பேர்கெட்டு நின்று
புலம்பித் தவிக்கிறாள்
பூவையின் துயர்தீர்க்கவா
கண்ணாய்க் காப்பது
கணவன் கடமைதானே
கடிதாய் வந்து
கடிமணம் புரிந்திடு
உன்னிடம் தன்னை
ஈந்தவளின் உறவை
ஊரார் தூற்றாமல்
உணர்ந்து காத்திடுவாய்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran சிறிதே உரைக்கினும் நலம்பட உரைக்கும் கவிதை நனிசிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக