வெள்ளி, 10 மார்ச், 2023

குறள் மொழி இன்பம் 84 ஒருநாள் எழுநாள்போல்

குறள் மொழி இன்பம் 84
ஒருநாள் எழுநாள்போல்
***************************
கண்டான் காதல் கொண்டான் மணம்
பூண்டு இன்பம் துய்த்து வாழ்ந்தாலும்
வருங்காலம் நினைத்து வழுவாது வாழ
பொருள்வயின் பொருட்டு பிரிந்து சென்றான்
பிரிந்தவர் வரக் காலதாமதம் ஆக
விரிந்த மனமோ தாமரையாய் கூம்பியது
அவனை எண்ணி எண்ணி குமைந்து
உளநிலை வாடி உடலும் மனமும்
பொலிவிழந்து மெலிந்து நலிந்தே போனது
நாள்பல கடந்தோடப் பிரிந்தவனைக் காணாது
நான்யினி பொறுத்தி டேன் தோழி
வாலறுந்த பல்லியாய் துடிக்குது மனம்
அதிதுயர் நெருப் பேற்றி விட்டான்
ஒருநாள் தோன்றுகிறது எழுநாள் போலே
மரமேறி அவன் வரும் பாதை
காண மனம் ஏங்கித் தவிக்குது
தடைதாண்டி அவன் வரும் நாளில்
மடைதிறந்தார் போல் ஓடி ஆரத்தழுவி ட
இல்லை யென்றாகும் என் நோயும்
சரஸ்வதி ராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக