வெள்ளி, 10 மார்ச், 2023

பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி

 பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி

கரிகால் வளவனை பரிசில் வேண்டி
பாணன் இணையாய் சென்ற இவளோ
அங்க அழகில் தங்க அணங்காய்
காண்போர் எவரையும் வருத்திடப் பிறந்தவள்
கோலமயில் தோகையென
கோதையவள் கூந்தலும்
பிறை நிலவென்னப்
பிறங்கிய நெற்றியும்
வில்லினை யொத்த
விற் புருவமும்
கள்ளூரும் கனியிதழ்
கொவ்வைச் செவ்வாயும்
முத்துப்பல் வரிசை
பளிங்குபோல் ஒளியுமிழ
கத்தரிப் பிடியெனதாழ்தொளை
செவிமடலில் மகரக்குழையாட
காந்தள் மலரென
கைவிரல்கள் அழகூட்ட
மாங்கனி போன்ற
கொங்கை யழகும்
சிறுத்த அவள்
இடை யழகும்
தத்தையின் மூக்கென
வளைந்த நகங்களும்
யானையின் துதிக்கைபோல்
பருத்தத் தொடைகளும்
இங்ஙனமாக பேரெழில்
கொண்டே திகழ்ந்தனள்
பெண்மையில் நிகர்த்த
பெருந்தகைமை யுடையப்பாடினி
சரஸ்வதிராசேந்திரன்
Kesavathas
Saraswathi Rajendran பாடினியின் உறுப்பு வளச்சிறப்பு எழிற் கவிதையாய் வரையப்பட்டுள்ளது!கவிதை சிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக