வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தமிழ் பட்டறை பகுதி -24 கதைபோட்டி

தமிழ் பட்டறை --பகுதி 24
தன் ஒரே மகள் சுவாதி வேற்று ஜாதி மனிதனை மணந்து கொண்டதில்
கோபமும் ஆத்திரமும் வீறுகொண்டெழுந்தது. ரெங்க நாதனுக்கு
’’அம்மா இல்லாத பெண் என்று உனக்கு இடம் கொடுத்தது தவறுன்னு இன்னைக்கு உன் செயலாலே நிரூபிச்சிட்டே .இப்படி செய்ய உனக்கு வெட்கமாயில்லே வெளியூரில் உன்னைத் தங்கி படிக்க வைத்தது இதற்குத்தானா? என் வைதீக பூஜை புனஸ்காரத்திற்கு இது ஒத்துக்கொள்ளாதுன்னு தெரிஞ்சும் ….’’
‘’போதும்ப்பா நிறுத்துங்க,அப்பா இவரைப்போல தங்கமான மனுஷனை
எனக்கு நீங்க மாப்பிள்ளையா கொண்டு வரமுடியாது எனக்காக இன்று அவர் முழு வெஜிட்டேரியனா மாறியிருக்கார் என் பிரியத்துக்காக இந்து சமய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு இந்துவாக மாறியிருக்கார்.
நம்பிக்கையும் விசுவாசமும் உள்ள யோக்கியன் தான் உயர்ந்தஜாதி மனுஷன்னா அதுஎன் பீட்டர் என்ற ரகுதான் உங்களைவிட நம்மைவிட உயர்ந்தஜாதிக்காரர்,, நீங்கள் அவரை எத்தனை கேவலமாக விமர்சித்தாலும்
அவர் அதை பொரருட்படுத்தாமலும் சாத்வீகமாக நடந்து கொள்வதிலிருந்தேய்ஹெரியவில்லையா இவரல்லவா பரம வைஷணவர் இவரிடம் பொருந்திருக்கும் சகல் லட்சணங்களும் உங்கள் கண்ணில் ஏன் படவில்லை ? உங்களுக்கு இஷ்டமிருந்தால் எங்களுடன் இருங்கள் இல்லையெனில் தனி வீடெடுத்து வைக்கிறேன் உங்க பூஜை புனஷ்க்காரங்களுடன் நீங்க உயர்ந்த ஜாதிக்காரராகவே இருங்கள்.
கோபமாக வெளியேறிவிட்டார் ரெங்க நாதன் மனசஞ்லத்தோடு நடந்தவருக்கு எதிரில் வந்த கார் மோதியதில் தூக்கி எறியப்பட்டார்
சுவாதியும் ரகுவும் அவரை ஆஸ்பிடலில் சேர்த்து கவலயோடு நிற்க
டாக்டர் அவருக்கு ரத்தம் சேதமாகி விட்டதால் உடனடியாக ரத்தம் கொடுத்தாக வேண்டும் என்று சொல்ல ‘’’அவர் க்ரூப் ரத்தம் கிடைக்காமல்
ரகுவே ரத்தம் கொடுத்து காப்பாற்றினான் .சுவாதி அவருயிர் வாழ்வதற்கு
ரகுதான் காரணம் என்று வீட்டிற்கு வந்ததும் சொல்ல –தன் தவறுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டைனை என்று வெட்கித் தலை குனிந்தார் ரெங்க நாதன்

 எழுத்தாளர் ஆகலாம் வாங்க பகுதி 24 /முடிவு: 
*******************************************
முத்திரை எழுத்தாளர்கள் 
******************************
1)எழு.Rameshkumar
காலத்திற்கேற்ற கட்சிதமான கதை
2)எழு.Saraswathi Rajendran சாதிமறுப்பு காதல் திருமணம் & ரத்ததானம் சமூக விழிப்புணர்வோடு முடிவோடு பொறுத்தமாய் இருந்தது!


ஜுலை மாத கவியருவி

ஜூலை மாத கவியருவில் என் தத்துவ கவிதையைவெளியிட்ட கவியருவி தலைவருக்கும் ,மற்றும் குழுவினருக்கும் வடிவமைத்த தஷன் அவ்ர்களுக்கும் நன்றி

ஜுலை கொலுசு இதழில் வெளியான என் குறுங்கதைகள்

ஜுலை கொலுசு இதழில் வெளியான என் குறுங்கதைகள்
கொலுசு இதழுக்கு நன்றி

கவியருவி நோன்பு கவிதை

நோன்பின் மாண்பு
உரித்தது யாவும்
உயரிய தாக்கும்
உயரதின் நன்மை
உயிருற வைக்கும்
உய்விக்குமாம் நோன்பு
உடலமைதி கொஞ்சும்
உயிரருள் விஞ்சும்
உள்ளொளி கிட்டும்
உள்நிற்கும் ஆன்மமே
உணர்த்தும் நோன்பு
அருளின் மகிமை
அறிந்திட ஓதும்
அனுபவம் சொல்லும்
அனைத்தும் சிறக்கும்
அருமருந்தாம் நோன்பு
இறையருள் கூட்டும்
இறப்பையும் வெல்லும்
இறையொளி யாவும்
இயங்கும் சக்தியே
இரமலான் நோன்பு
நன்மை சுரக்கும்
நஞ்சினை நீக்கும்
நம்பிக்கை ஊறும்
நயம்பட வைக்கும்
நன்மருந்தாம் நோன்பு
சுழல்போல் துன்பம்
நிழல்போல் தொடரும்
ஆழ்மனம் ஒன்றே
ஊழையும் வெல்லும்
விழைவனதருமாம் நோன்பு
தொழுகை ஒன்றே
தொய்விலா வாழ்வு
தொடரும் செயலால்
தொடர்ந்திடும் நன்மை
தொழுகையாம் நோன்பு
சரஸ்வதிராசேந்திரன்

அமுதசுரபி படம் பார்த்து கவிதை --ஜீன் 24

படம் பார்த்து கவி--தமிழ்க்கவிதை(அமுத சுரபி புத்தகம் )
கலக்கல் பார்ட்டிகளாய்
சளைக்காத பாட்டிகள்
கடைக்குப்போகணும்னாகூட
நடையா நடக்கனும் ஒரு நேரம்
சுயம்பாய் சுழலுகிறோம்இன்று
சுயபுத்தி கொண்டு நாங்க
வியக்கும் இந்த செயல்களால்
வீதியில் போவோர்களெல்லாம்
வாய் பிளந்து பார்க்கிறார்
அண்டாகுண்டா தூக்கியகை
ஹோண்டாவையும் ஓட்டுது பார்
முதுமை அனுபவம்முக்கியம்
விதையாய் முளைந்துவரும்
சிரிக்கின்ற பெண் உள்ளங்களே !
சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் உங்களையும்
உற்றது உணர்ந்தே உயர்ந்தோங்கிவாழ்வோம்
ஆற்றும் செயல்கள் எல்லாம்துணிச்சலால்தான்
அவ்வை சண்முகி என்று சொன்னாலும்
சந்திரமுகி என்று சொன்னாலும்
சந்திர மண்டலத்துக்கும் போகும்
சரித்திர பாட்டிகளாய் இடம் பெறுவோம்

அமுதசுரபி மே 23

‪#‎அமுதசுரபிரபி_ஹைக்கூ_புத்தகமாகும்‬ சிறந்த ஹைக்கூ வெற்றியாளர்கள் !!! தேர்ந்தெடுக்கப்பட்ட ‪#‎ஹைக்கூக்கள்‬
+++++++++++++++++++++
சரஸ்வதிராசேந்திரன்
சிரிப்புக்கு பஞ்சமில்லை...
See More

மே 25 நிலா முற்றம்

நிலா முற்றம்
மரப்பாச்சி பொம்மை
மருத்துவ குணம்கொண்ட மரப்பாச்சி பொம்மை அது
மரசிற்பியின்கை வண்ணத்தின் சிறு பதிப்பு கலைவடிவத்தின்
சீரமைப்பு கோவில்சிலை போல
தாய் தன்னைக் குளிப்பாட்டி
வாய் முகம்துடைத்துபவுடர் அடித்து பொட்டிட்டு
ஆடையுடுத்தி அழகு பார்ப்பதுபோல்
குழந்தையும் தன் மரப்பாச்சி பொம்மையை
குளிப்பாட்டிதாவணிபோட்டு பவுடர் அடித்து
பொட்டிட்டு சாதம் ஊட்டி சீராட்டி
பொம்மைக்கு உயிர் கொடுக்கும்அழகே அழகு
வண்ணமும் அலங்காரமும் இல்லாத
மரப்பாச்சி பொம்மையை குழந்தை
தங்களைப்போலவும் தங்களில்
ஒன்றாகவும் கருதினர்அன்று கல்யாண சீரில் கூட இந்த
மரப்பாச்சி பொம்மை இடம் பெற்றது
ஆணென்றும் பெண்ணென்றும்
அண்ணன் தம்பி தங்கை என்றும்
குடும்ப செட்டுகளே உண்டு மரப்பாச்சியில்
குடும்ப உறவுகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்த
கால ஓட்டத்தில் காணாமல் போனது
மரப்பாச்சி பொம்மை மட்டுமல்ல
உறவுகளின் கட்டமைப்பும்தானே

கவியருவி மே இதழ்

கவியருவி மே இதழில் என் படைப்பு

May 19
கவியருவி மே இதழில்--என் துணுக்குகள்
பெட்டி போட்டி
‪#‎அமுதசுரபிகவிதைப்புத்தகம்‬ - 03 - 83
Saraswathi rajendran எழுதிய கவிதை இன்றைய தேர்வு
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
கவிதை வரிந்த அத்தனைக் கவி ஓவியர்களுக்கும் மகிழ்வுடன் நன்றி
தேர்வு பெற்ற கவிதை...
See More

புதன், 3 ஆகஸ்ட், 2016

வல்லமை புகைப்படபோட்டி --70

வல்லமை புகைப்படபோட்டி --70
எல்லைச்சாமி, காவல் தெய்வம் என்று தெய்வங்கள் பல இருந்தாலும், நாட்டில் கொலையும், கொள்ளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடந்த வண்ணம் உள்ளனவே. காவல் தெய்வமே கடமை மறந்து நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயோ? என்று நாட்டின் உண்மை நிலை குறித்த கருத்தினை எடுத்துக் கூறியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன்
முன் பெல்லாம்
கண் முன் தெய்வம்
தோன்றுமென சொல்வார்கள்
அன்றாடும் அற்புதங்கள்
ஆற்றும் அதிசயங்கள்
அரங்கேறி உள்ளன ஆனால்
கடமைகள் மற ந்து நீயும்
தடம் புரளுவது ஏன் ?
இறைவன் உண்டு என்று
இறைவனை ஏத்தியே
எழுதினார்கள் பாக்கள் அன்று
இயற்கை சீற்றம் தந்தாய்
எங்கள் தவறென உணர்ந்தோம் வெளியில் செல்லும் பெண்களை
பலியிடும் ஆண்களை கண்டும்
காணாதது மாதிரி இருப்பதேன்?
கொலை கொள்ளை என
கொலைக்களமாக மாறியிருக்கும்
தமிழகத்தை காக்கமல் இருப்பதேன்
தளர்ந்து போயிட்டாயா அல்லது கை
தாழ்ந்துபோய் நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயா?
வானகம் சாட்சி
வையகமும் சாட்சி
எல்லை சாமியே நீ இனியாவது
கொலைச் சாமியாகாமல் உன் குலப்
பெண்களுக்கு கொடுமை நேராதுகாத்திடு
துக்கம் துயரமெல்லாம் தூரம் போக
திக்கு திசையெட்டும் அருளாலே
மக்களை மக்களாக வாழவிடு
மாக்களாக மாற்றாமல்!
எஞ்சியுள்ள காலமாவது இனியதாக
வஞ்சகங்கள் சூழாமல் காப்பாயாக எல்லை சாமியே

வல்லமை புகைப்படபோட்டி ,69

வல்லமை புகைப்படபோட்டி ,69
பாராட்டிற்கு நன்றி வல்லமைகுழுவிற்கும் முனைவர் காயத்ரி பூபதிக்கும்
விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.
அலைகள் வந்து வந்து
அலைக்கழித்தாலும்
கலையாத மனதுடன்
விட்ட இடத்திலிருந்து வீட்டை
கட்டி முடித்தஇந்த சிறுவர்கள்
கடைமை யுணர்வு கொண்டவர்கள்
வெற்றிக்கனியை விடா முயற்சியால்
எட்டிப்பிடித்து கொடியையும் நாட்டிவிட்டனர்
மணல் வீடானாலும் அவர்களின்
மன வீடு இது மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா?
கற்பனைத் திறத்துடன்
காரியம் ஆற்றிடும்
விற்பனர்கள் இவர்கள்
இவர்களே !
நாளைய கட்டடத்தின்
செங்கற்கள்
எதிர்காலச் சூரியனை
உருவாக்கப்போகும்
ஒளிக்கற்றைகள்
பார்வையாளர்கள் அல்ல
படைப்பாளிகள் !
பாராட்டித்தட்டிகொடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்