சனி, 11 மார்ச், 2023

குவளைப் பூக்கள்

 குவளைப் பூக்கள்

கூறிடும் பாக்கள்
மலைப் பக்க
சுனைகளிலும்
கழி பொய்கையிலும்
குவளை மலரே
குலுங்கிச் சிரிக்கிறாய்
கழுத்தளவு நீரில்
ஒற்றைக் காலிலே
நின்று கடும்பயிற்சியுடன்
சங்கீத சாதகம்
செய்கிறாய் அழகாய்
பல்லிதழ் கொண்டே
பங்கயம் போன்றே
வெள்ளை மனத்துடன்
கொள்ளை கொண்டாய்
குவளை மலரே
குவலயம் தன்னில்
குன்றா. அழகாய்
நின்றாய் நிறைவாய்
உதயம் வரவே
உன்னைத் தேடினேன்
உன்னழகில் உருகியே
உவந்து நான் பாடினேன்
இரண்டு நிறங்களில்
இதயம் ஈர்த்தாய்
இனிய காதலிக்கு
கனிவாய் இருந்தாய்
பெண்களின் மையுண்ட
கண்களுக்கு உவமையாய்
தேவாரம் திருப்புகழ்
திருமந்திரம் அனைத்திலும்
திகழ்ந்திடும் மலரே
குவளைப் பூக்கள்
கூறிடும் பாக்கள்
குறுந்தொகையிலும்
மதுரைக்காஞ்சி வரிகளிலும்
நெடு நல்வாடையிலும்
நிறைந்து மணக்கிறாய்
சங்ககால பாக்களில்
சரித்திரமாய் இடம் பெற்றாய்
மங்கையர்கள் பறித்து
மன்மகிழ்வோம் நாமும்
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran பல்லிதழ் கொண்டே பங்கயம் போன்றே
வெள்ளை மனத்துடன் கொள்ளை கொண்டாய்
குவளை மலரே குவலயம் தன்னில்
குன்றா. அழகாய் நின்றாய் நிறைவாய் - சிறப்பான வர்ணனை.
உன்னழகில் உருகியே உவந்து நான் பாடினேன்
இரண்டு நிறங்களில் இதயம் ஈர்த்தாய் - ஆகா..
ஏதோ ஒன்று என இல்லாமல் இரண்டுமே ஈர்த்தது என சொல்லியிருப்பது எந்த நிறக் குவளையும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற உண்மையை அல்லவோ சொல்கிறது..
சிறப்பான கவிதைக்கு வாழ்த்துகள் கவிஞரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக