சனி, 11 மார்ச், 2023

கவிதையும கானமும்

 கவிதையும கானமும்

மணிமேகலைச் சான்றிதழ்
தோழியர் குறும்பில் சொக்கிடும் தலைவியர்
ஏனடி பாங்கி
தோளுக்குத்துணை கிடைத்ததும் இந்த
தோழியை மறந்தனையோ ?
மன்னனின் எதிர்பார்ப்பில் எனை மறந்து
உன் நடையில் மானின் துள்ளல் வந்தது எப்படியோ?
அவன் தேகமெல்லாம் வீரம் சொட்டியது
என்று நான் சொன்னதும்
உன் மேனியில் வெட்கம்வந்து ஊஞ்சல் கட்டுது அவன்
கவிகம்பனின்மகனோ?உன்காதலன்கலைகள்முற்றும்அறிந்தவனோ?
உன் ஆசை நாயகனை எண்ணி எண்ணி
உன் தலையணை தீயில் வேகுவதை கண்டேன்
பசலை நோயில் இடை நழுவும் ஆடையைப் பார்த்தேன்
புதிரான பூவுக்குள்ளே புரியாத ராகம்
நெஞ்சுக்குள் ஓடும் மின்னல் தெறிப்பிலே
பஞ்சுக்குள் தீ பற்றுவதையும் ஏனடி மறைக்கிறாய்
காதல் பேசும் பூங்கொடி உந்தன் ஆசை என்னடி”
வெட்கம் என்னிடம் ஏனடி
மனசைவிட்டு சொல்லடி நானும் கேட்கிறேன்
தலைவி=
தோழி சம்பிரதாயம் தாண்டி அவன் வரும் நேரம்
சட்டென்றுவாராதோ ? ஏங்கியும் தேங்கியும்
கிடக்கும் உண்மையை எடுத்துச்சொல்வாய் தோழி
தோழி-
உன் கைகள் மீட்ட
உயிர் வீணையொன்று உருகி நிற்கிறது
என்றுஎடுத்துச்சொல்கிறேன் உருகாதே தோழி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக