காதலற்ற கோடை காலம்
தணலாய் கொதித்தது தார் ரோடு
வாய்க்காலும் குளமும்
வறண்டு கிடந்தன
வயலிலும் பாளம்
பாளமாய் வெடிப்புகள்
தாகம் தாங்காமல்
தவிட்டுக் குருவிகள்
கீச்சு கீச்சுவென்று
கத்திக் கொண்டிருந்தன
வெயிலின் தாக்கத்தால்
வீதிகள் வெறுமையாகின
நீர் நிலைத்தேடி
அலைந்தன விலங்குகள்
வெயிலைப் பொருட்படுத்தாமல்
அவளுக்காக காத்திருந்தேன்
அன்பானவள் வரவில்லை
பச்சை விளக்கு
காட்டி என்னை
மகிழ்விக்க ஏனோ
அகம்வாடி முகம்வாடி
வியர்த்து நின்றேன்
காதலற்ற கோடை
காலம் உணர்த்தியது
அவளின் நிராகரித்தலை
கசப்பில் நான்
வெடித்துக் கிடக்கும்
விளைநிலமாய் இதயம்
வறண்டு போனது
வசந்தம் இவ்லாது
வெப்பத் தீயில்
எரிந்து கொண்டிருக்கிறது
தணல் சுடும்
நிலையானது தளர்
நடை தடுமாறுது
காதலற்ற கோடைகாலம்
கனவாகப் போனதால்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக