நிழல்
*********
நானும் நிழலும்
சேர்ந்தே பிறந்தோமோ
அதனால்தான்
புரியவில்லை
வெறுமனே இருக்கும்போது
சமப்பட்டிருப்போமோ
அதுவும் தெரியவில்லை
வெளிச்சத்தில்
என்னை வேவு பார்ப்பதுபோல்
எப்பொழுதும்
என்னைப் பின்தொடர்ந்து
இரவு நேரத்தில்
உறங்கி விடுமோ?
என்னைப் பின்தொடர்ந்து
என்னைபாதுகாக்கும்
பாதுகாவலனாக
உருவமற்ற
குறளனாகவே
இருக்கிறது எப்போதும்
நிழல்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக