நெடு வெண்ணிலாவே
நீள்குறிஞ்சி காட்டில்
நெடுவெண்ணிலா ஒளிர்ந்திட
கடிமணம் புரியாது
களித்திடல் தவறென
அளித்திட்டாள் அறிவுரை
தெளித்திட்டாள் நற்சொல்லை
நெடுவெண்ணிலாவே நீ
நீண்டாயானால் நீளும்
நினது துணையுடன்
இருவரின் களவொழுக்கம்
என்னுயிர் தோழி
இதுவென்ன நீதி
மாசற்ற அன்புதானே
மன சாட்சியாகும்
வெண்ணிலவே உன்சக்தி
வியப்பினை ஊட்டும்ஆனால்
விளைவினைக் கூட்டுமே
வெளியில் தெரிந்தால்
உற்றமும் சுற்றமும் ஏன்
ஊரும் பழிசொல்லுமே
நெடு வெண்ணிலாவே நீ
நீளுதல் குரைக
விடுக்கின்றேன் வேண்டுகோள்
படுகின்ற வேதனை
பட்டழிந்துப் போக
விரைந்து வா தோழியின் காதலா
நாடி வருவாய் கடிமணம் புரிவாய்
நல்ல நண்பனே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக