சனி, 11 மார்ச், 2023

வம்ப மழை

 வம்ப மழை

விழிகள் கலந்து
இதயம் நுழைந்து
உருகியே உயிரில்கலந்து
நறுமணம்வீசி நுகர்ந்திட
நிலைப்படும் அன்பால்
அகப்படும் யாவும்
நலமேபெற்று அன்பில்
திளைத்துக் கிடக்கையில்
பொருள்வயிற் பிரியும்
தலைவன் செயலால்
பிரிய மனமின்றிப்
பிழிய அழுதவளை
தேற்றிச் சொன்னான்
கார்காலம் வருமுன்னே
ஊர்வருவேனென சொன்னான்
அடியே என்னுயிர்த்தோழி
கார்காலம் வந்து
முல்லையும் பூத்தது
காணேனடியென் தலைவனை
கலங்கி தவித்த
தலைவியைத் தேற்றினாள்
அவளுயிர்த் தோழி
பருவம் மாறி
பெய்யும் மழையினால்
உருகிநீ மயங்கலாகா
காலம் தவறியமழையின்
கோலத்தால் முல்லைபூத்தது
வம்ப மழைகண்டுநீ
துன்பம் கொள்ளாதே
உண்மையறியா துழன்றுத்
தவிப்பது அழகல்ல
சொல்லைக் காப்பவன்
முல்லைத் கொடியுன்னைத்
தாங்கிடத் தலைவனவன்
நெஞ்சினிக்க நிம்மதித்தந்து
கொஞ்சி மகிழ்ந்திட
கார்மழை வருமுன்
காதலன் வருவான்
சரஸ்வதிராசேந்திரன்
kesavadas
Saraswathi Rajendran சரளமாக தரளமாக வந்துவிழும் வளமான வலுவான வார்த்தைகள் கவிதையின் வலு!
பிரிய மனமின்றி பிழிய அழுதாளாம்!
இந்தச் சொல்லாடல் அபூர்வம்!
காலம் தவறிய மழையின்..
முதல் இறுதி வரை கவிதையின் வேகம் பரியின் வேகமோ பரிதியின் வேகமோ!
கவிதை பேரழகு வாழ்த்துகள் கவிஞரரே
No photo description available.
Boost this post to reach up to 408 more people if y

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக