குறள்மொழி இன்பம் 76
துறந்தான் அவர்
பசந்தாள் இவள்
முன்னிரண்டு நாளில் முனைப்பாகக் காதலித்தவன்
பூரிக்க வைத்து புளகாங்கிதம் அடைந்தவன்
பொருள் வயின் பிரிந்தனன் தலைவன்
;பிரிவாற் றாமையால் பேதலித்தாள் தலைவி
சித்திரப் பூவிழி சிற்றிடை மெலியும் விழி
முத்திரை பதித்த முகமதும் கருத்திட
மன்மதனின் மந்திரங்கள் இல்லாமல் மனம்வாடி
மன்னவனின் நினைவு கிள்ளுவதால் மேனியுருகுதே
வனிதையின் மேனி வனப்புக் குன்றிட
வருந்தி அலைவதைப் பார்த்து பரிதாப்படாமல்
வாய்க்கு வந்ததைப் பேசுதல் நியாயமோ ?
வதந்தியைப் பரப்பி வசைபாடல் தகுமோ
என்னின் மனது பாங்கியரே புரியலையோ
இன்னுமென்ன தாமதமோ மன்னவனுக்குச் சம்மதமோ
என்கண்ணில் நீர்வரக் காரணம் யாரு ?
காரணகர்த்தாவை விட்டு கன்னியை சாடுவதா?
கடமையை மறந்தவனை அழைத்து அறிவுறுத்துங்கள்
உடமையானவள் கவலையில் உழன்று வாடுவதை
என்னுள் உள்ளவனே இனியும் தாமதிக்காது
கண்மணி உன்னவள் தாபத்தை தீர்க்கவா
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக