நாலடியார்
காலாடு போழ்தில், கழிகிளைஞர், வானத்து
மேலாடு மீனிற் பலராவர்,-ஏலா இடரொருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட ‘தொடர்புடையேம்’ என்பார் சிலர்.
(பாடல் எண் 113)
கோடியாய் குவித்து வைத்தால் வருவர்
வானத்து விண்மீன்களாய் உறவும் நட்பும்
சொந்தம் கொண்டாடி சுகத்தை அனுபவித்து
ஆடிப் பாடியே கும்மாளம் போடுவர்
நிறையும் சுவையாய் நிறைய இனிக்கும்
குறையும் செல்வம் குதூகலம் அற்றிடும்
கூடவே இருந்த உறவும் நட்பும்
உருண்டோடிய செல்வம் போல் ஓடிடுவர்
காசாசை உள்ளத்தால் காலம் கழித்தவர்
வீசிடும் காற்றில் தூசாய் பறந்திடுவர்
வேண்டி விரும்பி விழைந்த உறவுகள்
தீண்டத் தகாதவர் போல் ஓடிஒளிவர்
ஓடை வற்றிப் போன பின்
ஒதுங்கி நிற்கும் பறவை போல்
ஓடிப் போகும் உறவும் நட்பும்
உணர்ந்திடுவீர் அகற்றிடுவீர் வேண்டா உறவுகளை
சரஸ்வதிராசேந்திரன்
Boost this post to reach up to 6 more people if you
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக