" குறள்மொழி இன்பம் 126
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
இல்லறம் இனிதாய் நடந்தாலும் தலைவன்
நல்லறமாக பொருள் வயின்பால் பிரியஎண்ணி
எண்ணிடும் எண்ணங்கள் ஏற்புடைத்ததால் சம்மதித்தாள்
சென்ற ஒருநாளிலேயே சிரிப்பை மறந்தாள்
என்றும் காணும் மகிழ்ச்சி இல்லையவளிடம்
உள்ளத் தெளிவின்றி உழன்றாள் கவலையில்
தொல்லைத் தந்த மனதை அடக்கத்தெரியாமல்
துவண்டாள் கண்ணுறக்கம் இன்றி தவித்தாள்
குறைவுள நெஞ்சில் குறுகும் அறிவும்
அறிவால் அறிய அறிந்திட லாகா
அறிவைத் தாண்டி உணர்ச்சி மேலிடுது
புரியாமல் ஏனோ புண்பட்டுப் போகிறாய்
உரியவன் வருவான் பசலை ஏனடி
கடமைக் கருதிப் போனவன் திரும்பி
உடமை நிறைவோடு உனைத்தேடி வந்திடுவான்
விளக்கு அணைந்தால் சூழும் இருள்போல்
அவனின் அணைப்பினை காணாது இருப்பின்
உள்ளத்தை உறுத்துகிறது மேனியில் பசலை
அணையா விளக்காய் அவனைத் தழுவுதடிதோழி
சரஸ்வதிராசேந்திரன்
அருணபிரசாத்
Saraswathi Rajendran
மேனியில் அணையா விளக்காகத் தலைவனைத் தழுவத்தேடும் தலைவியின் மனப்பாங்கை எடுத்துரைத்தக் கவிதை சிறப்பு கவியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக