மலர் பண்பாடு
தமிழர் பண்பாட்டின் அடையாளம் மலர்கள்
எழிலருள் இன்பங்கள் ஈந்திடும் வீடு
இணைத்து பிணைத்துஇயங்கவும் வைத்த
ஐந்துவகை நிலத்தினை அறியவும் பயன்பட்டது
சிந்தனைகள் ஒன்றாகி பந்தமாகி நின்றது
பல வண்ணம் கொண்ட மலர்களில்
சில மட்டுமே பூசைக்கு ஏற்றது
பூத்து நிற்கும் சோலையில் புதுமலர்
பூமகளின் கூந்தலில் அழகாய் வீற்றிருக்கும்
மனிதர்களின் மங்கல விழாவில் மணம்பெறும்
மரண நேரத்திலும் மலர்களே அஞ்சலியாகும்
மலராய் மணமாய் மறைகள் ஓதி
பலருள் புகுந்து பயனருள் ஓம்பிநீன்றது
அகவாழ்விலும் புறவாழ்விலும் சிறப்புப் பெற்றது
ஏகமாய் சுடர்வீசி இயங்கியது சங்ககாலத்தில்
அருள்பெறும் வாழ்வே அதனூங்கு முண்டு
மருத்துவத் திற்கும் மலர்கள் துணையுண்டு
மகிழம்பூ முகர வாந்தி நிற்கும்
மந்தாரப்பூ உடல் கொதிப்பு நீக்கும்
வெற்றிபெற்ற மன்னவனின் மலராடும் வாகைமலர்
போரில் வீரமரணம் அடைந்தவருக்கு புகழ்மாலை
காதலுக்கு தூது போக மல்லிகை
தூதுவனாக போவோரும் அணிவதொரு மாலை
செம்பருத்தி வெட்டைச் சூடை நீக்கும்
செண்பகப்பூ வாத நோய் போக்கும்
ஏகனின் ஆட்சியில் எல்லா மலர்களும்
எழிலார்ந்த வாழ்க்கையில் இடம் பெற்றது
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
மனிதர்களின் மங்கல விழாவில் மணம்பெறும்
மரண நேரத்திலும் மலர்களே அஞ்சலியாகும்
உண்மைதான் கவிஞரே.
அருள்பெறும் வாழ்வே அதனூங்கு முண்டு
மருத்துவத் திற்கும் மலர்கள் துணையுண்டு
மகிழம்பூ முகர வாந்தி நிற்கும்
மந்தாரப்பூ உடல் கொதிப்பு நீக்கும்
செம்பருத்தி வெட்டைச் சூடை நீக்கும்
செண்பகப்பூ வாத நோய் போக்கும்
கவிதையில் மருத்துவம் சொன்னமைக்கு
சரஸ்வதியே நன்றி.
தமிழர் பண்பாட்டின் அடையாளம் மலர்கள்
எழிலருள் இன்பங்கள் ஈந்திடும் வீடு
இணைத்து பிணைத்துஇயங்கவும் வைத்த
இணையிலா தொண்று ஈசன்கண் கூடு.
சிறப்பான ஆக்கம்
வாழ்த்துகள் கவிஞரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக