வெள்ளி, 10 மார்ச், 2023

சூல் வயிற்றுச் சித்திரம்

 சூல் வயிற்றுச் சித்திரம்

**************************
விடாய் நின்ற
சிலநாட்களில்
மேடிட்ட வயிறையும் பெருக்கும்
மார்பையும் பார்க்கையில் மகிழ்ச்சி ரேகைகள்
மனச்சித்திரத்தில் ஓடியது
பெருக்கெடுத்து ஓடும் மனப்
பெருக்கில் இனம் புரியாத
இன்பம் எழ
சிறகின்றி பறக்க முயல்கிறேன்
யார் மாதிரி இருக்கும்
கருப்பா இருக்குமா
சிவப்பா இருக்குமா
இடைவிடா கேள்விகள்
இதயத்தில் உருளும்
வயிறு சிலநேரம்
அதிரும் போது மகிழ்ச்சியில்
வயிற்றில் கைவைத்து
அசையும் அழகை
அனுபவித்து ரசித்து
பூரிப்பு கொள்ளும் மனது
மொட்டு மலரும்நாளுக்காய்
காத்திருக்கையில்
கருவேப்பிலைச் செடியில்
கூடுகட்டியிருந்த
தேன்சிட்டின் முட்டைகள்
உடைந்து குஞ்சொன்று
வெளிவந்து முழிச்சுப்பார்க்க
குதூகலமாய் உணர்கிறேன்
வலி வந்து வாய்விட்டுச்
கதறியபொழுது
வெளிவந்த மழலையின்
குரல் கேட்டு வலி மறந்த
அதிசயம் இறைவனால்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran இயல்பான விவரிப்பு கவிதைக்கு கதையின் சுவாரசியம் தருகிறது!
'மொட்டு மலரும் நாளுக்காய் காத்திருக்கும் ' பத்தியின்
கருவேப்பிலைச் செடியும் கூடுகட்டியிருந்த தேன்சிட்டும் முட்டை உடைந்து வெளிவந்து விழிக்கும் குஞ்சும் அழகோ அழகு!
மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
May be an image of 3 people and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக