கோடிபெறும்
அவையில் நிமிர்ந்து வீற்றிருந்த தம்
அவைப் புலவர்களிடம் நவின்றான் மன்னன்
நான்குகோடி பாடல்கள் நாளையே
அசந்தனர் அறிவுடையோா்
அச்சம் கொண்டனர் முடியுமா வென்று
விடிய விடிய எழுதினாலும் பலராலும்
முடியாதே நான்குகோடி பாடல்கள்
பழிகள் சேருமே எழுதாவிட்டால் நமக்கு
அழிவும் நேருமோ நம் உயிருக்கு
புலம்பித் தவித்தனர் புலவர்கள் அனைவரும்
தவிப்போர் நிலையை உணர்ந்து
தாவிவந்தார் அவ்வையும் ஆங்கு
நிலவரம் கேட்டு புன்னகைத்து பின்
கலவரம் வேண்டாம் நானிருக்கேன்
நான்கே நிமிடத்தில் எழுதிக் கொடுக்க
நான்குகோடி பாடலுக்கு நான்கு வரியா
மந்த அறிவால் புலவா்கள்மதிமயங்கிநிற்க
இந்த பாட்டின்பதவுரை கேளுங்கள்
அவ்வை சொல்ல தெளிந்தாலும் பயந்தனர்
அவ்வையே நேரில் சென்று அவையில்
கோடியென்ற வார்த்தை அடக்கிய
பாடலைப்பாடிப் பதவுரை சொன்னார்
மதியார் வாசல் மிதியாதிருப்பது கோடிபெறும்
உபசரிக்காதவர் வீட்டில் உண்ணாதிருப்பது கோடிபெறும்
நல்ல குடிப்பிறப்பு உடையவர்களிடம்
கூடியிருப்பது கோடிபெறும்
கோடிப்பொன் கொடுத்தாலும் உண்மை
பேசும் தன்மை கோடிபெறும்
சூழ்ச்சி செய்த மன்னன் வீழ்ச்சியடைந்தான்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக