ஞாயிறு, 12 மார்ச், 2023

மஞ்சன நீராட வா

 மஞ்சன நீராட வா

வண்ண அழகிய நம்பி நாரணனே
என்னால் ஓடமுடியாது சொன்னால் கேள்
மஞ்சனம் நீராட வந்துவிடு மணிவண்ணா
பன்னீரும் சந்தனமும் பக்குவமாய் சேர்த்து
வென்னீர் கலந்து வைத்துள்ளேன் வாராய்
வெண்ணெய் அளைந்த கரமும் நீ
விளையாடிய தெருப் புழதியும் சேர்ந்து
உடலில் ஒருவித நாற்றம் வீசுகிறது
கட்டிலில் இரவு நீ படுத்துறங்க
உன்னை நான் அனுமதியேன் ஓடாதே
பாலில் வெல்லம் சேர்த்து உனக்குப்
பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன்
நன்னாளாம் நீ பிறந்த திருவோண
நந்நாளில் மஞ்சன நீராட வாராய்
நாரணா ஓடாதே கோகுல கண்ணா
ஆயர்பாடிக் கண்ணா ஓயாது உன்னை
ஆய்ச்சியரும் வெண்ணெய்க் குடத்தை உருட்டியதால்
புறம்பேசிச் சிரிக்கின்றனர் புரியவில்லையா உனக்கு
கன்றின் வாலைக்கட்டி கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந்து பாம்பைபிடித்துக் கொண்டாட்டினாய்
காணப் பெரிதும் உவப்பாக இருந்தாலும்
கண்டவர் பழித்துக் கூறுவரே போதும் வா
மாணிக்கமே என் மரகதமே மஞ்சன நீராடாவா
சரஸ்வதிராசேந்திரன் See Less
May be an image of ‎text that says '‎இலக்கியப் பிருந்த ாவனம் இலக்கிய இன்பம் هیاد மஞ்சனம் வாராய் சிறப்புவெற்றியாளர் சர்ன்றிதழ சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்கி மகிழ்கிறோம் E () る‎'‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக