வெள்ளி, 10 மார்ச், 2023

குறள்: 1308 போதல் எவன் மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி

 குறள்: 1308

போதல் எவன் மற்று
நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி
*********************************
கூடல் ஆசையில் அருகில் சென்றான்
ஊடல் கொண்டு தள்ளிப் போனாள்
கொண்டவன் விழிகளில் ஏக்கம் கண்டவள்
மண்டும் புன்னகையை மறைத்தாள் இதழில்
பிஞ்சின் மேனியைத் தொட்டுவிட துடித்தான்
அஞ்சுவிரல் படாமல் ஒதுங்கி நின்றாள்
உள்ளன்பு மிகுந்து உறவாட அழைத்தான்
கள்ளத்தனம் காட்டி எட்டியே போனாள்
விரக தாபத்தில் மறுகி உழன்று
விரக்தி ஆனான் காதல் கணவன்
படரும் கொடியாய் படர நினைத்தவனை
இடராய் நின்று இணைய மறுத்தாள்
காதல் தோற்றால் கண்கள் தூங்குமா
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா?
அன்பில் லா தவரிடத்து எதைப்
பெறுவது?
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of text that says 'பைந்தமிழ் பூம்புனல் குறள்மொழி இன்பம். 113 காதலர் இல்லா வழி வெற்றிச் சான்றிதழ் தழ் கவிஞர் காதலர் இல்லா வழி မ நிறுவனர் மீராஸ்ரீ நடுவர் சுஜி பொற்செல்வி சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக