#இன்பம் (122)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#எரிநுதுப்பேம்..#.
4
கள வொழுக்கம் பழகி களிக்க
கண்ட ஊரார் வாய்க்கது அவலானது
அடங்காத மனதில் ஆசை அதிகமாக
காதலனை எண்ணி காதலி ஏங்க
உணர்ச்சியை அடக்காது நீசெய்த செயலால்
ஊரெல்லாம் உன்னைத் தூற்றுது பாரரென
தோழி கேட்க தலைவி சொன்னாள்
ஊரார் பேச்சால் உள்ளுக்குள் காமத்தீ
நீரினுள் அழுத்த அழுத்த மேலெழும்
பந்தாய் உணர்ச்சிகள் மேலெழும்பி படுத்துதே
உணர்வுகள் தவிக்குது தலைவனை அழைக்குது
உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது
இளம்மேனி சூடாகுது இடம்தேடி போராடுது
எரிதழெல் நெருப்பு எண்ணெயால் அணையுமா
செரிமானத்திற்கு சென்றவன் வரணும் மருந்தாக
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக