பூமணியோ தேர்மணியோ
முல்லை மொக்கு முகிழ்ந்து மணக்குது
எல்லும் சாய எருதுகள் வந்தது
துள்ளித் திரிந்த தலைவியும் ஏக்கத்தில்
எங்கோ கேட்கும் மணியின் ஓசையே
ஓங்கிய உண்மையை உணர்த்துது தோழி
பணியின் நிமித்தம் சென்றத் தலைவன்
என்னவன் வந்திடும் தேர்மணி ஒலியோ
மாலையில் மேய்ச்சல் முடிந்து திரும்பும்
சாலைவரும் ஆநிரையின் கழுத்துப் பூமணியோ
என்னுயிர்த் தோழி கேளடி சேதி
என்னவர் வரும் பருவம் வந்தது
முல்லைக் கொடி படர்ந்த குன்றேறியே
வல்லத் தலைவன் வருகிறானோ என்னவோ?
நாடினம்மை வருமோசை எதுவென கண்டிடுவோம்
பாங்கியே போய் பார்த்து வருவோம்வா
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக