உறுதி மொழி
இந்த படைப்பு என் சொந்த படைப்பு தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ் நாடுஅரசு --தமிழ் இணையக் கல்வி கழகம் நடத்தும் மின்னிதழ் இலக்கியபோட்டிகள்-2015 க்காகவேஎழுதப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .இந்த கட்டுரை இதற்கு முன் வெளியானதில்லை ,இதன் முடிவு தெரியும் வரை வேறு எதிலும் வெளி வராது என்றும் உறுதி கூறுகிறேன் .
என் தலைப்பு ------ உயர்வான வாழ்வுக்கு உருவாக்கு தூய்மையை ...
( சுற்று சுழல் விழிப்புணர்வு ---கட்டுரை )
விழிப்பின் முதல் படி அறிதலில் இருந்தே தொடங்குகிறது . மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதனவாக விளங்கும் ஐம்பூதங்களான காற்று, நீர், நிலம் , நெருப்பு , ஆகாயம் இவைகள் சுற்றுப்புற சூழலால் பாதிக்கப்பட்டால் மனித இனமே அழிந்து போய்விடும் .
பெருகி வரும் வாகனங்களின் புகை நாம் சுவாசிக்கும் காற்றில் கலப்பதால் மாசு படுகிறது . இதை நாம் சுவாசிப்பதால் நம் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது . நிலத்தடியில் தற்போது அளவுக்கு அதிகமாக புளோரைடு
என்னும் மாசு காணப்படுகிறது .இதனாலும் நம் உடல் நிலை பாதிக்கப்படுகிறது .காற்று மற்றும் நீர் மாசு அடைவதால் நாம் கொட்டும் குப்பைக்கூளங்கள்,அதன் மூலம் எலிகள் .கொசுக்கள் தொல்லைகள் , நோய்கள் ஏற்படுகின்றன ,டெங்கு ஜுரம் வரும் வாய்ப்பும் உள்ளது . நிலத்தடி நீரை சார்ந்தே நாம் வாழ்கிறோம் .அந்த நீரில் சாக்கடைகள்,தொற்சாலை கழிவுகள் உருக்காலைகள் போன்ற காரணங்களால் பாதிப்படைகிறது
மரத்தூள்,திருமண மண்டபங்களில் சமைக்கப்படும் அசைவ கழிவுகள் ,பிளாஸ்டிக் போன்றவைகளை பொது இடங்களில் கொட்டுவதால் இவை மண்ணில் படிந்து அந்தமாசுகள் நச்சுகளாக மாறுகின்றன. வீட்டுக்கழிவுகள்’,பாதரசம் போன்ற உலோக கழிவுகளால் கடல் மிக மோசமான பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகிறது .சாலை ஒர்ரங்களில் வைக்கப்படும் பதாதைகள்,திறந்த் வெளியில் குப்பைக்கிடஙுகள் ,திடக் கழிவுகள் ஆகியவைகளாலும் மாசு ஏற்படுகிறது .புற ஊதாக்கதிர்கள் நுண் அலை போன்ற கதிர் வீச்சுகளால் சுற்று சூழல் மாசுபடுகிறது உலக வெப மய மாதல் என்ற பேரழிவுக்கு இந்த நெருப்பு மாசு படுவது ஒரு காரணம் நிலம் ,னி நீர் ,காற்று ஆகியவை மாசு படுவதால் இது பனிப்பிரதேசங்களை உருகச்செய்கிறது இதி கடலில் கலப்பதால் கடல் சீற்றம் .சுனாமி போன்ற பேரிழப்புகள் ஏற்படுகிறது . சாட்டிலைட்,வின் கேமிராக்கள் அதிக அளவிலான பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்குமேல் செயலிழந்த இந்த விகலங்கள் வான் வெளியில் குப்பையாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன அதிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டு பேரிழப்பு ஏற்படுகின்றன ஆகாயமும் மாசு படுகிறது இப்படி ஐம்பூதங்களும் சுற்று சூழலால் மாசு படுவதால் மனித இனமும் அழிவுக்குள்ளாகிறது கண் கூடு
தொழி நுட்ப வளர்ச்சியாலும் , நவீன வசதிகளாலும் சுற்றுப்புற சுழல் மாசுபடுகின்றன
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க யோசனைகள்
பிலஸ்டிக் பொருளை விடுத்து சணல் ,காகித பொருட்களை உபயோகிக்கலாம்
வீட்டிலும் ரோட்டோரங்களிலும் மரங்கள் நடலாம்
வாகன பயன் பாட்டை குறைத்துக்கொள்ளலாம்
செயற்கை உரங்களை விடுத்து இயற்கை உரங்களை பயன் படுத்தலாம்
கடற்கரை ஒரங்களை பாது காக்கலாம்
மழை நீர் சேமிப்பு திட்டங்களை செய்ல் படுத்தவேண்டும்
நீராதாரங்களில் கழிவுகள் கலக்காமல் இருக்கலாம்
மின்சார சேமிப்பை கடை பிடிக்கலாம் ஃப்ரிஜ்,ஏ சி பயன் பாட்டை குரைக்கலாம்
திருமணம் ,தீபாவளி போன்ற நாட்களில் ஆயிரம் வாலா போன்ற வெடிகளை வெடிக்காமல் இருந்தால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும்
இயற்கை வளங்களின் அவசியத்தை யும் ,அவற்றை பாது காக்கக்கூடிய அவசியத்தையும் அடுத்த தலை முறைக்கு சொல்லி கொடுக்கலாம்
கணினியும் ,ஆடம்பர உபகரணங்களையும் அளவோடு பயன் படுத்தலாம்
வாகனங்களில் ஒலி யை குறத்து உபயோகிக்கலாம்
பள்ளிக்கூடங்களிலும்,கல்லூரிகளிலும் பாடங்களாக போதிக்கலாம்
மரங்களையும் காடுகளையும் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை கடை பிடிக்கவேண்டும் வீட்டுக்குப்பைகளை உரங்களாக மாற்றி வீட்டிலேயே நிலத்தொட்டிகள் அமைக்கலாம்
இதை அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்பதில்லை நாம் ஒவ்வொருவரும் முயன்றால்தான் சுற்றுசூழலை பாதுக்காக்கமுடியும் வீட்டில் மரங்களை வளர்த்து மர வளத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆகிஸிஜனை அதிக அளவில் பெறமுடியும் இதனால் மழையின் அளவும் அதிகரிக்கும் இதனால் வெப்ப மயமாதலை தடுக்கலாம்
உயர்வான வாழ்வுக்கு உருவாக்க வேண்டும் தூய்மையை , அதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாகமுடியும்
பதிவரின் பெயர்---சரஸ்வதி ராசேந்திரன்
வயது ---- 70
புகைப்படம் --மேலே
மின்னஞ்சல் -----sathira mannai@ gmail .com
செல் ------ 9445789388
வலைப்பதிவர் திரு விழா வில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தர்ப்பட்டு விட்டது .
வலைப்பக்கத்தைதவிர மற்ற விவரங்களை வெளியிட வேண்டாம்