சனி, 11 மார்ச், 2023

தண்மழை தலையாகுக

 தண்மழை தலையாகுக

(எட்டுத்தொகை நூலில் ஒன்றான நல்ல. குறுந்தொகை நூலின்
378வது பாடல். _ பாடுபொருள்)
பொத்தி வளர்த்தவள் பொன்போன்று காத்தவள்
கண்ணின் இமையாக காத்து வைத்தவள்
கணமும் நினையாமல் காதல் வயப்பட்டு
தன்னைக் கொடுத்தவன் பின்னால் சென்றாளே
என்செய்வேன் நானினி முன்னிருக்கும் செவிலியிடம்
தன்னிலை எடுத்துரைத்து கண்கள் கலங்கினாள்
பெத்தவள் மனநிலை வெத்தலையாய் வாடி
பச்சைமண் போலே பெத்தமனசு தவிப்பதை
வாய்விட்டு சொல்ல வளர்த்தவளும் துயருற்றாள்
சென்ற இடம்தேடி சென்றாளே செவிலியும்
எங்கும் காணாது ஏங்கித் தவித்திருக்க
பாலைவழி சென்றதாக பார்த்தவர்கள் சொல்லிட
வளர்த்தவளும் வாடினாள்பெத்தவளிடம் சொல்லி
செவிலியின் சேதியை செவிவழி கேட்டத்தாய்
உய்யும் வழியின்றி உருகித் தவித்தாள்
நயனவிழியாள் பயணம் போகும் வழி
பாலை யென்றால் பாவையவள் நடப்பதெப்படி
வஞ்சியின் பாதங்கள் பஞ்சு போன்றது
வேகும் வெயிலில் வெந்துதான் போகும்
இயக்கிடும் வல்லமை இறைவன்கண் உண்டு
இயக்கிடு இறைவா இன்னல் வாராது
பாலையின் மண்ணெல்லாம் பசுமை ஆகிட
பொழிந்திடு மழையை வழி தோறும்
பைங்கிளிமேல் துன்பம் படராதிருக்க அருள்க
பிதற்றியே புலம்பித் தவித்தாள் பெற்றதாய்
சரஸ்வதிராசேந்திரன்
Comments
Kesavadhas Saraswathi Rajendran இயல்பான சொற்களால் கட்டியக் கவிதையிது!
இதில் சிறப்பு என்ன வெனில் அழைத்துச் சென்றவன் நல்லவனே எனச் சொல்லாமல் சொல்லும் தாயின் வரிகள்: தன்னைக் கொடுத்தவன் பின்னால் சென்றாளே
பைங்கிளி மீது துன்பம் படராதிருக்க பிதற்றிப் புலம்பும் நன்றாயின் வேண்டல் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது!
கவிதை பேரழகு வாழ்த்துகள்!
கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக